மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் : மார்ச் மாதத்தில் என்னென்ன பண்டிகைகள் இருக்கு தெரியுமா

மார்ச் மாதம் கும்ப மாதமும், மீன மாதமும் இணைந்த மாதம். சூரியன் கும்ப ராசியில் 15 நாட்களும், மீன ராசியில் 15 நாட்களும் பயணம் செய்கிறார். இந்த மாதத்தில் மகா சிவராத்திரி விரதம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட பல முக்கிய விஷேச நாட்கள் கொண்டாடப்படுகின்றன.

மார்ச் மாதத்தில் எந்தெந்த நாட்களில் என்னென்ன விஷேச நாட்கள் கடைபிடிக்கப்படுகின்றன என்று தேதி வாரியாக கொடுத்துள்ளோம். உங்கள் டயரியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

  • மார்ச் 2ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சங்கடஹர சதுர்த்தி. அங்காரக சதுர்த்தி இன்றைய தினம் விநாயகரை வழிபட நன்மைகள் நடைபெறும்.
  • மார்ச் 06ஆம் தேதி சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமி, வாஸ்து நாள். வீடு கட்ட வாஸ்து செய்யலாம்.
  • மார்ச் 09ஆம் தேதி ஷட் தில ஏகாதசி பெருமாளை வணங்க நல்ல நாள்
  • மார்ச் 11 வியாழக்கிழமை மகா சிவராத்திரி விரதம். சிவ ஆலயம் சென்று வணங்க நன்மைகள் நடைபெறும். சிவ ஆலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் பங்கேற்கலாம்.
  • மார்ச் 13 சனிக்கிழமை சனி அமாவாசை போதாயண அமாவாசை முன்னோர்கள் வழிபாடு செய்ய நல்ல நாள். குல தெய்வ கோவிலுக்கு சென்று வணங்கலாம்.
  • மார்ச் 14 ஞாயிற்றுக் கிழமை சந்திர தரிசனம், காரடையான் நோன்பு. சுமங்கலி விரதம் இருந்து வணங்க நன்மைகள் நடைபெறும்.
  • மார்ச் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பானு சப்தமி, துர்காஷ்டமி அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் இந்த நாளில் சூரியனை வணங்கலாம் நன்மைகள் நடைபெறும்.
  • மார்ச் 28ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை பங்குனி உத்திரம் ஹோலிப்பண்டிகை கொண்டாட்டம்.
%d bloggers like this: