மாஜி அமைச்சர் மீது நடவடிக்கை வேண்டாம்!’ – தூதுபோன லாட்டரி வாரிசு
‘‘வாட்ஸ்அப்பில்கூட இனி ரகசியமாகப் பேசிக்கொள்ள முடியாதுபோல…’’ என்று செல்போனில் பேசியவாறே அலுவலகத்துக்குள் நுழைந்தார் கழுகார். சில்லென்ற பாதாம் பாலை நீட்டினோம். செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு, ‘‘எல்லாம் பெகாசஸ் பீதிதான்!’’ என்றபடி பாதாம் பாலைப் பருகி முடித்தவர், ‘‘பெகாசஸ் குறித்த தனிக் கட்டுரையை உமது நிருபர் கொடுத்திருப்பதால், நான் வேறு செய்திகளுக்குச் செல்கிறேன்” என்று ஆரம்பித்தார் கழுகார்.