ஏடிஎம் கார்டு – இவற்றை தெரிந்து கொள்வது மிக முக்கியம்!

ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால், அதனை பிளாக் செய்வதற்கும், புதிய ஏடிஎம் கார்டு பெறுவதற்கும் எஸ்பிஐ வங்கி எளிய வழிமுறைகளை அறிவித்துள்ளது.

அதன்படி, எஸ்எம்எஸ் மூலமாக ஏடிஎம் கார்டை பிளாக் செய்ய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து “BLOCK XXXX” என டைப் செய்து 567676 க்கு எஸ்எம்எஸ் செய்ய வேண்டும். XXXX என்பது உங்கள் கார்டின் கடைசி நான்கு இலக்க எண்கள்.

எஸ்பிஐயின் 24 * 7 ஹெல்ப்லைன் எண்கள் மூலமாகவும் கார்டை பிளாக் செய்ய முடியும். 1800 11 2211, 1800 425 3800 ஆகிய டோல் ஃப்ரீ எண்கள் மூலமாகவும் அல்லது 080 2659 9990 என்ற கட்டண எண் மூலமாகவும் தொடர்பு கொண்டு கார்டை பிளாக் செய்யலாம்.

எஸ்பிஐ யோனோ ஆப் மூலமாகவும் கார்டை பிளாக் செய்ய முடியும். ஆப்பில் உள்நுழைந்து Service Requset எனும் ஆப்ஷனை தேர்வு செய்து Block ATM/Debit Card-ஐ கிளிக் செய்ய வேண்டும். பின்னர் Passward-ஐ கொடுத்து டெபிட் கார்டு தொடர்புடைய கணக்கைத் தேர்வு செய்யவும்.

பின்னர் ‘அட்டை எண்’ மற்றும் ‘அட்டையை பிளாக் செய்வதற்கான காரணம்’ ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் பிளாக் செய்யலாம்.

ஆன்லைன் பேங்கிங் மூலமாக கார்டை பிளாக் செய்ய, http://www.onlinesbi.com என்ற இணைய முகவரிக்குள் சென்று ஏடிஎம் கார்டு சேவைகள் என்ற பகுதிக்கு சென்று ஏடிஎம் கார்டு பிளாக் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அப்போது ஓடிபி ஒன்று அனுப்பப்படும். அதை உள்ளிடும் போது டிக்கெட் எண் காண்பிக்கப்படும்,

இதே வழிமுறையில் இணைய முகவரிக்கு சென்று புது கார்டை கோரலாம். பதிவு செய்த ஒரு வாரத்தில் கார்டு உங்களுக்கு கிடைக்கும். யோனோ ஆப் மூலமாகவும் கார்டு அப்ளே செய்ய முடியும்.

%d bloggers like this: