“ரூட் கிளியர்”.. தைலாபுரத்தில் இருந்து ஒரு நிம்மதி பெருமூச்சு.. காரணம் சாட்சாத் விஜயகாந்த்..!

தேமுதிக தனித்து போட்டி முடிவால் பாமக நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளது
தேமுதிக தனித்து போட்டி முடிவால் பாமக நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளது

ஒருவழியாக பாமகவுக்கு ரூட் கிளியர் ஆகி உள்ளது.. நிம்மதி பெருமூச்சு சத்தம் தைலாபுரத்தில் இருந்து கேட்க தொடங்கி உள்ளது.. இதற்கு காரணம் விஜயகாந்த்தான்..!

“யாருடனும் கூட்டணி இல்லை, மக்களுடனும், தெய்வத்துடனுடம்தான் கூட்டணி என்று விஜயகாந்த் ஆரம்பத்தில் சொன்னார்..

இந்த பேச்சு அதிமுக, அதிமுகவைவிட அதிக கலக்கத்தை தந்தது பாமகவுக்குதான். கிட்டத்தட்ட பாமகவுக்கு மாற்றாகவே தேமுதிகவை கருதினார்கள் மக்கள்.. அதற்கேற்றார்போல, பாமக செல்வாக்கு பெற்ற விருதாச்சலத்திலேயே போட்டியிட்டு வெற்றியும் பெற்றார் விஜயகாந்த்.

ரஜினி

பாபா படத்தில், ரஜினியுடன் பாமகவுக்கு அன்று ஏற்பட்ட மோதல், விஜயகாந்த் vs பாமக மோதலாகவும்
வெடித்ததை மறுக்க முடியாது.. இதற்கு பிறகுதான், விருதாச்சலத்தை குறி வைத்து தூக்கினார் விஜயகாந்த்.. அதுமட்டுமல்ல, பாமகவைவிட அரசியல் அரங்கில் தேமுதிகவின் கட்சி வளர்ச்சி பெற்றது.. எதிர்க்கட்சியாக தன்னை வளர்த்து கொண்டதே இதற்கு சாட்சி. 1989-ல் ஆரம்பிக்கப்பட்ட பாமக இப்படி ஒரு சாதனையையும், வளர்ச்சியையும் பெறவில்லை என்றே சொல்லலாம்.. இப்படித்தான் தேமுதிக vS பாமக என்று உருமாற ஆரம்பித்தது.

பாமக

பாமகவின் பலம் என்று பார்த்தால், திருவள்ளூரில் இருந்து காஞ்சிபுரம் வரை, வேலூரில் இருந்து திருவண்ணாமலை வரை விழுப்புரத்திலிருந்து கடலூர் வரைஎன கொள்ளலாம்.. ஆனால், தேமுதிகவின் பலம் கடலூரில் இருக்கிறது. இதே கடலூரில் பாமகவின் செல்வாக்கு இருந்தாலும்கூட தேமுதிக அதைவிட அதிகமாக இருப்பதை மறுக்க முடியாது.

விஜயகாந்த்

பாமகவுக்கு வடமாவட்டங்களில் உள்ள செல்வாக்கை போலவே விஜயகாந்த்துக்கும் செல்வாக்கு ஓரளவு இருக்கத்தான் செய்கிறது.. வட மாவட்டங்களில் உள்ள 12 நாடாளுமன்ற தொகுதிகளில் பாமகவுக்கு செல்வாக்கு உள்ளதாக கருதப்படுகிறது.. வடமாவட்டங்களோடு சரி, ஆனால், விஜயகாந்துக்கு தென்மண்டலங்களிலும் வாக்குகள் பரவலாக உள்ளதை மறுக்க முடியாது..

உடல்நிலை

ஆனால், சாதீய வாக்குகளே இங்கு அனைத்தையும் தீர்மானிப்பதால்தான் பாமக அதிமுக அல்லது திமுக கூட்டணியில் தவிர்க்க முடியாத கட்சியாக இப்போது வரை உள்ளது. அதற்கேற்றபடி விஜயகாந்த்துக்கும் உடம்பு சரியில்லை.. அந்த கட்சியின் வாக்கு வங்கியோ படுபாதாளத்தில் விழுந்துவிடவும், பாமகவுக்கு இது மேலும் சாதகத்தையே ஏற்படுத்தி வருகிறது..

தேமுதிக

கடந்த தேர்தலில் கூட்டணியில் கடைசியாக வந்து சேர்ந்தது தேமுதிகதான்.. அதற்கு காரணம் பாமகவுடன் போட்டி போட்டு கொண்டு தங்களுக்கும் தொகுதிகள் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததுதான்.. பாஜக மட்டும் இல்லையென்றால், கூட்டணியிலேயே தேமுதிக இடம்பெறாமல் போயிருக்கும்.. இந்த முறையும் அதுபோலவே பிடிவாதத்தை முன்வைத்தார் பிரேமலதா..

டென்ஷன்

போதாக்குறைக்கு வன்னியர் இடஒதுக்கீடு விஷயத்திலும் மாற்று கருத்தை முன்வைத்தார்.. ஆனால் எதையுமே அதிமுக பொருட்படுத்தவில்லை.. பாமகவுடன் தொகுதி, சீட் உள்ளிட்டவற்றை முடித்து கொண்டே தேமுதிக பக்கம் நகர்ந்தது.. பாமக கேட்ட 23 தொகுதிகளில், தேமுதிக செல்வாக்கு பெற்ற, 12 தொகுதிகள் இருக்கவும் அது தேமுதிகவுக்கு மேலும் டென்ஷனை தந்துவிட்டது. இதற்கும் அதிமுக செவிசாய்க்காததால்தான், இன்று தனித்து போட்டி என்ற முடிவை தேமுதிக எடுத்துள்ளது. இப்படி ஒரு முடிவை தேமுதிக எடுப்பதற்கு பாமகவும் ஒரு முக்கிய காரணம் என்றாலும், நிம்மதி பெருமூச்சில் உள்ளது தைலாபுரம்..!

%d bloggers like this: