மூட்டு வலிக்கு வேட்டு வைக்க ,இதை பால்ல போட்டு சாப்பிடுங்க.

இன்று நம் உடலில் பல பிரச்சனைகள் கால்சியம் குறைபாட்டால் தான் ஏற்படுகிறது. கால்சியம் குறைபாட்டை நீக்கி எப்போதுமே புத்துணர்ச்சியாக உடலில் எங்கும் வலியில்லாமல் சுறுசுறுப்பாக இருப்பதற்கு எலும்புகளை வலுப்படுத்துவதற்கு இதை செய்து சாப்பிடுங்கள்

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து 4 டேபிள் ஸ்பூன் அளவு கருப்பு எள்ளை போட்டு, பொரியும் அளவிற்கு வறுத்துக்கொள்ளுங்கள். உடனடியாக அதை தனியாக ஒரு தட்டில் மாற்றி ஆற வைத்துக் கொள்ளுங்கள். இந்த எள்ளை மிக்ஸி ஜாரில் போட்டு, இதனோடு பாதாம் பருப்பு 10, முந்திரி பருப்பு 10, கல்கண்டு இரண்டு கட்டிகள், ஏலக்காய் வாசம் பிடித்தவர்கள் 4 ஏலக்காய் சேர்த்துக்கொள்ளலாம். எல்லாவற்றையும் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

மிக்ஸியில் அரைத்த உடனே இந்த பவுடர் கொஞ்சம் சூடாக இருக்கும்.

கொஞ்சம் ஈரமில்லாத தட்டில் கொட்டி ஆற வைத்த பின்பு, காற்றுப்புகாத கண்ணாடி டப்பாவில் இந்த பவுடரை சேகரித்து வைத்துக் கொண்டால், ஒரு மாதத்திற்கு கெட்டுப்போகாமல் இருக்கும். முடிந்தால் பசும்பால் கிடைத்தால் அதை வாங்கி சூடுபடுத்தி வெதுவெதுப்பாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவு இந்த பவுடரையும் சேர்த்து கலக்கிக் கொள்ளுங்கள். இனிப்பு சுவைக்கு கட்டாயம் வெள்ளை சர்க்கரை சேர்க்கக்கூடாது. நாட்டு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம். (பசும்பால் கிடைக்கவில்லை என்றால் பாக்கெட் பாலில் கலந்து கொடுக்கலாம்.) இந்த பாலைக் குடித்து விட்டு உடனடியாக தூங்க செல்ல வேண்டாம். முடிந்தவரை பகல் நேரத்தில் இந்த பாலை குடியுங்கள். பாலைக் குடித்து விட்டு 1 மணி நேரம் கழித்து தான் படுக்க வேண்டும். உங்களுக்கு உடல் சோர்வு, மூட்டுவலி, கழுத்துவலி, உடல் நடுக்கம், போன்ற பிரச்சனைகள் இருந்தால் தொடர்ந்து 40 நாட்கள், தொடர்ந்து 1 டம்ளர் பாலில், 1 ஸ்பூன் இந்த பவுடரைக் கலந்து குடித்து வாருங்கள் எல்லா வலியும் பறந்து போகும் .

%d bloggers like this: