இனி நொய் நொய்ன்னு “கால்” பண்ணா.. 10000 ரூபாய் அபராதம்.. “மக்கள் நிம்மதி”..!

போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் பெரும் பிரச்சனை மார்கெட்டிங் கால் தான், இந்தப் பிரச்சனை தீர்க்கும் வகையில் டெலிகாம் துறை அமைச்சகம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டெலிகாம் துறை அமைச்சகம்

டெலிகாம் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 50 முறைக்கு மேல் விதி மீறல்கள் செய்யும் அனைத்து டெலிகாம் மார்கெட்டர்களின் ஒவ்வொரு கால் மற்றும் குறுஞ்செய்திக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

மார்கெட்டிங் கால் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகளைச் சட்டத்தில் கொண்டு வந்துள்ளது டெலிகாம் துறை அமைச்சகம்.

புதிய விதிமுறை

இப்புதிய விதிமுறை கீழ் 0-10 முறைக்கு விதி மீறல்களுக்கு ஒவ்வொரு கால் மற்றும் குறுஞ்செய்திக்கு 1000 ரூபாயும், 10-50வது விதி மீறல்களுக்கு 5000 ரூபாயும், 50 முறைக்கு மேல் தொல்லை தருபவர்களுக்கு 10000 ரூபாய் எனப் புதிய அபராத முறையைக் கொண்டு வந்துள்ளது.

கருவி அடையாள எண்

தற்போது நடைமுறையில் 0-100, 100-1000 மற்றும் 1000த்திற்கு மேல் என்று உள்ளது, இதைப் பெரிய அளவில் குறைத்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் டெலிகாம் துறை அமைச்சகம் இந்த அபராதம் விதிக்க Digital Intelligence Unit (DIU) வாயிலாகக் கருவியின் அடையாள எண் அடிப்படையில் கண்காணிக்க உள்ளது.

டெலிமார்கெட்டிங் கால்

தொல்லைத்தரும் டெலிமார்கெட்டிங் கால் அல்லது எஸ்எம்எஸ் செய்யப்பட்டும் மொபைல் அல்லது கருவியின் IMEI கண்டறிந்து கண்டறிந்து 30 நாட்களுக்குப் பிளாக் செய்யப்படும். 30 நாட்களுக்குப் பின் மீண்டும் மறு ஆய்வு செய்து அனுமதி அளிக்கப்படும் கருவிகளுக்கு 6 மாதம் தினமும் 20 அழைப்புகள், 20 எஸ்எம்எஸ்-களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

சிம் கார்டு மற்றும் கருவி

இதன் மூலம் சிம் கார்டு மாற்றுவது மட்டும் அல்லாமல் கருவியையும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் இனி தொல்லைத்தரும் டெலிமார்கெட்டிங் கால் அல்லது எஸ்எம்எஸ் வருவது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

%d bloggers like this: