Monthly Archives: திசெம்பர், 2021

அமைச்சர்களுக்கு வார்னிங்… அதிருப்தியில் நிர்வாகிகள்… டென்ஷனில் ஸ்டாலின்!

உதயநிதி பட்டாபிஷேகம், மாவட்டச் செயலாளர்கள் – அமைச்சர்கள் செய்யும் ‘ஸ்வீட் பாக்ஸ்’ தகராறுகள், உட்கட்சிப் பஞ்சாயத்துகள்…’ என்று பெரும் எதிர்பார்ப்பு அலைகளோடு டிசம்பர் 18-ம் தேதி கூட்டப்பட்ட தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் கூட்டம், முதல்வர் ஸ்டாலினின் வாள்வீச்சால் அதிருப்தியோடு கலைந்துபோயிருக்கிறது. கூட்டத்தில் அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கு வார்னிங் விட்டதோடு, கழக நிர்வாகிகளுக்கு ஏகப்பட்ட பொறுப்புச் சுமைகளையும்

<!–more–>

ஏற்றிவைத்திருக்கிறார் ஸ்டாலின். “ஏற்கெனவே செலவு கழுத்தை நெரிக்குது. இதுல இது வேறயா?” என்று அதிருப்தியில் புலம்புகிறார்கள் நிர்வாகிகள். ‘பரபரப்பாகக் கூட்டப்பட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன?’ என தி.மு.க சீனியர்கள் சிலரிடம் பேசினோம். கலவையான செய்திகளைக் கொட்டினார்கள்!

பொருள்’ இல்லாத கூட்டம்… குறுக்கால் ஓடிய அன்பில் மகேஷ்!
நம்மிடம் பேசிய தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சிலர், “வழக்கமாக தி.மு.க கூட்டங்கள் கூட்டப்படும் போதெல்லாம், எதற்காக அந்தக் கூட்டம் கூட்டப்படுகிறது என்கிற ‘பொருள்’ அழைப்பிதழிலேயே இருக்கும். ஆனால், டிசம்பர் 18 கூட்டத்துக்கு அப்படி எந்தப் பொருளும் இடம்பெறவில்லை. இதைவைத்தே, ‘உதயநிதியை முன்னிலைப்படுத்துவதற்காகத்தான் கூட்டம் நடைபெறுகிறது’ என்கிற பரபரப்பு எழுந்தது. போதாத குறைக்கு, ‘கூட்டத்தில் உதயநிதியை அமைச்சராக்க முன்மொழியுங்கள். அவர் தலைமையில்தான் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் நடைபெற வேண்டுமெனச் சொல்லுங்கள்…’ என்று கழக நிர்வாகிகளிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் தரப்பு கேன்வாஸ் செய்தது. அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு வந்த சிலரிடம், ‘சின்னவருக்கு சப்போர்ட் பண்ணி உங்களை மாதிரி மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவங்க பேசுனாத்தான் தலைவரே யோசிப்பாரு. மைக் கிடைச்சவுடனே சின்னவரைப் புகழ்ந்து பேசுங்க’ என்றனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே இந்த அலப்பறை ஆரம்பித்துவிட்டதால், கட்சி சீனியர்கள் டென்ஷனானார்கள்.
‘தன் மகனை அமைச்சராக்கணும்னு தலைவர் உத்தரவு போட்டா யார் மீறப்போறாங்க? என்னமோ இவரு முன்னெடுத்துத்தான் உதயநிதிக்குப் பதவி வாங்கித் தரப்போற மாதிரி ஏன் அன்பில் மகேஷ் குறுக்காலயும் மறுக்காலயும் ஓடிக்கிட்டு இருக்காரு’ என்று சீனியர்கள் முகம் சுளித்தனர். இந்தத் தகவலெல்லாம் தலைமைக்குப் போனவுடன், ‘பேராசிரியர் நூற்றாண்டுவிழா, உறுப்பினர் சேர்க்கை, உள்ளாட்சித் தேர்தல். இது மூன்றும்தான் சப்ஜெக்ட். வேறு எதைப் பற்றியும் பேசக் கூடாது’ என்ற கறார் உத்தரவு தலைமையிலிருந்து வந்தது. இதனால், கூட்டத்தில் உதயநிதி குறித்து ஒருவரும் வாய் திறக்கவில்லை” என்றனர்.
சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் நடைபெறும் முக்கியக் கூட்டமென்பதால், மாலை 5:30 மணிக்கே பெரும்பாலான நிர்வாகிகள் கலைஞர் அரங்கத்துக்கு வந்துவிட்டனர். நிர்வாகிகளின் கார் பார்க்கிங் செய்வதற்கு இடமில்லாததால், மாநகராட்சிக்காக ஹயாத் ஓட்டல் ஒதுக்கிய ஓ.எஸ்.ஆர் நிலத்தில் கார்கள் பார்க் செய்யப்பட்டன. சரியாக மாலை 5:43-க்கு முதல்வர் ஸ்டாலின் கூட்டத்துக்கு வந்தார். அவர் உள்ளே சென்ற பிறகுதான் அமைச்சர்கள் சக்கரபாணி, ரகுபதி இருவரும் அரக்கப் பறக்க அரங்கத்துக்குள் தாமதமாக நுழைந்தார்கள். உதயநிதி, அன்பில் மகேஷ், தாயகம் கவி ஆகியோர் கூட்டத்தின் கடைசியில் அமர்ந்திருந்தனர்.

“தெருவுலதான் நிக்கணும்…” – அதிருப்தியில் நிர்வாகிகள்!
ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தவை குறித்து, தி.மு.க இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலரிடம் பேசினோம். “அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வரவேற்புரை நிகழ்த்தினார். அடுத்ததாக, செய்தித் தொடர்புத்துறைச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ‘பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டுவிழாவை தி.மு.க இந்த வருடம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்’ என்கிற தீர்மானத்தை வாசிக்கும்போதே நிர்வாகிகளின் முகத்தில் ஈயாடவில்லை. ‘அடுத்த ஒரு வருஷத்துக்குத் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடத்துங்க. ஒவ்வொரு மாவட்டத்துலேயும் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்த தகவலை அறிவாலயத்துக்கு அனுப்பிவைக்கணும்’ என்று இளங்கோவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, நிர்வாகிகளிடம் அனல் பற்றிக்கொண்டது. ‘ஏற்கெனவே கட்சி செலவு கழுத்தை நெரிக்குது. இதுல ஓராண்டுக்கு விழா நடத்தணுமாமே… தெருவுலதான் நிக்கணும்போல’ என்று அதிருப்தியில் தங்களுக்குள் கடுகடுத்துக் கொண்டனர். அடுத்ததாக துரைமுருகன் மைக் பிடித்தார்.
கடந்த சில வாரங்களாகவே முதல்வர் ஸ்டாலின் மீது துரைமுருகன் அப்செட்டில் இருந்தார். பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் இணைப்பு விழாவுக்குத் தன்னை அழைக்காதது, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் சந்திப்பின்போது தன்னை உடன் வைத்திருக்காதது என முதல்வர்மீது அவருக்குச் சில வருத்தங்கள் இருந்தன. ‘தம்பி இப்படி பண்ணிருச்சே…’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம்கூட புலம்பியிருந்தார். இந்தச் சூழலில்தான், சில தினங்களுக்கு முன்பாக, திடீரென முதல்வர் ஸ்டாலினிடமிருந்து அவருக்கு அழைப்பு சென்றிருக்கிறது. ‘ஆட்சிக்கே நீங்கதானே மூத்தவர். மனசுல எதுவும் வெச்சுக்காதீங்க’ என்று முதல்வர் சொன்னதும், உச்சி குளிர்ந்திருக்கிறார் துரைமுருகன். அதன் வெளிப்பாடாக, ‘அண்ணா, கலைஞருக்குப் பிறகு தம்பியைத் தலைவராக ஏற்றுக்கொண்டேன்’ என்று ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்டாலினைப் புகழ்மழையால் நனைத்துவிட்டார். இந்தக் கூட்டத்தில், ‘ஸ்டாலினின் சட்டமன்ற உரை’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த நூல் குறித்துச் சிறிது நேரம் ஆ.ராசா உறையாற்றி அமர்ந்த பிறகு, இறுதியாகப் பேச எழுந்தார் ஸ்டாலின். முதல்வரின் முகத்தில் டென்ஷன் ரேகைகள் படர்ந்திருந்தன.

ஆளுநரிடம் அண்ணாமலை கொடுத்த ஃபைல்! – டென்ஷனில் அறிவாலயம்…

கையில் ஃபைலுடன் என்ட்ரி கொடுத்த கழுகார், ‘‘ஆளுநர் மாளிகைக்கு அண்ணாமலை சென்றபோது கையில் கொண்டு சென்ற ஃபைல் விவகாரம் குறித்த தகவல்கள் இப்போது கசியத் தொடங்கியிருக்கின்றன. அது தொடர்பாக சோர்ஸ் ஒருவர் கொடுத்த ஃபைல் இது’’ என்று ஃபைலைப் புரட்டியபடியே உரையாடலைத் தொடங்கினார்…
‘‘ஆளுநர் சந்திப்புக்கு முன்னரே அண்ணாமலை, ‘பா.ஜ.க ஆதரவாளர்களைத் தமிழக அரசு குறிவைத்துக் கைதுசெய்கிறது’ என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் சமூக

Continue reading →

ஸ்டாலினுக்கு எதிராக மூத்த அமைச்சர்கள்?

பல்வேறு கருத்து மாறுபாடுகள் தமிழக அரசையும் அசைத்துப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது என விஷயமறிந்தவர்களShow More
தலைப்பைப் படித்ததும் சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். சிலருக்கு அதிர்ச்சியாகக்கூட இருக்கலாம். இதெல்லாம் நடக்கிற விஷயமா எனப் பலரும் எண்ணலாம். ஆனால் தேசிய அரசியலில் வி.பி சிங், ஐ.கே குஜ்ரால் தொடங்கி பல்வேறு மாநிலங்களில் ஆட்சிகள் கவிழ்ந்த நேற்றைய வரலாற்றைக் கொஞ்சம் அலசினால் எல்லாவற்றின் பின்னணியிலும் அரசியல் கருத்து மாறுபாடுகள் இருப்பதை புரிந்துகொள்ள முடியும்.
Continue reading →

ஸ்டாலினின் சேலம் விசிட்… தாண்டவமாடிய அமைச்சர் நேரு!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு நாடாளுமன்றத்தில் மெளன அஞ்சலி செலுத்தும் காட்சிகள் டி.வி-யில் ஓடிக்கொண்டிருந்தன. அமைதியாக நுழைந்த கழுகார், இரண்டு நிமிடங்கள் மெளனமாக நின்று அஞ்சலி செலுத்தினார். தொண்டையைக்

Continue reading →

‘ஷூட்டிங்’ முடிவது எப்போது? – உதயநிதிக்காக காத்திருக்கும் தி.மு.க!

கேபினுக்குள் என்ட்ரி கொடுத்த கழுகார், உரிமையோடு லேப்டாப்பை தனது பக்கம் திருப்பி கவர் ஸ்டோரியை பொறுமையாக வாசித்தார். “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக அ.தி.மு.க-வில் உட்கட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்கள். அவ்வளவு அவசரம்… கவர் ஸ்டோரியில் இல்லாத அ.தி.மு.க தகவல்கள் சில என்னிடமும் இருக்கின்றன” என்றபடியே உரையாடலைத் தொடங்கினார் கழுகார்…

<!–more–>

“அ.தி.மு.க செயற்குழு முடிந்த மறுதினமே உட்கட்சித் தேர்தலை அறிவித்ததற்குக் காரணம் இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க-வுக்குப் பாதகமாக வந்தால், தனது தலைமைக்குச் சிக்கல் இன்னும் அதிகரித்துவிடும் என்று கணக்கு போட்டே எடப்பாடி இந்த முடிவை எடுத்து, பன்னீரிடமும் பக்குவமாகப் பேசி சம்மதிக்கவைத்தாராம். இன்னொரு பக்கம் கொடநாடு வழக்கில் தனக்குச் சிக்கல் ஏற்பட்டாலும், பதவிக்கு பங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு என்கிறார்கள். இதற்கிடையே செயற்குழு நடந்த அதே டிசம்பர் 1-ம் தேதியன்று மாலை பெங்களூரு புகழேந்தி, டெல்லியில் தேர்தல் கமிஷனரைச் சந்தித்து, ‘ஏற்கெனவே எடப்பாடி, பன்னீர் தரப்பினருக்கு இரட்டை இலை மற்றும் கட்சியின் பெயரைப் பயன்படுத்துவதற்குக் கொடுத்திருக்கும் அனுமதியை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற வேண்டும்’ என்று மனு கொடுத்திருக்கிறார். கூடவே, ‘கடந்த நான்கு வருடங்களில் கட்சியின் நிர்வாகத்தைத் தவறாக வழிநடத்தினார்கள். தேர்தல் கமிஷன் தந்த அனுமதியையும் தவறாகப் பயன்படுத்தினார்கள்’ என்று சில ஆதாரங்களையும் ஆணையத்திடம் கொடுத்திருக்கிறார்.”
அது சரி… மாஜி அமைச்சர் குறித்த சர்ச்சையைக் கேள்விப்பட்டீரா?’’
“ம்ம்… அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான உடுமலை ராதாகிருஷ்ணன் படத்தைப் போட்டு, ‘உடுமலை நாயகரே வருக… வருக…’ என்று உதயசூரியன் சின்னம், தி.மு.க கொடி, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஆகியோரின் படங்களையெல்லாம் போட்டு சமூக வலைதளங்களில் வைரலாக்கிவிட்டனர். தொடர்ந்து, அன்வர் ராஜா அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட அன்றே உடுமலை ராதாகிருஷ்ணனும் அ.தி.முக-விலிருந்து நீக்கப்பட்டதாக பன்னீர், எடப்பாடி கையெழுத்துடன் ஓர் அறிக்கை வெளியானது. சில மணி நேரத்துக்குப் பிறகு அது போலி என்று அ.தி.மு.க ஐடி விங் அறிவித்தது. இதையடுத்து டிசம்பர் 2-ம் தேதி மதியம் உடுமலை ராதாகிருஷ்ணன் தரப்பில் ‘அ.தி.மு.க லெட்டர்பேடு போல போலியாகத் தயார் செய்து, சமூக வலைதளங்களில் பரப்பிய நபர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று திருப்பூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். தொடர்ந்து அருண்பிரசாத் என்பவரை போலீஸ் கைதுசெய்துள்ளது. இதையெல்லாம் கூட்டிக்கழித்து கணக்கு போடும் கட்சி நிர்வாகிகளோ, ‘நெருப்பில்லாமல் புகையுமா? உள்ளுக்குள் என்னமோ நடந்திருக்கிறது’ என்று கண்சிமிட்டுகிறார்கள்
அறிக்கையைவைத்து ஆழம் பார்க்கிறார்கள் என்று சொல்லும்!”
“அடுத்த விஷயத்துக்கு வருகிறேன்… ஆளுங்கட்சிக் கூட்டணிக்குள் களேபரங்கள் தொடங்கிவிட்டன. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணியில் தொடர்வது கடினம் என்று அறிவாலயத்தில் முணுமுணுப்பு ஆரம்பித்துவிட்டது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை, கோவை, திருப்பூர் மாநகராட்சிகள் வேண்டும் என்று காம்ரேடுகள் இப்போதே துண்டுபோட ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் அந்த மூன்று மாநகராட்சிகளின் ஆளுங்கட்சி நிர்வாகிகள் ஏகத்துக்கும் கடுப்பில் இருக்கிறார்கள். ‘உள்ளாட்சித் தேர்தலிலும் அவர்களை எதற்காகத் தூக்கி சுமக்க வேண்டும்?’ என்று தி.மு.க-வின் சீனியர் நிர்வாகிகளே ஸ்டாலினிடம் போட்டுக்கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். போதாத குறைக்கு காங்கிரஸ் கட்சியும் மேயர் பதவியில் தங்களுக்குரிய பிரதிநிதித்துவத்தைக் கொடுக்க வேண்டும் என்று மறைமுகமாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டது. இதையடுத்து, ‘கொடுப்பதை வாங்கிக்கொண்டால் கூட்டணி… இல்லாவிட்டால் தனித்தே களம் காண்போம்’ என்கிற முடிவை எடுக்கப்போகிறதாம் அறிவாலயம்!”
“ஒப்பந்ததாரர் ஒருவர் தெறித்து ஓடிய கதை தெரியுமா?”
“கதையல்ல நிஜம்… வடமாவட்டம் ஒன்றில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பணி ஒன்றுக்கு டெண்டர் விடப்பட்டது. இன்ஷியல் அமைச்சரின் துறைக்குள் நடந்த அந்த டெண்டரை எடுக்க, சிலர் மட்டுமே முன்வந்துள்ளனர். அமைச்சர் தரப்பில் சில கண்டிஷன்களை வைக்கவே… அனைவரும் பின்வாங்கிய நிலையில், ஒருவர் மட்டுமே டெண்டர் எடுக்க முன்வந்திருக்கிறார். அதன் பிறகு அந்த கண்டிஷன்களுடன், அமைச்சர் தரப்பு கேட்ட ஸ்வீட் பாக்ஸைக் கேட்ட அந்த நபர் ஆடிப்போய்விட்டாராம். ‘இதோ வீட்டுக்குச் சென்று எடுத்துவருகிறேன்’ என்று சொன்ன அந்த நபர் அதன் பிறகு அமைச்சர் இருந்த திசைப் பக்கம்கூட திரும்பவில்லை. கடைசிவரைக்கும் காத்திருந்த அமைச்சர் தரப்பு, வேறு யாரும் டெண்டர் எடுக்க முன்வராததால் டெண்டரையே ஒத்திவைத்திருக்கிறது.”
சபாநாயகர் மீதே வில்லங்கம் கிளம்பியுள்ளதே!”
“ஆமாம். தமிழக சபாநாயகர் அப்பாவு மீது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தாமோதரன் என்பவர் 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தனது நிலத்தை அபகரித்துவிட்டதாகப் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அப்பாவு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நீதிமன்றம், ‘அப்பாவு மீதான வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுப்புங்கள்’ என்று உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே, அப்பாவு மீது கால்வாயை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், மீண்டும் அவர்மீது நில அபகரிப்பு புகார் வந்திருப்பது கட்சித் தலைமையிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.”
“வடகிழக்குப் பருவமழைக்குப் போட்டியாக ‘அன்பு’ மழை பொழிந்ததைக் கவனீத்தீரா?”
“கவனித்தேன்… கவனித்தேன்… ‘உதயநிதி அமைச்சராக வேண்டும்’ என்கிற அன்பில் மகேஷ் வைத்த கோரிக்கையைத்தானே சொல்கிறீர்கள்… தனது பிறந்தநாள் அன்று அவர் இதைச் சொல்லியிருக்கா விட்டால்தானே ஆச்சர்யம். ‘நண்பேன்டா’ ரோலை அவர் மிக நன்றாகவே செய்கிறார். எல்லாம் ஏற்கெனவே சித்தரஞ்சன் சாலையில் எழுதி முடிக்கப்பட்ட ஸ்கிரிப்ட் என்கிறார்கள். முதன்மையானவர் தரப்பில் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்ட நிலையில், உதயநிதியின் கால்ஷீட்டுக்காகத்தான் கட்சியே வெயிட்டிங்காம். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் சினிமா ஷூட்டிங்கில் பிஸி என்பதால், அதன் பிறகுதான் இந்த ஷூட்டிங்குக்கு நேரம் கொடுப்பார் என்கிறார்கள்.”
அப்படியென்றால் காமெடிக் காட்சிகளுக்குப் பஞ்சமிருக்காது என்று சொல்லும்!”

“சினிமாவைத்தானே சொன்னீர்… நம்பிவிட்டேன். சரி, சினிமாவை மிஞ்சும் சில காட்சிகளை நான் சொல்கிறேன். தனது பிறந்தநாளை முன்னிட்டு அன்பில் மகேஷ் டிசம்பர் 2-ம் தேதியன்று அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டுக்கே சென்று ஆசி வாங்கியிருக்கிறார். இதையடுத்து, எதிரும் புதிருமாக நிற்கும் இருவரின் ஆதரவாளர்களும் ஜெர்க் ஆகியிருக்கிறார்கள். அடுத்ததாக முதல்வரிடமும் ஆசி வாங்கிவிட்டு, தனி விமானம் ஏறி ஷீரடி சாய்பாபாவை தரிசிக்கச் சென்றுவிட்டார் அன்பில். முதல்வர் மனைவியின் அன்புக்கட்டளையாம் இது!”

“அட… டைட்டில் தயாராகிவிட்டதே…” என்ற நமது கமென்ட்டைக் கண்டுகொள்ளாத கழுகார், “உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போவது கிட்டத்தட்ட உறுதி என்கிறார்கள். ஜனவரி இறுதியில் என்று முதலில் சொன்னவர்கள், இப்போது பிப்ரவரி என்கிறார்கள். குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையே பொங்கல் பரிசாக அறிவித்துவிட்டு, தேர்தலைச் சந்திக்கலாம் என்று சில மூத்த அமைச்சர்கள் முதல்வரிடம் சொல்லியிருக் கிறார்கள். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனோ, ‘நிதி நிலைமை தெரிஞ்சுதான் பேசுறீங்களா?’ என்று டென்ஷன் ஆகிவிட்டாராம். ‘ஏற்கெனவே அறிவித்த திட்டங்களுக்கே நிதியில்லை. இதற்கு எங்கே போவது?’ என்பது அவரது கவலை. இதையடுத்து, கடன் வாங்கியாவது இந்தத் திட்டத்தை செயல்படுத்தலாமா என்று யோசித்துவருகிறது முதல்வர் அலுவலகம்” என்ற கழுகாருக்கு சூடாக மசால் டீயை நீட்டினோம். அதைப் பருகியபடியே அடுத்த செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்…

“விரைவில் மின்வாரியத்தில் டிஜிட்டல் மீட்டர் டெண்டர் விடப்போகிறார்கள். போக்கு வரத்துத்துறையிலும் ‘நிர்பயா’ திட்ட நிதியின்கீழ் பேருந்துகளுக்கு சிசிடிவி கேமராக்களை கொள்முதல் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். மேற்கண்ட டெண்டர்களை தனியாருக்குக் கொடுக்காமல் அரசு நிறுவனமான ‘எல்காட்’டுக்குக் கொடுத்தால் கமிஷன் சச்சரவுகள் இல்லாமல், தரமான பொருள்களைக் கொள்முதல் செய்யலாம் என்று அரசுக்கு சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தரப்பு ஆலோசனை கொடுத்திருக்கிறது” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.