உங்க வீட்டில் அடிக்கடி சண்டையா?. அப்போ வெள்ளிக்கிழமையில் இத செய்யுங்க. பலன் நிச்சயம்.!!!

உங்கள் வீட்டில் காரணமே இல்லாமல் அடிக்கடி சண்டை நடந்தால் வெள்ளிக்கிழமையில் இந்த மூன்று பொருட்களை எரித்து விடுங்கள் நன்மை கிடைக்கும்.

வீட்டில் சதா சண்டை, சச்சரவு என்று நிகழ்ந்து கொண்டு இருந்தால் வெளியிலிருந்து வீட்டிற்கு வர பலருக்கும் பிடிக்காமல் போய்விடும். வேலை முடிந்து வீடு திரும்பும் கணவருக்கு வீட்டில் வந்து நிம்மதி இல்லை என்றால் வீட்டிற்கு வரும் நேரத்தை

தாமதப்படுத்தி கொள்வார். சதா சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு இடையே சிக்கி தவிக்கும் பிள்ளைகளும் வீட்டில் இருப்பதை வெறுப்பாக நினைக்க ஆரம்பித்து விடுவார்கள்.

இதனால் தேவையில்லாத பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புகள் உருவாகி விடும்.

வீட்டில் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் நிம்மதியாக மனக்கசப்புகள் இன்றி அன்போடு இருக்க இந்த எளிய பரிகாரத்தை செய்து பார்க்கலாம். அதைப்பற்றிய தகவல்களை பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். நாம் வெளியில் என்ன தான் பிரச்சினைகளை அனுதினமும் சந்தித்துக் கொண்டிருந்தாலும் அவற்றை விட அதிகமான மன அழுத்தத்தை கொடுக்கும் பிரச்சனை என்றால் அது வீட்டுப் பிரச்சனையாக தான் இருக்கும்.

வீட்டில் நடக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு தனி தைரியம் வேண்டும். ஊரில் இருப்பவர்களை பிடிக்கவில்லை என்றால் அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு நம் வேலை உண்டு நாம் உண்டு என்று இருந்து விடலாம். ஆனால் வீட்டிற்குள் ஒரு பிரச்சினை என்றால் அவர்களை ஒதுக்கி வைக்கவும் முடியாமல், அந்தப் பிரச்சினையை எதிர் கொள்ளவும் முடியாமல் மதில் மேல் நிற்கும் பூனைபோல் விழி பிதுங்கி நிற்போம். வீட்டில் இருவர் சண்டை போட்டால் மீதி இருக்கும் நபர்களுக்கு அந்த வீட்டில் இருக்கவே பிடிக்காமல் போய்விடும்.

அது எந்த உறவாக இருந்தாலும் சரி, அப்படியான ஒரு மனக்கசப்பை ஒருமுறை ஏற்படுத்திக் கொண்டால் அவர்களுடைய மன நிலையிலும் பாதிப்புகள் ஏற்படும். வெளியில் தான் ஆயிரம் பிரச்சனை என்றால் வீட்டிற்கு வந்தும் நிம்மதி இல்லையே! ஒருவாய் சாப்பாடு கூட மனநிம்மதியுடன் சாப்பிட முடியாவிட்டால் எதற்காக இந்த வீட்டில் இருக்கிறோம்? இப்படி பிரச்சினைகள் இருக்கும் பொழுது தூக்கமும் சரியாக வராமல் போய்விடும்.

பெற்றோர்களுக்கு இடையே சண்டை நடந்தால் பிள்ளைகளுக்கும் கணவன் மனைவிக்கு இடையே சண்டை நடந்தால் அந்த இருவருக்கும் மன அழுத்தம் என்கிற நோய் வந்துவிடுகிறது. இவற்றை நீடிக்க விட்டால் பெரும் பிரச்சனை தான். இப்படி வீட்டில் நிம்மதி இல்லாமல் இருப்பவர்கள் வெள்ளிக்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் நல்ல ஒரு மாற்றத்தை உணரலாம்.

அதனால் தான் இதனை ஹோமங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று வீட்டின் நடுப்பகுதியில் தூபக்கால் அல்லது மண்சட்டி வைத்துக் கொண்டு அதில் நாலைந்து தர்ப்பைப் புல்லை போட்டுக் கொள்ளுங்கள். தர்ப்பை புல் எரிவதற்கு கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். திருஷ்டி நீங்க கல் உப்பும், கடுகும் முதன்மையானதாக கருதப்படுகிறது.

இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து எரியும் நெருப்பில் மிக சிறிய அளவில் போட்டுக் கொள்ளுங்கள். தர்ப்பை உடன் இவைகள் எரியும் பொழுது நம் கண்ணுக்கு தெரியாமல் நம்மை சுற்றியிருக்கும் நெகட்டிவ் எனர்ஜிகள் கிரகிக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிடும். அதன் பின் வீட்டில் நிச்சயம் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்து இருக்கும். தேவையில்லாத சண்டை, சச்சரவுகள் கண்டிப்பாக வரவே வராது. குழந்தைகளும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.

%d bloggers like this: