அந்தரங்க சாட்ஸ்… அஜால் குஜால் சீக்ரெட்ஸ்!! கிளுகிளுப்புக்கு பஞ்சமில்லாத “கிளப் ஹவுஸ்” ஆப்!

கொரோனாவால் மக்கள் வீட்டிலேயே முடங்கி, நான்கு வார்த்தை பேசக் கூட ஆள் இல்லாத நிலையில் உருவானது தான் ‘கிளப் ஹவுஸ்’ என்னும் செயலி. உருவாகிய சில நாட்களிலேயே பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பெற்று இப்போது பல சமூக ஊடகங்களுக்கு போட்டியாக உருவாகியிருக்கிறது.

தமிழ்நாட்டில் ‘கிளப் ஹவுஸ்’ செயலி அறிமுகம் ஆகி, மக்கள் பயன்படுத்த தொடங்கிய சில நாட்களில் பெரிய அளவில் அந்த செயலி வைரலாகி வருகிறது. இந்த செயலியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்வேறு சர்ச்சைகள் காரசாரமான விவாதங்கள் வெடித்துள்ளது. அரசியல் ரீதியாக மோதல் முதல், பெண்களுடன் உல்லாச சாட்ஸ், பாலியல் ரீதியாக பொதுவில் சாட் செய்வது, முகம் தெரியாத நபர்களிடம் பேசுவது என்று பல்வேறு வகையான சாட்கள் இந்த கிளப் ஹவுஸ் ஆப்பில் உள்ளது.

கிளப் ஹவுசில் மூடிய சாட்கள் செய்யும் வசதி இருந்தாலும், பெரும்பாலும் ஓபன் சாட்ஸ் தான்.

சரி விஷயத்துக்கு வருவோம்… ஆரம்பத்தில் பொதுவான விரும்பம் கொண்டவர்களை இணைக்கும் ஒரு செயலியாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஹைலைட்’ என்னும் செயலியை வடிவமைத்த பால் டேவிட்சன் என்னும் நபரும், கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பொறியாளருமான ரோஹன் சேத் ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கியதே ‘கிளப் ஹவுஸ்’ என்னும் செயலி. பிற சமூக ஊடகங்கள் மெசேஜ், போட்டோ,வீடியோவுக்கு முக்கியத்துவம் கொடுக்க ‘கிளப் ஹவுஸ்’ குரல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அதாவது வாய்மொழியாகவே நாம் உரையாடிக்கொள்ளலாம்.

இதன் காரணமாக 2020 மார்ச்சில் பயன்பாட்டுக்கு வந்த ‘கிளப் ஹவுஸ்’ ஓராண்டுக்குள் உலகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களைப் பெற்றுவிட்டது. இதன் வளர்ச்சியை கண்டே ‘ட்விட்டர்’ போன்ற நிறுவனங்கள் தங்கள் செயலிகளில் ‘ஸ்பேஸ்’ என்ற வசதியை அறிமுகப்படுத்தியது. ஆனால் அவை ‘கிளப் ஹவுஸ்’ செயலியின் அருகில் கூட வரமுடியவில்லை.

சரி இந்த ‘கிளப் ஹவுஸ்’ செயலியை பயன்படுத்துவது எப்படி?. அதன் செயல்பாடுகள் என்ன? இது தெரியாமல் அதைப் பற்றி பேசி என்ன பயன்.! அதைத் பற்றியும் பார்த்து விடுவோம்.

நாம் ஆரம்பத்தில் சொன்னது போல ஆடியோக்கள் மூலம் நம் கருத்துகளை பகிர வந்துள்ள புதிய செயலிதான் ‘கிளப் ஹவுஸ்’. இந்த செயலி ஆரம்பத்தில் ஐஃபோன் பயனாளர்களுக்கு மட்டும் இருந்தது. ஆனால் அதற்கு கிடைத்த வரவேற்பால் தற்போது ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கும் பயன்படுத்தும் வகையில் வந்துவிட்டது. இந்த செயலியை தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் சென்று பதிவிறக்கம் செய்ய முடியும்

சரி இந்த ‘கிளப் ஹவுஸ்’ செயலிக்குள் நுழைவது எப்படி?

# ‘கிளப் ஹவுஸ்’ செயலிக்குள் நுழையும் போது உங்கள் அலைப்பேசி எண்ணைக் கேட்கும்

#உங்களுக்கு ஒரு OTP வரும்.

# OTP அங்கு பதிவிட்டவுடன் உங்கள் பெயர் மற்றும் உங்களுக்கான யூசர்னேம் கேட்கும்.

# பதிவிட்டவுடன் உங்களுக்கான Username உங்களுக்காக ரிசர்வ் செய்யப்படும்.

#’கிளப் ஹவுஸ்’ உங்களுக்கு இன்வைட் அனுப்பும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.

#அதனால் இந்த process-ஐ விரைவு படுத்த கிளப் ஹவுஸில் ஏற்கனவே இருக்கும்.

நண்பர்கள் யாரேனும் உங்களுக்கு அழைப்பு விடுத்தால் நீங்கள் எளிதாக உள்ளே நுழையலாம்.

#இமெயில் அட்ரெஸ், ஃபோட்டோகிராப், யூசர்னேம் மற்றும் பாஸ்வேர்டு போன்ற விஷயங்களை பதிவிட வேண்டும்.

#பதிவுகள் முடிந்ததும் பயனாளி, தனக்கு விருப்பமான தலைப்பை தேர்ந்தெடுத்து அதில் தன் கருத்துகளைக் கூறலாம்.

#பிற தலைப்புகள் மற்றும் கலந்துரையாடல்களை கேட்கவும் செய்யலாம்.

#இப்போதைக்கு ஒருவர் ஒரு கிளப்பில் மட்டுமே சேர முடியும்.

#தலைப்பை தேடி அதை நாம் follow செய்யலாம்.

#குழுவின் அட்மின் கலந்துரையாடலை துவங்கும்போது நமக்கு அது notification-ல் வரும்.

#அந்த கலந்துரையாடல் ரூம் என்று அழைக்கப்படும்.

#பயனாளர்கள் அந்த கிளப்ஹவுஸ் ப்ரோஃபைலில் தன்னைப்பற்றி description, எங்கு வேலை செய்கிறோம், தன்னுடைய ஹாபி போன்றவை பதிவிடலாம்.

#இந்த ‘கிளப் ஹவுஸ்’ செயலியோடு ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமை இணைக்கலாம்.

#ஒரு chatroomல் இணைய அந்த குழுவில் இணைய பயனாளர் அதை க்ளிக் செய்ய வேண்டும் .

#பேசுவதை கேட்க நீங்கள் லிசனர் மோடில் இருக்கக்கூடும்.

#நாமும் பேச வேண்டும் என்றால் raise a hand என்பதை கிளிக் செய்தால், அட்மின் ஒப்புதல் அளித்த பிறகு நாம் பேசலாம்

# இதில் மூன்று வகையான chatroomகள் உண்டு.

1) ஒன்று open chatroom. இதில் பங்கு கொள்ள அட்மின்களின் அனுமதி தேவைப்படாது.

2) closed chatroom. அதாவது அழைப்பு விடுத்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

3)social chatroom. இதில் followers மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

#ஒரு தடவை இதில் கணக்கு தொடங்கினால் அதை நாம் நீக்க முடியாது.

#ஆனால் ‘கிளப் ஹவுஸ்’ நிறுவனத்திற்கு ஒரு இமெயில் அனுப்பி அதை நீக்க முடியும்.

ஆரம்பத்தில் எப்போதும் போல வெளிநாட்டில் தான் இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. வெளிநாடுகளிலேயே இப்படி என்றால் டீ கடை பெஞ்ச்களுக்கு புகழ்பெற்ற தமிழகத்தில் சொல்லவா வேண்டும். தமிழக இணையவாசிகள் அனைத்தையும் கதைக்கும் இடமாக இதை மாற்றிவிட்டார்கள். ஆரம்பத்தில் சொந்த கதை, ஊர் கதை என்ற இருந்த இந்த சாட் ரூம்கள் பின்னர் அரசியல், பொருளாதாரம்,சினிமா, பாலியல் என்று அனைத்து வட்டத்தையும் தொட்டு விட்டது.

டீ கடை பெஞ்சில் சர்ச்சைகள் இல்லாமலா இருக்கும்.! அதை போல இதிலும் சர்ச்சை வந்து விட்டது. சமந்தா நடித்த ‘தி பேமிலி 2’ தொடர் பற்றி பாடகி சின்மயி பேசியது சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து இது பற்றிய விவாதங்கள் ‘கிளப் ஹவுஸ்’ செயலியில் உரையாடப்பட்டது. மேலும் அது தொடர்பான விவாதங்களில் பாடகி சின்மயி நேரடியாக கலந்துகொண்டு தன் தரப்பு நியாயங்களை பேசியது சண்டையாகும் அளவு சென்றது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் இதே போல ஒரு ‘கிளப் ஹவுஸ்’ விவாதத்தில் ‘அரஸ்ட் கிஷோர் கே சாமி’ என்ற தலைப்பில் கிஷோர் கே சாமி முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அவர் கைதும் செய்யப்பட்டார். இதனால் அரசியல் அரங்கில் கூட இந்த ‘கிளப் ஹவுஸ்’ செயலி பற்றிய விவாதங்கள் நடந்தன.

மேலும் கேமர் மதன் போன்ற பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான யூ டியூபர் குறித்தும் இதில்தான் பல உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட்டன. இப்போது கேமர் மதனை போலீஸ் கைது செய்யும் நிலையில் உள்ளது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க காதல் ரீதியாக பலரும் பேசுகிறார்கள். புதிதாக பார்க்கும் பெண்களிடம் பிடித்ததை சொல்வது, டிபியை பார்த்தே செக்சியாக பேசுவது, சூட் தி சாட், வித விதமான பிக் அப் லைன் சொல்லி பெண்களை கவர்வது என்று பல கலர்புல் ஜாலி விஷயங்களும் இந்த கிளப் ஹவுஸ் ஆப்பில் நடக்கின்றன.

நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல இதற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. கட்டுப்படுத்தப்படாத வாய்மொழி உரையாடங்கள் என்பதால் எளிதில் நாகரிகத்தை தாண்டிய வார்த்தைகள் வராமல் கட்டுப்படுத்துவது மிக கடினம். மேலும் தற்போது இருக்கும் ஸ்கிரீன் ரெக்கார்டர் செயலிகளால் நம் உரையாடல்களை நமக்கு தெரியாமலே சிலர் பதிவு செய்யும் வாய்ப்பும் இதில் இருக்கிறது.

அதோடு உரையாடல்கள் முறையாக பதிவுசெய்யப்படாததால் தனி நபர் தாக்குதல் அல்லது பாலியல் தாக்குதலில் போது ஒருவர் மீது புகாரளிக்கும் வாய்ப்புகளும் இல்லாமல் போகிறது. மேலும் மூன்றாம் நபரை வசைபாடவும் ஏற்ற இடமாக இருக்கிறது. இந்த குறைபாடுகளை எல்லாம் ‘கிளப் ஹவுஸ்’ நிறுவனம் கூடிய விரைவில் சரிசெய்யும் என்று நம்பலாம்.

%d bloggers like this: