எங்களுக்கு மதிப்பே இல்லையா..? மு.க.ஸ்டாலினால் மனம் வெறுத்துப்போன அமைச்சர்கள்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும், அமைச்சர்களின் கருத்துகளை கேட்பதில்லை என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாத காலம் நிறைவடைந்த நிலையில் தொடர்ந்து அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். 24 மாவட்ட ஆட்சியர்கள்

மாற்றப்பட்டுள்ளனர். தலைமைச் செயலாளர், முதல்வரின் தனிச் செயலாளர்கள், முக்கிய துறைகளுக்கான செயலாளர்கள் என பல அதிகாரிகளின் நியமனம் கவனம் பெற்றது. மாநில கொள்கைத் திட்டக்குழுவின் துணைத் தலைவராக ஜெயரஞ்சனை நியமித்தது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சரியான பணிகளுக்கு சரியான ஆள்களை நியமித்துவிட்டாலே பாதி வேலை முடிந்த மாதிரி தான் என்பது போல் அதிகாரிகளை பார்த்து பார்த்து நியமித்து வருகிறார் ஸ்டாலின் என்கிறார்கள் திமுக தொண்டர்கள்

ஆனால் திமுக அமைச்சர்கள் மத்தியிலோ முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களைவிட அதிகாரிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக ஒரு பேச்சு நிலவுகிறது. தேர்தலுக்கு முன்பாக கட்சிக்காரர்களை விட ஐபேக் நிறுவன ஆள்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஸ்டாலின் தற்போது தமது கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களை விட அதிகாரிகளுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதாக கூறப்படுகிறது. ஸ்டாலினின் இந்த அணுகுமுறையை கோட்டையில் இரு முக்கிய அதிகாரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாகவும், மற்ற அதிகாரிகளை தங்களது விருப்பப்படி மாற்ற ஸ்டாலினுக்கு சிபாரிசு செய்வதாகவும் ஒரு தகவல் கோட்டை வட்டாரத்தில் உலா வருகிறது. மதுரை மாநராட்சி உட்பட ஐந்து மாநகராட்சிகளின் ஆணையர்கள் ஜூன் 9ஆம் தேதி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆணையர்கள் பொறுப்பில் அமர்த்தப்பட்டார்கள்.

இந்த நியமனங்கள் குறித்து நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு பெயரளவுக்குக்கூட தெரிவிக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதுகுறித்து ஒரு உயர் அதிகாரியிடம் தனது வருத்தத்தை நேரு தெரிவித்துள்ளார். “இது போன்று செயல்பட்டால் அமைச்சர்களுக்கு என்ன மரியாதை இருக்கும். அமைச்சர்களை அதிகாரிகள் எப்படி மதிப்பார்கள்?” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாக கூறுகிறார்கள்.

%d bloggers like this: