ரகசியம்”.. யார் அந்த 7 பேர்.. ஸ்டாலினுக்கு எட்டிய தகவல்.. சபரீசனுக்கு தந்த “அசைன்மென்ட்”..!

திமுகவின் அபார வெற்றியை 7 அமைச்சர்கள் தடுத்துள்ளதாக கூறப்படுகிறது
இன்னைக்கு திமுக பிரம்மாண்டமான வெற்றியை எட்டி இருக்க வேண்டியது.. ஆனால், அது தடுக்கப்பட்டுள்ளது.. டீசன்ட் வெற்றியை மட்டுமே எட்டி உள்ளது.. இதற்கு என்ன காரணம்? யார் காரணம்?

இந்த விஷயத்தைதான் கையில் எடுத்துள்ளாராம் அக்கட்சி தலைவர் முக ஸ்டாலின்..!

தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகளில், அதிமுக 50-ஐ தாண்டாது என்றார்கள்.. திமுகவுக்கு 170+ என்றுதான் சொன்னார்கள்… ஐபேக் டீம் 200+ என்று சொல்லிவிட்டு போனது..

சொன்னார், சொன்னபடி தரமான சம்பவம் செய்தார்.. சபாஷ் வாங்கிய செந்தில் பாலாஜி..காத்திருக்கிறது சிறப்பு!

ஆனால், அந்த அளவுக்கு திமுகவும் ஆஹா ஓஹோவென வெற்றியை பெறவில்லை.. அதிமுகவும் மோசமான தோல்வியை சந்திக்கவில்லை. திமுக இந்த முறை பல விஷயங்களில் விழிப்பாகவே இருந்தது.. இதற்காகவே இந்த ஒரு வருடம் பலவித முயற்சிகளை மேற்கொண்டது.

தேர்தல்

சில மாதங்களுக்கு முன்பு, “அமைச்சர்களுக்கு திமுக குறி” நாம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம்.. வழக்கமாக தேர்தல் சமயங்களில் கட்சி தலைமைக்கு சாதகமான தொகுதிகள் தங்களுக்கு எடுத்து கொண்டு, எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான தொகுதிகள் கூட்டணிகளுக்கு ஒதுக்கக்கூடும்.. அல்லது கூட்டணி கட்சிகள் தங்களுக்கு எங்குவெற்றி வாய்ப்பு உள்ளது பலமாக நம்புகிறார்களோ, அந்த தொகுதி ஒதுக்கப்படும்.. இதுதான் நடைமுறை.

லிஸ்ட்

ஆனால், திமுக இந்த முறை வித்தியாசமான முயற்சி எடுத்தது.. எங்கெல்லாம் திமுகவுக்கு சறுக்கலோ, எங்கெல்லாம் அதிமுகவின் பலம் அதிகமாக இருக்கிறதோ, அந்த தொகுதிகளை லிஸ்ட் எடுத்தது.. பெரும்பாலும் அவை எல்லாம் அதிமுக அமைச்சர்களின் தொகுதிகளாகவே இருந்தன.. இதையடுத்து, திமுகவின் பலம் பொருந்திய வேட்பாளர்களை அங்கு துணிந்து நிறுத்தியது திமுக.. அதாவது, அதிமுகவின் பலத்தை, அதன் தொகுதியிலேயே வீழ்த்த வேண்டும் என்பதுதான் திமுக இந்த முறை போட்ட ஸ்கெட்ச்.

சீட்

அதன்படியே லிஸ்ட் எடுக்கப்பட்டது.. மாவட்ட செயலர்களுக்கு அசைன்மென்ட் கொடுக்க, அவர்கள் பரிந்துரைத்த பலருக்கே இந்த முறை தேர்தலில் சீட்டும் தரப்பட்டது.. சில முக்கியமான தொகுதிகளில் ஸ்டாலினே நேரடியாக தலையிட்டு, வேட்பாளர்களை தேர்வு செய்து நிறுத்தினார்… இவ்வளவு முயற்சி மேற்கொண்டும், 11 அமைச்சர்கள் மட்டுமே தோல்வியை தழுவியிருந்தனர்.

வெற்றி

ஸ்டாலின், லிஸ்ட் போட்டு வைத்திருந்ததில், 7 அமைச்சர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள்.. இவர்களால்தான் திமுகவின் மாபெரும் வெற்றி என்பது தடுத்து நிறுத்தப்பட காரணமாகவும் இருந்திருக்கிறது.. இதையடுத்து, அந்த 7 அமைச்சர்களும் எப்படி வெற்றி பெற்றார்கள், அந்த தொகுதிகளில் திமுக தோல்வியை தழுவ என்ன காரணம் என்ற அதிரடி ஆய்வும் நடத்தப்பட்டுள்ளது.. அப்போதுதான், சில மாவட்ட செயலர்கள், மாநில நிர்வாகிகள் சிலரின் ரகசிய ஆதரவு வீசியதுதான், அதிமுகவின் அந்த வெற்றிக்கு காரணம் என்ற தகவல் கிடைத்துள்ளது.

பணம்

அதுமட்டுமல்லாமல், சில திமுக வேட்பாளர்கள், தேர்தல் செலவிற்கு பணம் இல்லாமலும் கஷ்டப்பட்டுள்ளனர்.. இந்த விஷயத்தை தெரிந்துகொண்டு, அதிமுகவினரே அணுகி, நிதியுதவி செய்தார்களாம்.. அதன் பலனையே அதிமுக அறுவடை செய்துவிட்டது என்ற தகவலும் கசிந்துள்ளது.. அதுமட்டுமல்ல, சில மூத்த நிர்வாகிகள் உள்ளடி வேலை செய்திருப்பதாலேயே, இந்த அமைச்சர்களுக்கு வெற்றி கிடைத்திருக்கலாம் என்ற சந்தேகமும் திமுக தலைமைக்கு எழுந்துள்ளதாம்.

நிர்வாகிகள்

அதனால்தான், இதையெல்லாம் ரகசியமாகவே விசாரிக்க சொல்லி இருக்கிறாராம் முக ஸ்டாலின்.. இப்போது கொரோனா தடுப்பு ஆலோசனைகளில் தான் முழுவீச்சில் இறங்கி உள்ளதால், அந்த பொறுப்பை மருமகனிடம் தந்துள்ளராம்.. ஒருவேளை அமைச்சர்கள் வெற்றிக்கு, திமுக நிர்வாகிகள் யாராவது உதவி இருந்தால், நிச்சயம் ஸ்டாலின் நிச்சயம் சவுக்கை கையில் எடுப்பார் என்றே நம்பப்படுகிறது..!

%d bloggers like this: