முரண்பிடிக்கும் தேமுதிக-‘ ராஜ்யசபா சீட்’ மூக்கனாங் கயிறுடன் விஜயகாந்த் வீட்டுக்கு போகும் அதிமுக குழு

அதிக தொகுதிகள் கேட்டு முரண்டு பிடிக்கும் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருகிறோம் என வாக்குறுதி கொடுத்து ஜவ்வாக இழுக்கும் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என முடிவு செய்துள்ளதாம் அதிமுக.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமகவை விட பாஜகவும் தேமுதிகவும் கூடுதல் தொகுதிகள் கேட்கின்றன.

பாஜகவை பொறுத்தவரையில் அமமுகவுக்கும் சேர்த்து தொகுதிகள் வாங்க முயற்சிக்கிறது.
ஆனால் தேமுதிகவோ நாங்களே பெரிய கட்சி அதனால் எங்களுக்குதான் அதிக தொகுதிகள் வேண்டும் என்கிறது. அதிமுகவிடம் தொடக்கத்தில் 41 தொகுதிகளைக் கேட்டது தேமுதிக.

தேமுதிக டிமாண்ட்

ஆனால் பாமகவுக்கு 23 தொகுதிகள்தான் என்கிற போது 25 தொகுதிகளாக தர வேண்டும் என்கிறது தேமுதிக. அதிமுகவோ 15 முதல் 18 தொகுதிகள் தருகிறோம் என்கிறது. இதனால்தான் தனித்து போட்டியிடுவோம் என்கிற சிக்னலை வெளிப்படுத்தியது தேமுதிக.

தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்

இப்படி முரண்டுபிடிக்கும் தேமுதிகவை வழிக்கு கொண்டுவருவதற்கு இருக்கும் ஒரே ஆயுதம் ராஜ்யசபா சீட்தான். இதற்குதான் இலவு காத்த கிளியாக பல ஆண்டுகளாக தேமுதிக தேவுடு காத்து கொண்டிருக்கிறது. இப்போது தேமுதிகவை கட்டுப்படுத்தி வைக்க இந்த ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு செய்துள்ளதாம் அதிமுக.

விஜயகாந்த் வீட்டில் பேச்சுவார்த்தை

சென்னையில் இன்று விஜயகாந்த் இல்லத்தில் அதிமுக குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் போது ஒரு ராஜ்யசபா சீட் தருகிறோம். அதேபோல் நாங்க கொடுக்கிற தொகுதிகளை வாங்கி கொள்ளுங்கள் என பேசப் போகிறார்களாம் அதிமுக.

பாமக,தேமுதிகவை சமாளித்த அதிமுக

பாமகவை வன்னியர்களுக்கு 10.5% உள்இடஒதுக்கீடு மூலம் 23 தொகுதிகளுக்கு ஒப்புக் கொள்ள வைத்தது அதிமுக. அதே பாணி ராஜதந்திரத்தில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து அடக்கி வைக்கப் போகிறது அதிமுக. பாஜகவைத்தான் என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறது அதிமுக தரப்பு.

%d bloggers like this: