யார் அந்த 3பேர்”.. மாப்பிள்ளை ஒருபக்கம்.. சீனியர்கள் மறுபக்கம்.. குறுக்கே கதர்கள்.. பரபரப அறிவாலயம்

சபரீசன் ராஜ்ய சபா எம்பியாக வாய்ப்பு வழங்கப்படுமா என எதிர்பார்ப்பு எகிறி உள்ளது
சபரீசன் ராஜ்ய சபா எம்பியாக வாய்ப்பு வழங்கப்படுமா என எதிர்பார்ப்பு எகிறி உள்ளது

3 எம்பி பதவிக்கு 300 பேர் போட்டி இருக்கிறதாம்.. ஒருபக்கம் காங்கிரசும் மல்லுக்கட்டி கொண்டிருப்பதால், அறிவாலயம் செம பிஸியில் உள்ளது..!

தமிழகத்தில் இருந்து 3 ராஜ்ய சபா உறுபினர்கள் பதவி காலியாகி உள்ளது…

இந்த 3 பதவிக்கு தேர்தல் நடத்தினால், 3 பதவிகளையும் பெரும்பான்மை எம்எல்ஏக்களை கொண்ட திமுகவே கைப்பற்றும் என்று அரசியல் நோக்கர்கள் உறுதிபட சொல்லி வருகின்றனர்.

மேலும், ஆட்சி மாறியதால் தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி பதவியும் காலியாகி உள்ளது.. இந்த மூன்று பதவிகளுக்கும் ஒரே நேரத்தில், தனித்தனியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம், திமுக எம்பிக்கள் மனு வழங்கி இருக்கிறார்கள்..

ராஜ்ய சபா

இதற்கான தேதியும் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில்,எனவே, திமுகவில் இந்த 3 ராஜ்ய சபா எம்பிக்கள் பதவி மற்றும் டெல்லி பிரதிநிதி பதவி யாருக்கு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பலமாக எழுந்துள்ளதுடன், அதற்கான கடுமையான போட்டிகளும் நடந்து வருகிறது. வழக்கமாக, சீனியர்களுக்குதான் இந்த ராஜ்ய சபா பதவி என்பது ஒதுக்கப்படும்.. அல்லது சட்டசபை தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகளுக்கும் ராஜ்ய சபா பதவிக்கு பரிந்துரை செய்யப்படும்..

இளைஞர்கள்

ஆனால் இந்த முறை தேர்தலில் அதிமுகவுக்கு டஃப் தந்து தோல்வி அடைந்த முக்கிய வேட்பாளர்களுக்கு இந்த பதவி செல்லலாம் என்கிறார்கள்.. அதேசமயம், இளைஞர்களுக்கும் வாய்ப்பு தரப்படும் என்கிறார்கள்.. இந்த லிஸ்ட்டில் மூத்த நிர்வாகிகளான கம்பம் செல்வேந்திரன், சுப்புலட்சுமி ஜெகதீசன், பொங்கலுார் பழனிசாமி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்..

யார் அநத் 3 பேர்?

இளைஞர் அணி தரப்பிலோ, புதுக்கோட்டை அப்துல்லா, நாமக்கல் மாஜி எம்எல்ஏ ராமசாமி மகன் முத்து, அண்ணாநகர் கார்த்திக் போன்றவர்களும் சீனியர்களுக்கு போட்டியாக எம்பி பதவியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்… யார் அந்த 3 பேர் என்பதிலும் எந்தவித விவரத்தையும் சொல்லாமல் மேலிடம் கமுக்கமாக இருந்து வருகிறது…

ராஜ்ய சபா

காரணம், இந்த எம்பி பதவிக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு முன்பு, பல்வேறு சமூகங்கள், மாவட்டங்கள், தலைவர்களின் அனுபவம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் திமுக தலைமை பரிசீலிக்கும் என்று கூறப்படுகிறது. அதேசமயம், ஏற்கெனவே சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு அதை சரியாக பயன்படுத்தி கொள்ளாதவர்களுக்கு எதற்காக மறுபடியும் ராஜ்ய சபாவிலும் வாய்ப்பு கொடுக்க வேண்டுமா? என்ற கேள்விகளும் எழுகிறது..

காங்கிரஸ்

மற்றொருபுறம், இந்த ராஜ்ய சபா இடைத்தேர்தல் மூலம் மாநிலங்களவையில் திமுக எம்பிக்களின் எண்ணிக்கை 10 ஆக உயரும்… அதிமுகவின் பலமோ 6ஆக குறையும். கூடுதலாக 4 இடங்கள் கிடைத்தால், அடுத்தடுத்த தேர்தல்களுக்கு பலமாக இருக்கும் என்றும் திமுக கணக்கு போடுகிறதாம். கடந்த இப்படிப்பட்ட சூழலில்தான் காங்கிரஸ் என்ட்ரி தருகிறது.. கூட்டணியில் உள்ள இவர்கள் ஆரம்பத்தில் இருந்தே தங்களுக்கு ஒரு சீட் வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள்.. ஆனால், அக்கட்சிக்கு எம்பி பதவியை வழங்க திமுக மேலிடம் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.

ஸ்டாலின்

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “நடந்து முடிந்த தேர்தலில் கூட்டணிகளின் தேவையை நாம் சரியாக பூர்த்தி செய்ய முடியவில்லை.. அதனால், அவர்களுக்கும் முக்கியத்துவம் தந்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். அப்படியானால், உள்ளாட்சி தேர்தலுக்கு மட்டும் கூட்டணிகளை கவனித்துவிட்டு, ராஜ்ய சபா மூன்றையுமே திமுக எடுத்து கொள்ளும் என்றே தெரிகிறது..

சபரீசன்

இதனிடையே சபரீசனும் இந்த எம்பிக்கு பதவிக்கு விரும்புவதாக ஒரு செய்தி ஏற்கனவே கசிந்தது.. அப்படி அவருக்கு இந்த பதவி இல்லாவிட்டால், அந்த 3 பேர் யார் என்பதை தீர்மானிப்பதில் முக்கிய சக்தியாக சபரீசன் இருக்கக்கூடும் என்கிறார்கள்.. இதுவரை திமுக கூட்டணி சார்பாக கிட்டத்தட்ட 300 பேர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் அறிவாலயத்தில் குவிந்துள்ளதாம்.. இருக்கிற 3 பதவிக்கு 300 பேர் போட்டியில் உள்ளதால், யார் அந்த 3 பேர்? காங்கிரசுக்கு சீட் தருவார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்..

%d bloggers like this: