சசிகலா எம்.எல்.ஏ? – அ.தி.மு.க-வைக் கைப்பற்ற பலே திட்டம்!

இதழ் முடிக்கும் தறுவாயில் அவசரமாக வந்தார் கழுகார். சாக்லேட் மில்க்‌ ஷேக்கை அவருக்கு நீட்டிவிட்டு, “ரெய்டுகள் தடதடக்கின்றனவே?” என்றோம். மில்க் ஷேக்கைப் பருகியபடி, “எம்.ஆர்.விஜயபாஸ்கரைக் குறிவைப்பதற்கு முன்பாகவே, கொங்கு மண்டல உச்ச அமைச்சருக்கு மண்டகப்படி நடத்தியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. விவரமாகச் சொல்கிறேன் கேளும்” என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

“ஜூலை 22-ம் தேதி, போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் ரெய்டு நடப்பதற்கு முதல்நாள்… கொங்கு மண்டல முன்னாள் உச்ச அமைச்சருக்கு நெருக்கமான ஒரு நபரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் வளைத்திருக்கிறார்கள். அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்களைக் கொட்டியிருக்கிறார். ‘நவீன’ பெயர்கொண்ட ஒரு வழக்கறிஞரும், ‘நீலக் கடவுள்’ பெயர்கொண்ட ஒரு டாக்குமென்ட் ரைட்டரும்தான் அந்த முன்னாள் உச்ச அமைச்சருக்கு சகலமுமாக இருந்தவர்களாம். ‘அவர்கள் இருவரும்தான், யாரை பினாமியாக நியமிப்பது, சொத்து விவகாரங்களில் யாருக்கு பவர் கொடுப்பது போன்ற சட்ட வேலைகளை முன்னாள் அமைச்சருக்காகக் கடந்த ஆறு ஆண்டுகளாகச் செய்துவந்தனர்’ என்று விஷயத்தைக் கக்கியிருக்கிறார் அந்த நபர். உஷாரான லஞ்ச ஒழிப்புத்துறையினர், உளவுத்துறைக்கு விஷயத்தை பாஸ் செய்யவும், சம்பந்தப்பட்ட இருவரும் உளவுத்துறை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்களாம்.”

ஓஹோ… அந்த முன்னாள் மாண்புமிகுவை விட மாட்டார்கள்போலவே!”

‘‘ஆட்சியாளர்களின் வேகம் அப்படித்தான் சொல்கிறது. மேற்கு மண்டல நகரம் ஒன்றில், அந்த முன்னாள் உச்ச அமைச்சருக்கு நெருக்கமான தலைமைப் பொறியாளர் ஒருவர் இருக்கிறார். தமிழகமெங்கும் பணியிட மாற்றங்கள் நிகழ்ந்த வேளையில், அவர்மீது மட்டும் அரசு கைவைக்கவில்லை. இதற்குக் காரணமே அந்த முன்னாள் உச்ச அமைச்சருக்கு செக் வைக்கத்தான் என்கிறார்கள். முன்னாள் அமைச்சரின் முதலீடுகள் குறித்துப் பல விவகாரங்கள் அந்தப் பொறியாளருக்கு அத்துபடியாம். அவரைப் பயன்படுத்தி, அந்த முன்னாள் மாண்புமிகுக்கு செக் வைக்கும் விவகாரங்களைத் தோண்ட ஆளும்தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.”

“சரிதான்… நீலகிரி அ.தி.மு.க-வில் ஏதோ சலசலப்பு என்கிறார்களே… தகவல் ஏதும் கேள்விப்பட்டீரா?’’

‘‘கூடலூர் எம்.எல்.ஏ ஜெயசீலனுக்கு சமீபத்தில் அலுவலகம் ஒன்றை அமைத்துக் கொடுத்திருக்கிறார் அ.தி.மு.க பிரமுகரும், கொடநாடு பங்களா மர வேலைப்பாடுகளைச் செய்து தந்தவருமான சஜ்ஜீவன். இந்த அலுவலகத் திறப்புவிழாவில், மாவட்டச் செயலாளர் வினோத் முதல் முன்னாள் அமைச்சர் மில்லர் வரை கலந்துகொண்டிருக்கிறார்கள். யார் திறந்துவைப்பது என்ற எதிர்பார்ப்பு எழுந்த வேளையில், திடீரென சஜ்ஜீவனின் கழுத்தில் மாலை அணிவித்த ஜெயசீலன், அவரை ரிப்பன் வெட்டச் செய்து அலுவலகத்தைத் திறந்திருக்கிறார். ‘சஜ்ஜீவன் மீது பல்வேறு மரக்கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அலுவலகத்தைத் திறந்துவைக்க அவர்தான் கிடைத்தாரா?’ என நீலகிரி அ.தி.மு.க கொதிப்பில் இருக்கிறது. அதற்குத்தான் இந்த சலசலப்பு.”

சாக்லேட் மில்க்‌ ஷேக்கை அவருக்கு நீட்டிவிட்டு, “ரெய்டுகள் தடதடக்கின்றனவே?” என்றோம். மில்க் ஷேக்கைப் பருகியபடி, “எம்.ஆர்.விஜயபாஸ்கரைக் குறிவைப்பதற்கு முன்பாகவே, கொங்கு மண்டல உச்ச அமைச்சருக்கு மண்டகப்படி நடத்தியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. விவரமாகச் சொல்கிறேன் கேளும்” என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

“ஜூலை 22-ம் தேதி, போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் ரெய்டு நடப்பதற்கு முதல்நாள்… கொங்கு மண்டல முன்னாள் உச்ச அமைச்சருக்கு நெருக்கமான ஒரு நபரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் வளைத்திருக்கிறார்கள். அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்களைக் கொட்டியிருக்கிறார். ‘நவீன’ பெயர்கொண்ட ஒரு வழக்கறிஞரும், ‘நீலக் கடவுள்’ பெயர்கொண்ட ஒரு டாக்குமென்ட் ரைட்டரும்தான் அந்த முன்னாள் உச்ச அமைச்சருக்கு சகலமுமாக இருந்தவர்களாம். ‘அவர்கள் இருவரும்தான், யாரை பினாமியாக நியமிப்பது, சொத்து விவகாரங்களில் யாருக்கு பவர் கொடுப்பது போன்ற சட்ட வேலைகளை முன்னாள் அமைச்சருக்காகக் கடந்த ஆறு ஆண்டுகளாகச் செய்துவந்தனர்’ என்று விஷயத்தைக் கக்கியிருக்கிறார் அந்த நபர். உஷாரான லஞ்ச ஒழிப்புத்துறையினர், உளவுத்துறைக்கு விஷயத்தை பாஸ் செய்யவும், சம்பந்தப்பட்ட இருவரும் உளவுத்துறை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்களாம்.”

மிஸ்டர் கழுகு: சசிகலா எம்.எல்.ஏ? – அ.தி.மு.க-வைக் கைப்பற்ற பலே திட்டம்!
“ஓஹோ… அந்த முன்னாள் மாண்புமிகுவை விட மாட்டார்கள்போலவே!”

‘‘ஆட்சியாளர்களின் வேகம் அப்படித்தான் சொல்கிறது. மேற்கு மண்டல நகரம் ஒன்றில், அந்த முன்னாள் உச்ச அமைச்சருக்கு நெருக்கமான தலைமைப் பொறியாளர் ஒருவர் இருக்கிறார். தமிழகமெங்கும் பணியிட மாற்றங்கள் நிகழ்ந்த வேளையில், அவர்மீது மட்டும் அரசு கைவைக்கவில்லை. இதற்குக் காரணமே அந்த முன்னாள் உச்ச அமைச்சருக்கு செக் வைக்கத்தான் என்கிறார்கள். முன்னாள் அமைச்சரின் முதலீடுகள் குறித்துப் பல விவகாரங்கள் அந்தப் பொறியாளருக்கு அத்துபடியாம். அவரைப் பயன்படுத்தி, அந்த முன்னாள் மாண்புமிகுக்கு செக் வைக்கும் விவகாரங்களைத் தோண்ட ஆளும்தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.”

“சரிதான்… நீலகிரி அ.தி.மு.க-வில் ஏதோ சலசலப்பு என்கிறார்களே… தகவல் ஏதும் கேள்விப்பட்டீரா?’’

‘‘கூடலூர் எம்.எல்.ஏ ஜெயசீலனுக்கு சமீபத்தில் அலுவலகம் ஒன்றை அமைத்துக் கொடுத்திருக்கிறார் அ.தி.மு.க பிரமுகரும், கொடநாடு பங்களா மர வேலைப்பாடுகளைச் செய்து தந்தவருமான சஜ்ஜீவன். இந்த அலுவலகத் திறப்புவிழாவில், மாவட்டச் செயலாளர் வினோத் முதல் முன்னாள் அமைச்சர் மில்லர் வரை கலந்துகொண்டிருக்கிறார்கள். யார் திறந்துவைப்பது என்ற எதிர்பார்ப்பு எழுந்த வேளையில், திடீரென சஜ்ஜீவனின் கழுத்தில் மாலை அணிவித்த ஜெயசீலன், அவரை ரிப்பன் வெட்டச் செய்து அலுவலகத்தைத் திறந்திருக்கிறார். ‘சஜ்ஜீவன் மீது பல்வேறு மரக்கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அலுவலகத்தைத் திறந்துவைக்க அவர்தான் கிடைத்தாரா?’ என நீலகிரி அ.தி.மு.க கொதிப்பில் இருக்கிறது. அதற்குத்தான் இந்த சலசலப்பு.”

மிஸ்டர் கழுகு: சசிகலா எம்.எல்.ஏ? – அ.தி.மு.க-வைக் கைப்பற்ற பலே திட்டம்!
‘‘அ.ம.மு.க செய்திகள் ஏதேனும்?’’

‘‘அ.ம.மு.க-விலிருந்து நிர்வாகிகள் வெளியேறுவது தொடர்கதையாகியிருக்கிறது. சமீபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், அவர் மகனும் மாவட்டச் செயலாளருமான வ.து.ந.ஆனந்த் இருவரும் தி.மு.க-வில் இணைந்துவிட்டனர். அவர்கள் வெளியேறப்போவது குறித்து முன்னரே தினகரன் தரப்புக்குத் தெரியப்படுத்தினார்களாம். அவர்களுடன் பேசிய தினகரன் தரப்பு, ‘வெளியேறுவது உங்கள் விருப்பம். அதை நாங்கள் தடுக்கவில்லை. போறதுதான் போறீங்க, தி.மு.க-வுக்குப் போங்க’ என்றார்களாம். தினகரன் தரப்பு தடுத்தால் அ.ம.மு.க-விலேயே தொடரலாம் என்று முடிவிலிருந்த ஆனந்த் தரப்புக்கு இது ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. அ.ம.மு.க-விலிருந்து வெளியேறுபவர்களை தினகரன் தடுப்பதில்லை என்ற ஆதங்கம், கட்சிக்குள் இருப்பவர்களிடமும் வெளியேறுபவர்களிடமும் மிகுதியாக இருக்கிறது.”

‘‘போகிற போக்கைப் பார்த்தால் தினகரனே வேறு ஏதேனும் கட்சியில் சேர்ந்துவிடுவார்போல!” என்றபடி கழுகாருக்குச் சுடச்சுட ‘ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்’ தட்டில் நிரப்பிக் கொடுத்தோம். ருசித்தபடியே, ‘‘தி.மு.க-வுக்கே வேட்டுவைத்த அந்தக் கட்சி எம்.எல்.ஏ-வின் செய்தியைச் சொல்கிறேன்” என்றபடி செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.

‘‘மீன்பிடித் தொழிலில் சுருக்கு மடி, இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதை நீக்க வேண்டுமென மீனவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். சமீபத்தில், நாகையில் நடந்த போராட்டத்தை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பேசி முடிவுக்குக் கொண்டுவந்தார். ஆனால், கடலூர் தேவானம்பட்டினத்தில் நடந்த போராட்டத்தை தி.மு.க-வைச் சேர்ந்த அந்தத் தொகுதி எம்.எல்.ஏ அய்யப்பன் கண்டுகொள்ளவே இல்லையாம். போராட்டம் நடத்தியவர்களில் பலரும் அய்யப்பனின் ஆதரவாளர்கள்தான் என்கிறார்கள். பல மணி நேரம் போராட்டம் நடந்தும் அந்தப் பக்கம் அய்யப்பன் எட்டிப் பார்க்காததால் கடுப்பான தி.மு.க-வினர், ‘அவர் ஆளுங்கதானே களத்துல நிக்குறாங்க. வந்து பேசியிருந்தா கட்சி இமேஜ் டேமேஜ் ஆகியிருக்காதே’ எனக் கொதிக்கிறார்கள். இந்த விவகாரத்தை முதல்வர் அலுவலகத்துக்கு உளவுத்துறையும் நோட் போட்டுள்ளதாம்.’’

விவரமறிந்தவர்கள். தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பேசுமாறு கட்சியின் நிர்வாகிகளுக்கு தைலாபுரத்திலிருந்து அறிவுறுத்தல் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். ‘வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை தி.மு.க கிடப்பில் போட்டுள்ளது. தொடர்ந்து தி.மு.க ஆட்சியை விமர்சித்தால், இட ஒதுக்கீடு என்பது கனவாகவே போய்விடும். அதைவைத்து அரசியல் செய்ய முடியாது’ என்று தலைமை சொல்லியிருக்கிறதாம். ‘தைலாபுரத்தின் இந்த முடிவு வெறும் இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்டது மட்டும்தானா அல்லது அறிவாலயத்துக்குப் புதிய ரூட் போடும் தூதா?’ என்பதெல்லாம் மருத்துவருக்கே வெளிச்சம்!’’

‘‘மதுரை மாநகராட்சி ஆணையர் மீது கோபத்தில் இருக்கிறதாமே பா.ஜ.க?’’

மிஸ்டர் கழுகு: சசிகலா எம்.எல்.ஏ? – அ.தி.மு.க-வைக் கைப்பற்ற பலே திட்டம்!
‘‘அப்படித்தான் சொல்கிறார்கள். தேசிய தூய்மைப் பணியாளர் நல ஆணையத் தலைவர் ம.வெங்கடேசன் சமீபத்தில் மதுரைக்கு வந்திருந்தார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்திய மாநகராட்சி தூய்மைப் பணியாளர் சங்கத்தினரைச் சந்தித்த ம.வெங்கடேசன், அங்கேயிருந்தபடியே மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனை நேரில் வரச் சொல்லியிருக்கிறார். ஆனால் ஆணையரோ, பல்வேறு அலுவல்கள் காரணமாக மெதுவாகத்தான் வந்தாராம். இதில் கடுப்பான ம.வெங்கடேசன் கோபத்தில் அங்கேயிருந்து விருட்டெனச் சென்றுவிட்டார். இது தனக்கு நேர்ந்த அவமதிப்பு எனக் குடியரசுத் தலைவர், தேசிய பட்டியலின ஆணையம், முதலமைச்சர் வரைக்கும் புகார் செய்துள்ளார் வெங்கடேசன். இந்தநிலையில்தான், மதுரைக்கு வந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்காக சிறப்பு ஏற்பாடுகளைச் செய்யச் சொன்ன உதவி ஆணையர் சண்முகத்தை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார் ஆணையர் கார்த்திகேயன். இந்த இரண்டு சம்பவங்களாலும் கார்த்திகேயன் மீது பா.ஜ.க-வினர் ஏக கோபத்தில் இருக்கிறார்களாம். அதேநேரம், தி.மு.க அரசு அவருக்கு ஆதரவாக இருக்கிறதாம்’’ என்றபடி கிளம்ப ஆயத்தமான கழுகார்,

‘‘அ.தி.மு.க-வில் தற்போது 66 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இவர்களில் ஒருவரை ராஜினாமா செய்யவைத்துவிட்டு, அவருடைய தொகுதியில் சுயேச்சையாகக் களமிறங்க சசிகலா ஆயத்தமாகி வருகிறாராம். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, இரண்டு வருடங்களுக்கு மேல் தண்டனை பெற்ற ஒருவர், தான் விடுதலையானதிலிருந்து அடுத்த ஆறு வருடங்களுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால், இந்தச் சட்டம் அமலாவதற்கு முன்னதாகவே தன்மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டதால், தனக்கு அந்தச் சட்டம் பொருந்தாது என்று சசிகலா தரப்பு வாதம் செய்கிறது. இதற்கான சட்ட நுணுக்கங்களை ஒரு வழக்கறிஞர் டீம் ஆராய்ந்துவரும் வேளையில், மற்றொரு டீம் பெரிய ஸ்வீட் பாக்ஸ்களுடன் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வை வளைக்க வலைவீசி வருகிறதாம். சசிகலா எம்.எல்.ஏ ஆகிவிட்டால், அதைவைத்தே அ.தி.மு.க-வைக் கைப்பற்றவும் திட்டங்கள் தீவிரமாகியிருக்கின்றன” என்றபடி சிறகுகளை விரித்தார்.

%d bloggers like this: