“விடமாட்டேன்”.. நம்ம மேல கை வச்சா.. அவருடைய “மேட்டர்” என்கிட்ட இருக்கு.. எடப்பாடி பழனிசாமி அதிரடி

ஊழல் புகார்களின் மீது முன்னாள்கள் மீது விசாரணை விரைவாக நடக்க உள்ளதாம்

ஊழல் புகார்களின் மீது முன்னாள்கள் மீது விசாரணை விரைவாக நடக்க உள்ளதாம்

ஸ்டாலின் ஒரு கணக்கு போட்டால், அதைவைத்து அதிமுக தரப்பு வேறு ஒரு கணக்கு போட்டு வருகிறது.. இதனால் திமுக தரப்பு சற்று குழம்பி போயுள்ளதாக தெரிகிறது.. எல்லாம் ஊழல் விவகாரங்கள்தான்!

திமுக ஆட்சிக்கு வந்ததுமே, ஊழல் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் விசாரிக்கப்படுவார்கள் என்றும், தவறு நிரூபிக்கப்படும்பட்சத்தில், அவர்களை கைது செய்யவும் திமுக அரசு தயங்காது என்றும் ஸ்டாலின் தெரிவித்து வந்தார்.

ஆனால், கொரோனா பெரிய பிரச்சனையாக போய்விடவும், அதை குறைப்பதிலேயே தீவிரமான கவனத்தை செலுத்தி வந்தனர்.. அதுமட்டுமல்ல, கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை இப்படி அதிகமாக வைத்துக் கொண்டு, பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக இறங்கிவிட்டதாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக, அதிமுக பக்கம் கவனத்தையும் திமுக செலுத்தவில்லை.

மாஜிக்கள்

கொரோனா விஷயத்தில் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் அதற்காக முடுக்கிவிடப்பட்டதால், மாஜிக்கள் விஷயத்தை தள்ளிப்போட்டிருந்தார் ஸ்டாலின்… இப்போது தொற்று குறைந்து வருகிறது.. மாஜிக்கள் மீதான ஊழல் புகார்கள் தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளன.. இதற்காகவே ஒரு டீம் இறக்கி உள்ளார் ஸ்டாலின்.. அந்த வகையில், முதல்குறியே ராஜேந்திர பாலாஜிக்குதான் என்று சொல்லப்படுகிறது.. இதைதவிர, 8 மாஜிக்கள் லிஸ்ட்டில் உள்ளனர்..

பேட்டிகள்

இப்படி ஒரு தகவல் திமுக தரப்பில் வெளியானதுமே, மாஜிக்கள் அலர்ட் ஆனார்கள்.. சிலர் திமுகவின் விவிஐபிக்கள் மூலம் தூது நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.. சிலர் ஸ்டாலினை பாராட்டி பேட்டி தந்தார்கள்.. தெரியாம பேசிட்டேன் என்பது போல பலரது பேச்சுக்களும் வெளியாகி வருகின்றன.. மேலும் சிலரோ, வழக்கறிஞர்கள் டீமை நாடி வருகிறார்கள்.. அதிலும் கொங்குவில் உள்ள 2 மாஜிக்கள் 3 வக்கீல்களை நியமித்துள்ளனராம்.. ஆனால், எடப்பாடியோ 30 வக்கீல்களை தன்தரப்பில் இறக்கி விட்டுள்ளதாக 2 தினங்களுக்கு முன்பு நாம்கூட செய்தி வெளியிட்டிருந்தோம்.

லிஸ்ட்

இப்போது ஒரு விஷயம் கசிந்துள்ளது.. புகார் லிஸ்ட்டில் உள்ள ஜெயக்குமார், சண்முகம், தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, சம்பத் உள்ளிட்ட மாஜிக்கள், எடப்பாடி பழனிச்சாமியிடம் இதை பற்றி பேசியிருக்கிறார்கள்.. அப்போது, ‘ஊழல் குறித்து தனித்தனியாக எங்களை லிஸ்ட் கேட்டிருக்கிறார்கள்” என்று சொன்னதாம்.

தைரியம்

அதற்கு எடப்பாடி பழனிசாமி, யாரும் கவலைப்படாதீங்க.. யார் மீதும் திமுக புதிதாக வழக்குப் போடாது. ஏற்கனவே கோர்ட் உத்தரவின் பேரில் சிலர் மீது விஜிலென்ஸ் பதிவு செய்த வழக்குதான் விசாரணைக்கு வரும். அதை சமாளிப்பது பெரிய விஷயமல்ல.. சீனியர்கள் எல்லோர் மீதும் வழக்கு போட்டால் நம்மிடமும் ஒரு அஸ்திரம் இருக்கிறது. அதை பயன்படுத்துவோம்.

அமைச்சர்கள்

அதாவது, 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்களுக்கு அப்போதைய திமுக அமைச்சர்கள் மீதும் இதே லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்குகள் உள்ளன. கடந்த 10 வருஷமாக நாமும் அதை தூசு தட்டவில்லை. அதனால் அவர்கள் அதை பற்றி கவலைப்படாமல் இருக்கின்றனர். அப்போது அமைச்சர்களாக இருந்த பலர் இப்போதைய திமுக அரசிலும் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.

தெம்பு

அவர்களின் ஊழல் ஃபைல்களின் நகல் என்னிடமும் இருக்கிறது… அதனால், நம் மீது வழக்கு பாய்ந்தால் திமுக அமைச்சர்கள் மீதான கடந்த கால ஊழல் ஃபைல்களை தூசு தட்டி கோர்ட்டை நாமும் அணுகுவோம். கவலைப்படாதீர்கள் என்று சொன்னாராம்.. இதனால், உச்சி குளிர்ந்து போன மாஜிக்களும், தெம்பாகிவிட்டனராம்.

%d bloggers like this: