உறவுகளுக்கு ஏற்படும் வாக்குவாதமும்.. அதை தவிர்க்கும் வழிமுறையும்…

எல்லா நேரத்திலும் சண்டையிடுவது உறவில் மிகவும் கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் பிரச்சனைகள் சரியாக கையாளப்படாவிட்டால் உறவு முடிவுக்கு வரக்கூடும்.உறவில் வாக்குவாதத்தை குறைக்க மற்றும் சமாளிக்க ஆரோக்கியமான வழிகள்….

உளவிலாளர்களின் கூற்றுப்படி உறவுகள் தோல்வியடைய பல காரணங்கள் உள்ளன. இதில் அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிகை, இழப்பு ஆகியவை அடங்கும்.

எல்லா நேரத்திலும் சண்டையிடுவது உறவில் மிகவும் கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் பிரச்சனைகள் சரியாக கையாளப்படாவிட்டால் உறவு முடிவுக்கு வரக்கூடும்.

உறவுகளில் வாக்குவாதம் முற்றிலும் இயல்பானது என்றாலும், மோதலைக் கையாள்வதற்கும், புரிந்துணர்வோடு சண்டையை நிறுத்துவதற்கும் வழிகள் உள்ளன.

வாக்குவாதங்கள் நடைபெறுவது இயல்பானது. ஆனால் அந்த நேரத்தில் கோபத்தை கையாளத் தெரிந்திருக்க வேண்டும். எதிரில் இருப்பவரின் கூற்றுக்கு, உடனடியாக கோபத்தோடு செயல்படாமல் பகுத்தறிவோடு அதை மதிப்பிட வேண்டும். அவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். அமைதியோடும், மரியாதையோடும் அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும்.

வாக்குவாதம் ஏற்படும் நேரங்களில் அமைதியாக யோசித்தால் வாக்குவாதம் சண்டையாக மாறாது.

உணர்ச்சி வசப்பட்ட நிலையில் வாக்குவாதம் செய்வது விளைவுகளை மோசமானதாக்கும். ஏனெனில் அந்த நேரத்தில் நம்மை மீறி தேவையற்ற வார்த்தைகளை உபயோகிக்கவோ, வருத்தப்படக்கூடிய செயலை செய்யவோ வாய்ப்பு உள்ளது. அதனால் பின்னர் வருத்தப்பட நேரிடும். வாக்குவாதம் முற்றும் நிலைக்கு செல்லும் போது நாம் விட்டு கொடுப்பது தேவையற்ற சண்டைகளை தவிர்க்க உதவும்.

தொலைபேசி குறுஞ்செய்திகள் வாயிலாக வாக்குவாதத்தில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் நாம் கூறவரும் கருத்துக்களை குறுஞ்செய்தியில் தவறாக புரிந்து கொள்ள நேரிடும். எனவே முடிந்தவரை தொலைபேசியில் பேசுவதோ அல்லது நேரில் பேசித்தீர்த்து கொள்வதோ தான் சிறந்தது.

சிறிய விஷயங்களை பெரிய பிரச்சனைகளாக பார்ப்பதை தவிர்க்க வேண்டும். தேவையற்ற காரியங்களை விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

%d bloggers like this: