இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க. இந்த ஒரு காய் போதும். நல்ல ரிசல்ட் தரும்..!!

கோடைகாலத்திற்கு காய்கறிகளின் சத்துக்கள் அதிகம் தேவை நமக்கு. அதில் சுரைக்காயின் பலன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..

நம் உடலுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்க கூடிய பெரிய பங்கு காய்கறிகளுக்குத்தான் இருக்கிறது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிமானம் ஆகா கூடியவை.

கிராமத்தில் அனைவரும் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டு சமைத்து உண்பார்கள். அதில் எந்த வித கெமிக்கல்ஸ் இருக்க வாய்ப்பில்லை. அவற்றிற்கு சேர்க்க கூடிய உரமும் தீமை அளிக்காது.

அதில் ஒன்றான சுரைக்காயின் நன்மை பற்றி தெரிந்து கொள்ளுவோம்..

சுரைக்காய் கிராமங்களில் பல வீடுகளின் கூரைகளின் மீது படர்ந்திருக்கும்.

அழகான வெள்ளை பூக்கள், குடுவை போன்ற அமைப்பு, அவை கொடியில் சுற்றி படர்ந்திருக்கும் , அழகே தனி.

சுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன்களை கொண்டவையாகும்.

உடலில் ஏற்படுத்தும் நன்மைகள்:

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
குடல் புண்ணை ஆற்றும்.
மலச்சிக்கலைப் போக்கும்
சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
உடலை வலுப்படுத்தும்.
பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும்.
மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.
சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும். சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.

இவற்றின் இலைகளை நீர்விட்டு ஊறவைத்து, அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொடுக்கலாம். ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

பித்தத்தைக் குறைக்க:

உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது.

உடல் சூடு நீங்க:

கோடை காலத்தில் உடலில் அதிகம் சூடு ஏற்படும். இதனால் உடலானது பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க கூடும். இதனால்தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது.

சிறுநீர் பெருக:

நம் உடம்பில் தேவையில்லாத கெட்ட நீர்கள் அதாவது வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக செல்ல கூடியவை. இரத்தத்தில் இருக்க கூடிய ரசாயன தாதுக்களை சுரைக்காய் சாப்பிடுவதன் மூலம் வெளியேற்ற உதவி புரிகிறது.

சிறந்த மருந்தாக சுரைக்காய் செயல்படும். சில நேரங்களில் கெட்ட நீர்கள் வெளியேற்ற படாமல் உடலிலே தங்கிவிடலாம். அதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட கூடிய வாய்ப்பு இருக்கிறது.அதற்கு தான் சுரைக்காய் சாப்பிடலாமே.

சர்க்கரை அளவை குறைக்க:

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஆரோக்கியமான காய்கறியாக கருதப்படுகிறது. சுரைக்காய் இரத்த சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின் அளவைப் பராமரிக்க உதவும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சுரைக்காயை எடுத்தால், இரத்த சர்க்கரை அளவு குறைவதைக் காணலாம்.

%d bloggers like this: