உங்க நுரையீரல் நூறு சதவீதம் வேலை செய்ய, வெறும் நூறு ரூபாய் போதும்

இன்று பலரது நுரையீரலில் சளி அதிகம் தேங்கியுள்ளது. இப்படி சளி வெளியேறாமல் நுரையீரலிலேயே தங்கியிருந்தால், இருமலால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.

அதே சமயம் அதிகப்படியான சளித் தேக்கம் உடலின் நோயெதிர்ப்பு திறனை குறைக்கும் . எனவே ஆரம்பத்திலே இவற்றை சரி செய்வது நல்லது.

நுரையீரலுக்கு மட்டும் அல்ல. உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நன்மைகளைச் செய்யக்கூடிய சத்து ஒமேகா 3. இது நுரையீரல் செயல்பாட்டைச் சீராக்க உதவும். நுரையீரலில் ஏற்படும் வீக்கங்கள் போன்றவற்றைக் குறைப்பதற்கு உதவும். அனைத்துவகை மீன்கள், பாதாம், வால்நட் போன்ற நட்ஸ், பிளாக்ஸ் மற்றும் வெள்ளரி விதைகள் போன்றவற்றில் ஒமேகா 3 சத்து நிறைந்துள்ளது.

அவோகேடாவில் வைட்டமின் கே, ஈ, பி6, ரிபோவின், பேன்டோதெனிக் அமிலம் மற்றும் நியாசின் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. சமீபத்திய ஆய்வில் அடிக்கடி அவோகேடாவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நுரையீரல் கோளாறு பிரச்சினைகளை குணமாக்குகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக சளியின்றி வைத்திருக்க நினைத்தால், நூறு ரூபாய் எடுத்துக்கொண்டு நாட்டு மருந்து கடைக்கு சென்று ,கீழே குறிப்பிடப்பட்டுள்ள பொருளை வாங்கி ,அதை கொண்டு , கஷாயம் தயாரித்து குடித்து வாருங்கள்.

அந்தவகையில் தற்போது அந்த கஷாயத்தை எப்படி தயாரிக்கலாம்? என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

இஞ்சி – 1 இன்ச் (துருவியது)

பட்டை – 1 சிறிய துண்டு

துளசி இலைகள் – சிறிது

கற்பூரவள்ளி இலை – சிறிது

மிளகு – 3

ஏலக்காய் – 2

சோம்பு – 1/4 டீஸ்பூன்

ஓமம் – 1 சிட்டிகை

சீரகம் – 1/4 டீஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டம்ளர் நீரை ஊற்ற வேண்டும். பின் அதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, நீர் பாதியாகும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அடுப்பை அணைத்துவிட்டு, அதை வடிகட்டி குடித்தால் நுரையீரல் செயல்பாடு நூறு சதவீதம் மேம்படும் .

%d bloggers like this: