உங்கள் சருமம் வறட்சியாக உள்ளதா?? மினுமினுப்பாக மாற இதை செய்து பாருங்கள்..

தற்போது உள்ள காலகட்டத்தில், பலரின் சருமம் மிகவும் வரண்டு காணப்படுகிறது. இதற்க்கு முக்கிய காரணம் சரியான பரமரிப்பு இல்லாததும், வெயில் தூசி என்று பல பாதிப்புகளுக்கு உள்ளாவதும் தான்.

இது ஆரோக்கியத்திற்குரியது. அதே நேரத்தில் அழகை தந்து இளமையை தக்கவைக்கவும் தர்பூசணி உதவுகிறது. சருமத்தின் வறட்சியை போக்கி, ஜொலிப்பை தருகிறது. ஒரு துண்டு தர்பூசணி பழத்தை வாங்கி அதன் தசைப்பகுதியை எடுத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்றாக பூசுங்கள். பதினைந்து நிமிடங்கள் கழித்து இளஞ் சுடுநீரில் கழுவுங்கள். அதன் பின்பு குளிர்ந்த நீராலும் ஒருமுறை கழுவுங்கள். இது சருமத்தின் பொலிவுக்கு வழிவகுக்கும். தர்பூசணி பழக்கூழை இரண்டு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து, அதில் தயிர் கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவினால் சருமத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் நீங்கும்.

தயிருக்கு பதில் பாலும் சேர்த்துக்கொள்ளலாம். இத்துடன் இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்துக்கொண்டால் அது சிறந்த ஸ்கிரப் ஆக பயன்படும்.

%d bloggers like this: