நாம் ஏன் கனவு காண்கிறோம்? நாம் கனவு காணும்போது என்ன நடக்கும்?

கனவும் நனவும்

எல்லோருக்கும் சொந்தமானது கனவு. எல்லோருக்கும் பிடித்தமானதும் கனவுதான். ஏனெனில் கனவுகள் நம்மை காயப்படுத்துவது இல்லை. எல்லோர் வாழ்விலும் அங்கமாக இருப்பதும் கனவுதான். காரணம், விடியும் ஒவ்வொரு பொழுதும் கனவுகளிலிருந்து

துவங்குகின்றன. கண்ட கனவு பலிக்குமா பலிக்காதா என்று காலையில் விட்டம் பார்த்து நான் அமர்ந்த தில்லை என்று எவராலும் சொல்ல இயலாது. காரணம், கனவு என்பது கண்களுக்குப் புலப்படாவிட்டாலும் எண்ணங்களுள் உயிர்வாழும் ஓர் இசை.

யோசித்து யோசித்து நாம் பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் கதை, கனவு.

கனவு என்பது ஒவ்வொரு மனதின் மயக்கம். எங்கோ மூளையின் ஒரு ஓரத்தில் இருக்கும் சிறு ஆசைகூட கனவாய் மலரும். கனவுகள் காட்சிகளின் பிரதிபிம்பங்கள்,அதிலிருந்து தெளிந்து எழுந்தவர்கள் திண்மம் ஆகிறார்கள், ஆழ்ந்து அமுங்கியவர்கள் காணாமல் கரைகிறார்கள். கண்ட கனவு எல்லாம் பழித்துவிட்டால் கடினங்கள் ஏதும் இல்லையே. கொண்ட கனவுகள் எல்லாம் நடந்து விட்டால் முயற்சிகள் தேவை இல்லையே.

சாமத்தில் வந்தாலும் சரி நடு இரவு வந்தாலும் சரி கனவுகள் விருப்பத்தின் வாசல்களே. கதவுகள் திறந்தால் மட்டுமல்ல, திறக்காமல் போனால்கூட அங்கிருந்தும் ஒரு பாதை ஆரம்பமாகும், என்ற உண்மையை ஒரு நாளும் நாம் ஒப்புக் கொண்டதில்லை. காரணம் கேட்டதெல்லாம் கிடைத்துவிட வேண்டும் என்ற கனவின் மாறிப்போன கூற்றில் உறுதி கொண்டவர்கள் நாம். கனவெனும் வாசல்களைத் திறக்க நாம் நிஜத்தில் வாழ வேண்டும், கற்பனையில் அல்ல.

வேலைக்கு போகலாமா? இல்லை, மேற்படிப்புக்கு செல்லலாமா? இல்லை, கொஞ்ச காலம் காத்திருந்தான் பாக்கலாமா? இல்லை, கல்யாணம் செய்து கொள்ளலாமா? கேட்டுக்கேட்டு கேள்விகளால் மட்டுமே கனவு கண்டு கொண்டிருப்பதால்தான் கனவின் பொருள் மாறிப்போனது. என்ன செய்தாலும் எப்படி செய்தாலும் எப்பொழுது செய்தாலும், செய்யும் காரியம் மனதை மகிழ்விக்குமா, பின்னாளில் வாழ்ந்த வாழ்வை எண்ணி திருப்தி கொள்ள வைக்குமா என்று சிந்திக்க வேண்டுமே தவிர, கண்ட கனவுகள் எல்லாம் இதன்வழி நிறைவேறிவிடுமா என்ற சிந்தனையை குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது.காரணம் கனவு இலட்சியத்தின் ஆரம்ப நிலையாக இருக்க வேண்டுமே தவிர முடிவாகி விடக்கூடாது.

கனவை கவிதை ஆக்கியவர்கள் பலபேர் அப்படி இருக்கையில் ஏன் சில கனவுகள் இதயத்தை இறுக்கிப் பிடிக்கின்றன . ஏன் சில கனவுகள் பயத்தோடு எண்ணங்களை பிசைகின்றன. ஏன் கனவுகள் பல காலை வேலைகளை கடினங்களாக்குகின்றன. சிந்தித்து பார்த்தால் அக்கனவுகளெல்லாம் பலர் நம்முள் திணிக்கும் கனவுகள்.

என்னவாக நாம் வேண்டும், இதுவா ஏதுவாக நாம் ஆக வேண்டும், எப்படியாக நாம் மாற வேண்டும் என்றெல்லாம் இந்த உலகம் நம் மீது திணிக்கும், அக்கனவுகளே நம் இதயத்தில் துளை இடுகின்றன. விளைவு கனவில் தொடங்கி கல்யாணம் வரை யாரோ ஒருவர் சொல்லியதால் செய்ததாக முடிந்துவிடுகிறது.

படிக்க வேண்டுமா, வேலைக்கு செல்ல வேண்டுமா, கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமா, இல்லை இந்த உலகை சுற்றி வர வேண்டுமா, எதுவானாலும் பிறர் கனவில் நாம் வாழ்ந்தால் பிடிவாதம் இன்றி நாம் வாழ்ந்தால் புரண்டுவிடும் வாழ்க்கை. தவிழ்ந்தாலும் சரி, தவற விட்டாலும் சரி, தடம் மாறாத வரையில் தன் கனவுகளை சுமக்கும் தைரியமுள்ள உள்ளங்கள் ஒருநாள் தன்னிறைவு அடையும் என்பது எவராலும் மாற்ற முடியாத மறுக்க முடியாத உண்மை. ஆனால் காத்திருக்க தெரிந்த கண்களால் மட்டுமே தன் கனவுகளை கண்டுகொள்ள இயலும்.

தோல்வியானாலும் வெற்றி ஆனாலும், நம் கனவில் நம்பிக்கை கொள்வோம். என்ன செய்தாலும் சரி, எதுவானாலும் சரி நம் முடிவுகளை நாம் எடுப்போம். விளைவுகள் எதுவானாலும் பெருமையுடன் ஏற்போம்.

கனவு காண்போம் கண் விழிக்கையில் அக்கனவின் எழுத்தாளராக நாம் இருப்போம்.

%d bloggers like this: