எல்லாம் மிதப்பில் இருக்காங்க.. மேலிடத்திற்கு சென்ற ரகசிய ரிப்போர்ட்.. களமிறக்கப்படும் “மாஸ்டர்கள்”!

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் திமுக நிர்வாகிகள் சிலர் சில முக்கியமான தொகுதிகளில் தேர்தல் பணிகளை செய்வதே இல்லையாம்.. அதிமுகவிற்கு இது தொடர்பாக மெசேஜ் ஒன்று சென்று இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன!

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வென்றுவிடும்.. 160+ இடங்களை கூட திமுக கூட்டணி பிடிக்கும் என்றெல்லாம் கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அதிலும் வடஇந்திய ஊடகங்கள் பல திமுக கண்டிப்பாக வெற்றிபெற்றுவிடும் என்று உறுதியாக கணிப்புகளை வெளியிட்டுள்ளன.

திமுக தரப்பும் இந்த வெற்றியை உறுதியாக நம்புகிறது. நமக்கு கண்டிப்பாக அறுதிபெரும்பான்மை கிடைக்கும் என்று திமுக உறுதியாக நம்பிக்கொண்டு இருக்கிறது.

தலைமை நிர்வாகிகள்

திமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் சிலரும்.. மாவட்டங்களில் முக்கிய பணிகளை செய்யும் சிலரும் வெற்றி உறுதியாகிவிட்டதாக நம்புகிறார்களாம். இதனால் சில இடங்களில் தேர்தல் பணிகளுக்கு ‘ஹால்ட்’ அடித்துவிட்டதாகவும் தகவல்கள் வருகின்றன..இது தொடர்பாக பேசிய உடன்பிறப்பு ஒருவர்.. திமுக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது.
ஆனால் இதற்காக தேர்தல் பணிகளை சிலர் புறக்கணிக்கிறார்கள். ஸ்டாலின் வந்து பிரச்சாரம் செய்கிறார். அவர் போன பின் யாருமே தேர்தல் பணிகளை செய்வது இல்லை . ஸ்டாலின் எல்லா தெருவுக்கும் போய் ஓட்டு கேட்பது சாத்தியம் இல்லை . சில நிர்வாகிகள் மொத்தமாக வெற்றி உறுதியாகிவிட்டது போல செயல்படுவதுதான் அதிர்ச்சி அளிப்பதாக குமுறுகிறார்கள்.

அதிமுக
திமுகவினர் இப்படி உற்சாகத்தில் தேர்தல் பணிகளை செய்யாமல் இருப்பது குறித்து அதிமுக மேலிடத்திற்கும் ரிப்போர்ட் சென்று இருக்கிறதாம். திமுகவினர் சிலர் மிதப்பில் இருக்கிறார்கள். அதிமுக கொஞ்சம் இறங்கி வேலை பார்த்தால் இழுபறியில் இருக்கும் தொகுதிகளை வென்றுவிடலாம் என்று ரிப்போர்ட் சென்றுள்ளது. அதிமுக – திமுக இடையே 20-25 தொகுதிகளில் கடும் போட்டி நிலவும்.

கடும் போட்டி
இதனால் இந்த தொகுதிகளை எப்படியாவது கைப்பற்றும் எண்ணத்தில் அதிமுக இருக்கிறதாம். இந்த தொகுதிகளை பிடித்தால் ஆட்சியை தக்க வைக்க முடியும் என்று அதிமுக நினைக்கிறது. இதற்காக பல அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளை அதிமுக களத்திற்கு அனுப்பி உள்ளது. நேரடியாக தேர்தலில் நிற்காமல்.. முடிவுகளை மாற்றும் நிர்வாகிகள் பலர் அதிமுகவில் உள்ளனர்.

நிர்வாகிகள்
இப்படிப்பட்ட தேர்தல் மாஸ்டர்களை தொகுதிகளில் அதிமுக களமிறக்கி அவர்களுக்கு வாக்குகளை கவர் செய்யும் டாஸ்க் கொடுத்துள்ளதாம். இதனால் ஸ்விங் தொகுதிகளை அதிமுக குறி வைக்க தொடங்கி உள்ளது. 2016ல் இதேபோல்தான் வெற்றிபெற வேண்டிய தொகுதிகளை திமுக கடைசி கட்டத்தில் வேலையே செய்யாமல் திமுக கோட்டை விட்டு .. தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது

%d bloggers like this: