நொறுங்கிய மனக்கோட்டை.. இனி “சசி ரிட்டர்ன்ஸ்” எல்லாமே சாத்தியமே இல்லை?.. இபிஎஸ் வைத்த செக் மேட்!

2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கட்சி தோல்வியை தழுவி இருந்தாலும்.. நினைத்ததை விட அந்த கட்சி அதிக இடங்களை வென்று இருக்கிறது. ஒருவகையில் முதல்வர் பழனிசாமிக்கு அரசியல் ரீதியாக இது மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. 155 இடங்களில் தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

76 இடங்களில் அதிமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

பெரும்பாலான இடங்களில் திமுக – அதிமுக இடையே 1000 – 3000 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் இருப்பதால் தேர்தல் முடிவுகளில் சின்ன மாற்றம் ஏற்படலாம். ஆனால் திமுக கூட்டணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

சசிகலா

இந்த தேர்தலில் அதிமுக 60 இடங்களை கூட தாண்டாது என்று கருதப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 90 இடங்கள் வரை அதிமுக வென்றுள்ளது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்றாலும் அதிமுகவிற்கு இது கவுரவமான தோல்விதான். ஆட்சிக்கு எதிராக பெரிய அளவில் அதிருப்தி இல்லாமல், படுதோல்வியை சந்திக்காமல் அதிமுக எதிர்க்கட்சியாக அமர உள்ளது.

எப்படி

அதிமுகவில் ஜெயலலிதா இல்லாமல், கட்சிக்கு உள்ளேயே பல பூசல்கள், 10 வருட ஆட்சிக்கு எதிரான மனநிலை இருந்தும் கூட அக்கட்சி இப்படி கவுரவமான தோல்வியை தழுவி உள்ளது. இதற்கு கண்டிப்பாக ஒரே காரணம் முதல்வர் பழனிச்சாமிதான். கட்சிக்கு உள்ளே அவருக்கு இருக்கும் ஆதரவும், அதிமுகவினர் இடையே அவர் பெற்று இருக்கும் ஆதரவும்தான் இந்த எழுச்சிக்கு காரணம்.

சிக்கல்

இந்த டீசண்ட்டான தோல்வி அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டிப்பாக இமேஜை உயர்த்தும். அதிமுக படுதோல்வியை சந்திக்கும். கட்சியின் கண்ட்ரோல் கண்டிப்பாக மாறும். அரசியலில் இருந்து சசிகலா மீண்டு வருவார் என்றெல்லாம் நிறைய அரசியல் நிபுணர்கள் கணித்து இருந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதை உடைத்து இருக்கிறார்.

கட்சி

சசிகலா இல்லாமலே இத்தனை தொகுதிகளை பெற முடியும் என்று எடப்பாடி பழனிசாமி நிரூபித்து இருக்கிறார். இது சசிகலாவின் ரிட்டனை கேள்விக்குறியாக்கி உள்ளது. தனியாளாக அதிமுகவை இவ்வளவு இடங்களில் வெல்ல வைத்த நிலையில் கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் வாய்ஸ் அதிகரித்து உள்ளது என்றுதான் கூற வேண்டும். ஒருவேளை அதிமுக 60க்கும் குறைவான இடங்களில் தோற்று இருந்தால் கட்சியின் கண்ட்ரோல் மாறலாம்.

நடக்கவில்லை

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அட எதிர்பார்த்ததை விட அதிக இடம் வென்று இருக்காங்களே என்று அதிமுகவினரே பாராட்டும் வகையில்தான் இந்த முடிவுகள் அமைந்து இருக்கிறது. அதிமுகவில் இரட்டை தலைமை, அமமுக பூசல், சசிகலா கட்டுப்பாடு என பல விஷயங்களை இந்த தேர்தல் முடிவு மூலம் எடப்பாடி அடித்து நொறுக்கி உள்ளார்.

சாவல்கள்

பல சவால்களை எதிர்கொண்டு, பல விஷயங்களை தாண்டி, பூசல்களை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி இந்த தேர்தலை எதிர்கொண்டு இருக்கிறார். ஆட்சியை இழந்தாலும் கூட கட்சியை முதல்வர் பழனிச்சாமி தக்க வைத்துள்ளார் என்றுதான் கூற வேண்டும். இனியும் சசிகலா கட்சிக்குள் வருவார்.. கட்சியை கட்டுப்படுத்துவார் என்பதெல்லாம் கொஞ்சம் சந்தேகம்தான்.

%d bloggers like this: