‘e-epic’ கார்டு எனப்படும் ‘இ- வாக்காளர்’ அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?

வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்கப்பட்ட இளம் வாக்காளர்களுக்கு, ‘இ-வாக்காளர்’ அடையாள அட்டை எனப்படும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பெற (e-Epic) என்ற மொபைல் ஆப் மூலம் டவுன்லோடு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் கமிஷன் அறிவிப்பினடி, நேற்றுமுன்தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கு மையங்களிலும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடந்தன. இந்த முகாம்கள் மூலம் வாக்காளர் பெயர் திருத்தம், புதிய வாக்காளராக தங்களை இணைத்துக்கொண்டவர்களுக்கு அடையாள அட்டை கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

இதையடுத்துதான், இவர்களுக்கு ‘இ-எபிக்’ (e-Epic) கார்டு எனப்படும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை கொடுக்கப்பட இருக்கிறது.

இந்த மின்னணு அட்டையை பயன்படுத்தி வரும் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க முடியும்.

எனவே, இதுவரை வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், ஆன்லைனில் விண்ணப்பித்து மின்னணு அட்டையை பெற்று இந்த தேர்தலில் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றலாம். இது தவிர,

தேர்தல் கமிஷன் அறிவித்த 13 வகை ஆவணங்களை பயன்படுத்தியும் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க முடியும். இந்த முறை தேர்தல் கமிஷன் பூத் சிலிப் கொண்டு வாக்களிக்க முடியாது. காரணம், இந்த முறை புகைப்படம் இல்லாத பூத் சிலிப் மட்டுமே வழங்கப்படும்.
13 வகை ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்க முடியும் என்றாலும், ‘இ-எபிக்’ கார்டு பெறுவதே சிறந்த முடிவாக இருக்கும்.

‘e-epic’ கார்டு பெறுவது எப்படி?

* புதிதாக இணைத்துக்கொண்ட வாக்காளர், http://nvsp.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து உள்நுழைய வேண்டும்.

* இணையத்தில் நுழைந்ததும், வாக்காளர் அட்டை எண் அல்லது படிவ எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.

* பின்னர் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும். அதனை சரி பார்த்து உள்ளிட வேண்டும்.

* OTP-யை பயன்படுத்தி, ‘இ- வாக்காளர்’ அடையாள அட்டையை பதிவிறக்கம் என்பதை தேர்வு செய்து தங்களது மின்னணு அட்டையை டவுன்லோடு செய்யலாம்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இதற்காக இரண்டு நாள் முகாம்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து இது போன்ற முகாம்கள் நடக்க வாய்ப்பிருக்கிறதாக கூறப்படுகிறது.

%d bloggers like this: