மீன் குழம்பு சாப்பிட்ட பிறகு.. பால் குடித்தால் என்ன நடக்கும்.? இதோ கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க.!!!

மீன் சாப்பிட்ட பிறகு பால் குடிப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

பால் குடிப்பதற்கு முன்பும் பின்பும் எந்த உணவையும் உட்கொள்ளக்கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் பழைய கோட்பாடுகளின்படி பாலுக்கு முன்பு அல்லது பின்பு எந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது தெரிகிறது. ஆனால் இதை வைத்து மட்டும் நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. எனவே இது குறித்து இன்னும் விரிவாக பார்க்கலாம்.

மீன் சாப்பிட்ட பிறகு பால் குடிக்கலாமா? கூடாதா?

மீன் ஒரு அசைவ உணவாகும். அதேசமயம் விலங்குகளிலிருந்து பால் உற்பத்தி செய்யப்பட்டாலும் அது சைவமாக கருதப்படுகிறது.

ஒரு தத்துவம் என்பது ஒவ்வொரு இடத்திலும் மாறுபடுகிறது.

மீன் மற்றும் பால் இரண்டையும் சேர்த்து உட்கொள்வதால் ரத்தத்தில் ஒரு வேதியல் எதிர்வினையை ஏற்படுத்தும். இது லூகோடெர்மா என்னும் நோய்க்கு வழிவகுக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பால் குளிரூட்டும் விளைவுகளை கொண்டது. மீன் வெப்பமூட்டும் விளைவுகளை கொண்டது. எனவே அவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிடும்போது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். மேலும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று கூறபடுகிறது.

பால் சாப்பிட்ட பிறகு மீன் உணவு எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால் நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு புரத உணவுகளை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். எனவே அவை செரிமானமாவதற்கு அதிக நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. எனவே ஜீரண சக்தி உள்ளவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மோசமாக பாதிக்கிறது.

%d bloggers like this: