“கொரோனவால் இழந்த சுவை,மணம் திரும்ப வேண்டுமா? இதுவே அதற்கான மருந்து”

கொரோனா பாதிப்பால் ஆக்சிஜன் குறைபாடுகளை களைவதற்கு தாளக கற்பம் , முத்து பற்பம் , கஸ்தூரி கருப்பு ஆகிய மருந்துகளும், கொரோனாவின் பிந்தைய பாதிப்புகள் களைவதற்கு ஆயுஷ் குடிநீர் சூரணம் , அமுக்குரா சூர்ணம் மாத்திரை , ச்யவனப்ரச லேகியம் (chyavanaprash ) ஆகிய மருந்துகளும் அறிமுகம்

செய்யப்ப்பட்டது. மேலும் கொரோனாவை தடுப்பதற்கு சித்தா மருந்துகளான ஓமத் தீநீர் , பிரம்மானந்த பைரவம் , கபசுரம் , வசந்தகுஷ்மாகரம் , திப்பிலி ரசாயனம் , ஆனந்த பைரவம் , தாளிசாதி வடகம் , ஆடாதொடை சூரணமும், ஆயுர்வேத மருந்துகளாக சுதர்சன சூரண மாத்திரை , சுப்ரவாடி மாத்திரை , இந்துகாந்தம் கசாயம் , குடூசி ஸத்வம், அகஸ்திய ரசாயனம் , யஷ்டி சூரணம் , தாளீசாதி சூரணமும், யுனானி மருந்துகளாக ஷர்பத் ஸூஆல் , லவூக் கதான் தவா ஷிபா ஹலாக் , லபூர் ஸகீர் , அருகே கௌஹர் ஷீபா மருந்துகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மருந்துகளை அறிமுகம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இம்ப்காப்ஸ் தலைவர் கண்ணன், “கொரோனா முதல் அலையில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு பெரியளவிலான தற்காப்பு உணர்வை தந்தது . ஆயுஷ் அமைச்சகம் இந்தியா முழுவதும் கபசுராவை விநியோகிக்குமாறு கூறியுள்ளது. குடிசைத் தொழில்போல சிலர் போலியாக கபசுராவை தயாரித்தார்கள். எனவே மக்கள் உண்மையான கபசுராவை பார்த்தறிந்து வாங்க வேண்டும். நேற்று சுகாதாரத்துறை அமைச்சரிடம் கொரோனா எதிர்பாற்றலை அதிகரிக்கும் சித்தா ஆயுர்வேதம் , யுனானி மருந்துகள் சிலவற்றை குறித்து பரந்துரை செய்திருந்தோம். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்க தாளக பஸ்பம் , முத்து பஸ்பம் , பவள பஸ்பங்கள் குடிக்க வேண்டும். அஜீப் மருந்தை ஆவி பிடித்தால் தொண்டை பிரச்சனைகள் சரியாகும். கொரோனாவிலிருந்து மீண்டாலும் பசியின்மை, தூக்கமின்மை பாதிப்பு பலருக்கு இருக்கிறது. குளிர்ந்த நீர் குடித்ததால் காய்ச்சல் வந்ததாக பலர் இப்போதும் சொல்லுகின்றனர். ஆனால் காய்ச்சல் வந்தவுடனே பிசிஆர் சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

சித்தா உள்ளிட்ட ஆயுஷ் மருந்துகளை கொரோனா தோயாளிகளுக்கு முதல் நாளிலேயே வழங்க நவீன மருத்துவர்கள் முன்வர வேண்டும். இதை தமிழக அரசிடம் வேண்டுகோள் வைக்கிறோம். பூர்ண சந்திரோதயம் , மருந்தை ஐசி யூ சிகிச்சையில் இருப்போருக்கு வழங்கினால் நல்ல பலன் இருக்கும். தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கும் மருத்துவ குழுவில் சித்த மருத்துவர்களையும் இணைக்க வேண்டும்.

பாலசஞ்சிவி மற்றும் கஸ்தூரி மாத்திரைகள் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கும் வழங்கலாம். இதன் மூலம் கொரோனா காரணமாக இழந்த சுவ , மணம் திரும்ப கிடைக்க உதவும். உலக சுகாதார நிறுவனமே ஆவி பிடித்தல் நல்ல பலன் தருவதாக கூறியுள்ளது. காய்ச்சல் வந்த முதல் நாளிலேயே சித்த மருந்துகளை நாடினால் ரெம்டெசிவிருக்காக மக்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது ” என்று கூறினார்.

%d bloggers like this: