சளி பிரச்சினை எல்லாம் இல்லாமல் உடல் வலிமையோட இருக்கனுமா? கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க

நம் நாட்டில் ஏராளமான மூலிகைத் தாவரங்கள் இருக்கின்றன. அவற்றில் பல மூலிகைகள் நம் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தும் அதை பற்றி நமக்கு தெரிவதில்லை. இந்த மூலிகைகள் எல்லாமே ஒவ்வொரு வகையான சுகாதார பிரச்சினைகளைக் குணப்படுத்த சிறந்தது. அப்படி நாம் அடிக்கடி நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு மூலிகை தான் தூதுவளை.

தூதுவளை எனும் மூலிகை தாவரம் பொதுவாக வேலிகளில் படர்ந்து வளரும். இந்த மூலிகை நம் முன்னோர்களால் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் அவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. சளி, இருமல் போன்ற சுவாசம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் உடல் வலிமை பெறவும் உதவும் இந்த அற்புதமான மூலிகைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சினைகள் எல்லாம் குணமாக தூதுவளை கஷாயம் எப்படி செய்வது என்பதை முதலில் தெரிந்துக்கொள்வோம்.

முதலில் தூதுவளை இலை எடுத்துக்கொள்ளுங்கள். அதோடு ஒரு சிட்டிகை சீரகம், ஒரு சிட்டிகை மிளகு, அரை தேக்கரண்டி சுக்குத் தூள், இலவங்கப்பட்டை தூள், பனை வெல்லம், கற்பூரவல்லி இலை, துளசி, தண்ணீர் ஆகியவற்றை எல்லாம் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஒரு சுத்தமான பாத்திரத்தில் இரண்டு முதல் மூன்று கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். மேற்சொன்ன அனைத்து பொருட்களையும் சேர்த்து 3 முதல் 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்கவும். ஓரளவுக்கு சண்ட ஆரம்பித்த பிறகு, வடிகட்டி, காலையிலும் மாலையிலும் மிதமான சூட்டில் குடித்து வர வேண்டும். இப்படி இந்த கசாயத்தைக் குடிப்பதால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகளை குணமடையும். 15 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கபம் சார்ந்த பிரச்சினைகளுக்கு இந்த கஷாயத்தைப் பயன்படுத்தி பயன்பெறலாம்.

தூதுவளை இலையை நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து, காலை மற்றும் மாலை நேரங்களில் தொடர்ச்சியாக 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல் நல்ல வலிமை பெறும். இதே போல இதன் பூவை உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து குடித்தாலும் உடல் அசுர பலம் பெற்று ஆரோக்கியமாக இருக்கும்.

நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு அவதிப்படுபவர்கள் தூதுவளை இலை தூளைத் தேனுடன் கலந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

கால்சியம் சத்துக்கள் நிறைந்தது இந்த தூதுவளை. வாரத்திற்கு ஒரு இருமுறையேனும் தூதுவளையை துவையலாக செய்து உணவுடன் சேர்த்துக்கொண்டால் பற்களும் எலும்புகளும் பலப்படும்.

%d bloggers like this: