சூப்பர் பிசியாக இருந்தாலும் நமக்காக செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

அலுவலகம், வீட்டு வேலை என பல காரணங்களால் நம்மால் நம்மை சரிவர கவனித்துக்கொள்ள முடிவதில்லை. அதிலும் பெண்களின் நிலை மிகவும் மோசம். கணவன், குழந்தைக்காகப் பார்த்துச் பார்த்து செய்பவர்கள் தங்கள் நலனைக் கண்டுகொள்வதே இல்லை. என்னதான் பயங்கரமான பிசியாக இருந்தாலும் நம்மை நாம் பராமரிக்க செய்ய வேண்டிய ஐந்து விஷயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்!

ஓய்வு

எப்போதும் வேலை பிசியில் இருக்கிறோம். சாப்பிட நேரமின்றி அவசர அவசரமாக சாப்பிட்டு அல்லது அனைவரும் சாப்பிடும் வரை காத்திருந்து மிச்சம் மீதியை சாப்பிட்டு என்று ஆண், பெண் இருவரின் வாழ்க்கையும் ஓடிக்கொண்டே இருக்கிறது. கடினமான வேலை இருந்தாலும் சரி ஒன்று. ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு முறை 10 – 15 நிமிடம் ஓய்வெடுக்க மறக்க வேண்டாம்.

இது உங்கள் உடலை, மனதை புத்துணர்வாக்க உதவும்.

தூக்கம்

எக்காரணத்தைக் கொண்டும் தூக்கத்தில் காம்ப்ரமைஸ் செய்ய வேண்டாம். தினமும் 10 மணிக்கு தூங்கச் செல்பவர்கள் என்றால் அதை மீறக் கூடாது. எட்டு மணி நேர தூக்கம். அதிகாலையில் எழுந்திருப்பது என்று வழக்கத்தை மாற்றவே கூடாது. இப்படி செய்யும் போது ஆழ்நிலை தூக்கம் வரும். தூக்கமின்மையால் வரக்கூடிய மன அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் வராது.

அழகாக இருங்கள்

கணவன் / மனைவி, குழந்தைகள் என்று ஆன பிறகு தங்கள் வெளிப்புற அழகு பற்றி பலரும் கவலைப்படுவது இல்லை. வெளிப்புற நம்முடைய அழகிய தோற்றம்தான் நம்முடைய கான்ஃபிடன்ஸ் நிலையை அதிகரிக்கச் செய்யும். இந்த தன்னம்பிக்கை நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் சிறப்பானதாக மாற்றும். குழந்தைகள் கூட நம்முடைய அழகை நினைத்து பெருமைப்படுவார்கள்.

திட்டமிடுங்கள்

இன்றைக்கு என்ன செய்ய வேண்டும், எதை முதலில் செய்ய வேண்டும், எதை பொறுமையாகச் செய்யலாம் என அன்றைய நாளுக்கான பணிகளைத் திட்டமிட வேண்டும். இதன் மூலம் கடைசி நேரத்தில் வேலையை இழுத்துப் போட்டு செய்யும் மன அழுத்தம் தவிர்க்கப்படும்.

உதவி கேட்கத் தயங்க வேண்டாம்

எல்லா காரியத்தையும் தான்தான் செய்ய வேண்டும், அப்போதுதான் எல்லாம் சரியாக இருக்கும் என்று எண்ண வேண்டாம். நம்மால் முடியாத சூழலில் துணைவரின் உதவியை நாடலாம்.

அனைத்துக்கும் மேலாக ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுங்கள். தினமும் இரண்டு காய்கறி, பழங்களை சேர்ப்பது என்று உணவை திட்டமிடுங்கள். போதுமான அளவு தண்ணீர் அருந்துங்கள். தீவிர உடற்பயிற்சி செய்யாவிட்டாலும் பரவாயில்லை எளிய நடைபயிற்சியையாவது செய்யுங்கள். இவை எல்லாம் உங்ளை ஆரோக்கியமான, வெற்றிகரமான மனிதராக மாற்றும்!

%d bloggers like this: