தூது போன துரைமுருகன்! – பரபரக்கும் தி.மு.க

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போட அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. ஆனால், அதற்குத் தேவையான அளவு தடுப்பூசி இன்னும் தமிழகத்துக்கு வந்துசேரவில்லை என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள். தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்

தலைமையில் ஏப்ரல் 27-ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ‘ஊரடங்கு போடப்பட்டால் மட்டுமே கொரோனா தொற்றுப் பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியும்’ என்று அதிகாரிகள் சிலர் கூறியிருக்கிறார்கள். அதற்கு ‘நாம் இப்போது எந்த முடிவையும் எடுக்க முடியாது’ என்று கையைப் பிசைந்திருக்கிறார் ராஜீவ் ரஞ்சன். இந்தச் சூழலில்தான் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தரப்பிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், டி.ஜி.பி திரிபாதி, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய மூவரும் ஆளுநரைச் சந்தித்திருக்கிறார்கள். தமிழகத்தில் ஆக்ஸிஜன் இருப்பு, தடுப்பூசி நிலவரங்கள் மற்றும் நோய்த்தொற்றுப் பணிகளை தலைமைச் செயலாளர், ஆளுநரிடம் விவரித்துள்ளார். அப்போது, ‘மத்திய அரசின் ஆதரவு எப்போதும் தமிழகத்துக்கு இருக்கும்’ என்று பேசிய ஆளுநர், லாக்டெளன் தொடர்பாகவும் சில விஷயங்களைப் பேசினார் என்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: தூது போன துரைமுருகன்! – பரபரக்கும் தி.மு.க
“தி.மு.க-வில் இரண்டாவதாக ஒரு பட்டியல் தயாராகிறதாமே!”

“கொடைக்கானலில் வைத்து முதலில் ஒரு அமைச்சர்கள் பட்டியலை ஸ்டாலின் தயார் செய்திருந்தார். அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள சிலர் வெற்றிபெறுவதே கடினம் என்று சமீபத்தில் அவர் நியமித்த தனி டீம் ஒன்று ரிப்போர்ட் அளித்திருக்கிறதாம். இதனால், இரண்டாவது பட்டியலை தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார் ஸ்டாலின். பட்டியலில் தங்கள் பெயர் இல்லை என்பதை அரசல் புரசலாகக் கேள்விப்பட்ட சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். குறிப்பாக, தென் மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய இன்ஷியல் பிரமுகர் ஒருவர், கடும் அப்செட் என்கிறார்கள். மலையடிவார மாவட்டத்தில் களமிறங்கியிருக்கும் அப்பா, மகன் இருவரில் மகனுக்கு மட்டுமே பதவி என்றும் ஸ்டாலின் முடிவெடுத்திருக்கிறாராம். இதைக் கேள்விப்பட்ட அப்பா… ‘ஐய்யய்யோ’ என்றே அலறிவிட்டாராம்!”

“மீசைக்கார முன்னாள் அமைச்சர் ஒருவரும் அதிருப்தியில் இருக்கிறார் என்கிறார்களே?”

“உண்மைதான். சமீபத்தில் தி.மு.க-வுக்கு வந்து சீட்டையும் பெற்ற தென் மாவட்டத்து முன்னாள் அமைச்சர் ஒருவர், சில தினங்களுக்கு முன்பு ஸ்டாலின் தரப்பை சந்தித்துப் பேசி, அமைச்சர் பதவிக்குச் சம்மதம் வாங்கிவிட்டாராம். இதை அறிந்த அவரது சமூகத்தைச் சேர்ந்த மீசைக்கார முன்னாள் அமைச்சர் கடும் கோபத்தில் இருக்கிறார்” என்ற கழுகாருக்கு சூடான முந்திரி பக்கோடாக்களைத் தட்டில் நிரப்பினோம். பக்கோடாவைச் சுவைத்தபடி, “துரைமுருகன், தூது சென்ற கதையைச் சொல்லவா?” என்றபடி செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: தூது போன துரைமுருகன்! – பரபரக்கும் தி.மு.க
“ஆளும்தரப்புக்கும் தி.மு.க தலைமைத் தரப்புக்கும் இடையே அவ்வப்போது பாலமாக இருப்பது தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன்தான் என்கிறார்கள் அவர்களைப் பற்றி உள்விவரம் அறிந்தவர்கள். ஏற்கெனவே, தன் மருமகள் சங்கீதா கதிர் ஆனந்த் பெயரில் துரைமுருகன் குவாரி எடுத்ததை வெளிப்படையாகச் சொல்லி, துரைமுருகனின் அ.தி.மு.க தொடர்புகளைப் பட்டவர்த்தனமாக போட்டுடைத்தார் அமைச்சர் சி.வி.சண்முகம். இந்தநிலையில்தான் ஆளுங்கட்சியின் நம்பர் ஒன் புள்ளிக்காக, தேர்தலுக்கு முன்பே தன் கட்சித் தலைமையிடம் துரைமுருகன் தூது போன விவகாரம் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.”

“அடேங்கப்பா… என்ன விஷயமாம்?”

“எல்லாம் வழக்கு விவகாரம்தான்… ஒருவேளை தி.மு.க வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்துவிட்டால் அந்த நம்பர் ஒன் புள்ளியின் மீதும், அவரின் மகன் மீதும் வழக்கு எதுவும் பதியக் கூடாது என்பதுதான் டீலாம். அதற்குப் பிரதி உபகாரமாகத்தான் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியை பா.ம.க-வுக்குத் தள்ளிவிட்டு, உதயநிதிக்குக் குடைச்சல் இல்லாமல் அ.தி.மு.க தலைமை பார்த்துக்கொண்டது என்கிறார்கள். இந்த டீலை வெற்றிகரமாக முடித்தது துரைமுருகன்தான் என்கிற விஷயம்தான் இப்போது தி.மு.க-வில் பரபரப்பாகியிருக்கிறது. அதேபோல, ஸ்டெர்லைட் விவகாரத்திலும் முதலில் எதுவும் முடிவெடுக்காமல் ஸ்டாலின் அமைதியாக இருந்தபோது, அவர் முடிவெடுக்க உதவியதும் துரைமுருகன்தான் என்கிறார்கள். இதன் பின்னணியில் இருந்ததும் ஆளுங்கட்சியின் நம்பர் ஒன் பிரமுகர்தானாம். இதை முன்வைத்து, ‘இப்போதே இப்படியென்றால், இனி ஆட்சிக்கு வந்தால் இவர்கள் உறவால் என்னென்ன நடக்குமோ…’ என்று புலம்புகிறார்கள் தி.மு.க நிர்வாகிகள்.”

“தஞ்சாவூர் பக்கம் சலசலப்பு சத்தம் அதிகமாகியிருக்கிறதே!”

“எல்லாம் கல்லணைக் கால்வாய் சலசலப்புதான். வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணுவின் மறைவுக்குப் பிறகு, அவர் வகித்த தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியை, கூடுதல் பொறுப்பாக கவனித்துவருகிறார்

அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம். முக்கிய நிர்வாகிகள் சிலர் அந்தப் பொறுப்புக்குப் போட்டி போட்டும் யாருக்கும் அவர் விட்டுக்கொடுக்கவில்லை. இந்த நிலையில்தான், தற்போது சுமார் 2,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் கல்லணை கால்வாய் புனரமைப்பு பணியில் ஒப்பந்ததாரர்களிடம் ‘பசையாக’ பலனடைந்தார் வைத்திலிங்கம் என்கிறார்கள். இதில் ஏரியா நிர்வாகிகள் யாரையும் அவர் ‘கவனிக்கவில்லை’ என்பதால், கட்சி நிர்வாகிகள் பலரும் இது பற்றி எடப்பாடியிடம் புகார் அளித்துள்ளார்கள். எடப்பாடியும், ‘தேர்தல் முடிவு வரட்டும். அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்’ என்று சமாதானப்படுத்தினாராம்”

மிஸ்டர் கழுகு: தூது போன துரைமுருகன்! – பரபரக்கும் தி.மு.க
என்று கிளம்ப ஆயத்தமான கழுகார்,

“அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சமீபத்தில் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கூட்டத்தைப் போட்டிருக்கிறார். அப்போது தேர்தல் கருத்துக் கணிப்புகள் பற்றிய பேச்சு எழுந்துள்ளது. அதற்கு உதயகுமார், ‘தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளிலும் தி.மு.க-வுக்குச் சாதகம் என்றுதான் சொல்லப்போகிறார்கள். வாக்கு எண்ணிக்கையின்போதும், காலை 11 மணி வரை தி.மு.க-தான் முன்னிலை வகிக்கும். ஆனால், 11 மணிக்குப் மேல் பாருங்கள்… நாம்தான் வெற்றிபெற்று ஆட்சியமைக்கப்போகிறோம். டெல்லியிலிருந்து உறுதியாக இதைச் சொல்லியிருக்கிறார்கள்’ என்றாராம். இதைக் கேட்டு முகவர்கள் விக்கித்துபோய்விட்டார்கள்” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

%d bloggers like this: