பெண்களே…! நீங்கள் வாங்கும் காய்கறிகள் வாடாமல் இருக்க வேண்டுமா…? இதோ சூப்பர் டிப்ஸ்…!

நமது வீடுகளில் பெண்கள் சமையல் செய்வதற்கு வாங்கும் காய்கறிகள் வாடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.

இன்று நமது வீடுகளில் பெண்கள் சமையல் செய்வதற்கு

சில்லறையாக காய்கறிகளை வாங்குவதை விட்டுவிட்டு, தற்போது மொத்தமாக வாங்கி குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுகின்றனர். இவ்வாறு வைத்தாலும், ஒரு குறிப்பிட்ட நாளில் காய்கறிகள் வாடி போய் விடுகிறது. தற்போது இந்த பதிவில் காய்கறிகள் வாடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
இலைகள்

கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, வாழைத்தண்டு, கீரைகள் வாடி போகாமல் இருக்க, அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்க வேண்டும்.

பச்சை பட்டாணி

உரித்த பச்சை பட்டாணியை உப்பு சேர்த்து கொதிக்கும் நீரில் போட்டு, ஒரு நொடியில் எடுத்து, வெளியில் வைத்து தண்ணீர் காய்ந்ததும், காற்று புகாத பிளாஸ்டிக் கவரில் போட்டு பிரீஸரில் வைத்தால், 6 மாதங்கள் வரை கேட்டு போகாமல் இருக்கும்.
கத்தரிக்காய்

கத்தரிக்காய் வாடிப் போகாமல் இருக்க, அதை ஹாட் பாக்சில் வைத்து மூடி வைத்தால், காயாமல் அப்படியே இருக்கும்.
எலுமிச்சை

எலுமிச்சை பழத்தின் பாதியை பயன்படுத்தி விட்டு, மீதியை அலுமினிய கவரில் சுற்றி, பிரிட்ஜில் வைத்தால் கெட்டு போகாமல் அப்படியே இருக்கும்.
காளான்

காளானை பிளாஸ்டிக் கவரில் போட்டு வைக்காமல், பேப்பரை சுற்றி வைத்தால், நீயெந்த நேரத்திற்கு ஃபிரஷாக இருக்கும்.

%d bloggers like this: