கணவர்களே. உங்க மனைவிக்காக இத கொஞ்சம் படிச்சிட்டு போங்க. “தாய்க்குப்பின் தாரமே”..!!!

இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவி தாம்பத்திய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள்.

ஒரு கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை எழுதுகிறார்.

எழுபத்தைந்து வயதில். ஆதரவு இன்றி நிக்குது மனசு..

நாற்பத்தைந்து வருடம். ஒரு நாளாவது அவளை கொண்டாடியிருக்கலாம்.

என் கோபத்தை தள்ளுபடி செய்து ஒரு நாளாவது அவளை கொண்டாடியிருக்கலாம்..

அவள் சமையலை ஒருமுறையாவது நான் மனம் நிறைய பாராட்டி இருக்கலாம்

ஒரு நாளாவது நான் சமையல் செய்து அவளுக்கு ஊட்டி இருக்கலாம்.

ஒரு நாளாவது அவளுக்கு பதில், நான் அவளது துணியையும் சேர்த்து துவைத்து இருக்கலாம்.

ஒரு நாளாவது டிவியையும், மொபைலையும் அணைத்து விட்டு அவளைக் கொஞ்சி இருக்கலாம்.

ஒரு நாளாவது வேலைத்தளத்தில் கோபத்தையும் எரிச்சலையும் அங்கேயே விட்டுவிட்டு வந்து இருக்கலாம்.

ஒரு நாளாவது என் விடுமுறை நாட்களில் அவளை வெளியே அழைத்துச் சென்று இருக்கலாம்

ஊர் ஊராய் சுற்றி அவளை உற்சாகப்படுத்தி இருக்கலாம் .

அவள் விரும்பி கேட்காத போதும்.. ஒரு புடவை வாங்கிக் கொடுத்து இருக்கலாம்.

ஒரு மாசமாவது என் முழு சம்பள பணத்தை அவளிடமே கொடுத்து இருக்கலாம்.

ஒரு நாளாவது காலையில் அலாரத்தை கொஞ்சம் அனைத்து வைத்து அவளை தூங்க விட்டிருக்கலாம்.

நீ சாப்பிட்டியா என்று அவளை ஒரு நாளாவது கேட்டு இருக்கலாம்.

நீயும் வா என்னுடன் வந்து சாப்பிடு என்று ஒரு நாளாவது சொல்லியிருக்கலாம்..

அவள் உடல்நலத்தைப் பற்றி ஒருமுறையாவது விசாரித்து இருக்கலாம்.

அவள் தன்னை கவனிப்பதை விடுத்து பிள்ளைகளை மட்டும் கவனிப்பதை கண்டு நான் கொஞ்சம் அவளை கவனித்து இருக்கலாம்.

அவள் நோயில் விழுந்தபோது நான் கடன் பட்டேனும் அவளை காப்பாற்றி இருக்கலாம்.

என் தாயே! தாரமே!-நீ என்னுடன் இருந்த போது நான் கம்பீரமாய் வாழ்ந்தேன்..

நீ என்னை விட்டுப் போனதும் நான் பலமுறை கால் தடுக்கி விழுகிறேன்.

என்னை தூக்கி விடவும் மூத்தவனுக்கு நேரமில்லை.

தேனீர் எதாவது போட்டுத்தர கேட்டால் இளையவனுக்கு சினம் வருது ..

என் மனைவியே உன்னை நான் தினமும் கொண்டாடி இருக்க வேண்டும்..

நான் தவறுகள் இழைத்ததற்கு என்னை நீ மன்னித்துவிடு.

மூச்சு இழந்த-உன் புகைப்படத்துக்கு தினம் தினம் முத்தமிட்டு உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.

மனைவியே! என்னை மன்னித்துவிடு.

மீண்டும் ஒரு பிறப்பு இருக்கும் என்றால் நீயே என் மனைவியாய் வந்துவிடு.. நான் உன்னை கொண்டாட வேண்டும்..

75 வயதில் இந்த நிலை யாருக்கும் வராமல் இருக்க.

உங்கள் மனைவியை தினமும் மீண்டும் நேசியுங்கள்.
வாழ்க்கை வசந்தமாகும்.

தாய்க்குப்பின் தாரம் என்பதை மறந்து விடாதீர்கள்.

%d bloggers like this: