இணையச் சேவையின் டௌன்லோடிங் மற்றும் அப்லோடிங் டேட்டா ஸ்பீட் அறிய

நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன், லேப்டாப் அல்லது கணினி என்று ஏதுவாக இருந்தாலும், அதில் ஒரு அருமையான இணைய இணைப்பு இருப்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமானது.
இணையச் சேவையின் வேகம் எதை வைத்துச் சிறப்பானதாகத் தரம் பிரிக்கப்படுகிறது?

உங்கள் ஸ்மார்ட்போன், லேப்டாப் அல்லது கணினியில் இப்போது செயல்பாட்டில் உள்ள இணையச் சேவையின் வேகம் எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிவதற்கு முன்னால், உங்களுடைய இணையச் சேவையின் வேகம் எதை வைத்துச் சிறப்பானதாகத் தரம் பிரிக்கப்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு, பின் நேரடியாக விஷயத்திற்குச் செல்லலாம். சிறப்பான இணையச் சேவையை அடைய இரண்டு முக்கிய காரணிகளைப் பற்றி நாம் தெரிந்துகொள்வது அவசியம். இது உங்களுடைய இணையச் சேவையின் டௌன்லோடிங் மற்றும் அப்லோடிங் டேட்டா ஸ்பீட் பற்றினது.

டௌன்லோடிங் ஸ்பீட் மற்றும் அப்லோடிங் டேட்டா ஸ்பீட் என்றால் என்ன?

டௌன்லோடிங் மற்றும் அப்லோடிங் டேட்டா ஸ்பீட் என்பது பதிவிறக்க வேகம் மற்றும் பதிவேற்ற வேகம் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் பயன்படுத்தும் இணையச் சேவையின் பதிவிறக்க வேகம் மற்றும் பதிவேற்ற வேகம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாட்டைப் பின்வரும் வழிகளில் விளக்கலாம். பதிவிறக்க வேகம் என்பது இணையத்திலிருந்து உங்கள் கணினிக்கோ அல்லது உங்களின் ஸ்மார்ட்போனிற்கோ வரும் டிஜிட்டல் தரவு மாற்றப்படும் விகிதத்தைக் குறிக்கிறது. அதே சமயம் பதிவேற்ற வேகம் என்பது உங்கள் கணினியிலிருந்தோ அல்லது போனில் இருந்தோ ஆன்லைன் தரவு மாற்றப்படும் வீதமாகும்.

உங்களுடைய இணையம் என்ன வேகத்தில் செயல்படுகிறது?
இந்த இரண்டு முக்கிய காரணிகளை வைத்தே உங்களுடைய இணைய சேவை செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இப்போது நீங்கள் பயன்படுத்தும் இணையச் சேவையில், இந்த இரண்டு முக்கிய காரணிகளும் எப்படி செயல்படுகிறது? என்ன வேகத்தில் செயல்படுகிறது என்பதைப் பற்றிக் கண்டுபிடிப்பது மிகவும் எளிதானது. இதற்கென்று நீங்கள் தனியாக ஆப்ஸ் எதுவும் பதிவிறக்கம் செய்ய வேண்டியது இல்லை. ஆன்லைனில் இணைய வேகத்தை கணக்கிட ஏராளமான ஸ்பீட் டெஸ்ட் கருவிகள் உள்ளன. இவை உங்கள் இணைய வேகத்தைச் சரிபார்க்க உதவுகின்றன.

எதற்கெல்லாம் இணைய வேகம் மிக முக்கியானது?
இணைய வேகத்தை மிக எளிமையான வழிமுறையில் நீங்கள் சில நொடியில் அறிந்துகொள்ளலாம். உங்கள் மொபைல் மற்றும் பிராட்பேண்ட் இணைய வேகம் என்று ஏதுவாக இருந்தாலும், அதை நீங்கள் ஆன்லைனில் சரிபார்க்கலாம். வளர்ந்துவரும் இந்த ஆன்லைன் உலகில், நல்ல இணைய இணைப்பு இருப்பது மிகவும் முக்கியம். உங்கள் வாட்ஸ்அப் செய்திகளைச் சரிபார்க்கவும், யூடியூப் க்களைப் பார்க்கவும், திரைப்படங்களை ஸ்ட்ரீம் செய்யவும் கூட உங்களுக்கு வேகமான இணைய இணைப்பு தேவை.

உங்களுடைய சராசரி இன்டர்நெட் வேகம் எவ்வளவு இருக்க வேண்டும்?
ஆனால் உங்கள் இணைய வேகம் உண்மையில் வேகமாக உள்ளதா இல்லையா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவில், சராசரி இணைய வேகம் 42.86 Mbps ஆகும். இருப்பினும், ஒரு நல்ல பதிவிறக்க வேகம் என்பது சுமார் 204 Mbps வரை செல்கிறது. அதே நேரத்தில் சராசரி பதிவேற்ற வேகம் 74 Mbps ஆகும். நல்ல பதிவேற்ற வேகத்திற்கு, சராசரி குறைந்தபட்சம் 3 Mbps ஆக இருக்க வேண்டும் என்று இணையச் சேவை வழங்குனர்கள் தெரிவிக்கின்றனர். இணைய வேகத்தை அறிந்துகொள்ளக் கீழே உள்ள ஒரு சில வழிமுறையைப் பின்பற்றினால் போதும்.

எந்த ஆப்ஸையும் பதிவிறக்கம் செய்யாமல் இன்டர்நெட் வேகத்தை எப்படி கணக்கிடுவது?
எந்த செயலியையும் பதிவிறக்கம் செய்யாமல், உங்கள் இணைய வேகத்தை நிகழ் நேரத்தில் சரிபார்க்க முதலில் உங்களுடைய மொபைல் டேட்டா அல்லது வைஃபை ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும். இது உங்கள் மொபைல் இணையம் அல்லது பிராட்பேண்ட் இணைய இணைப்பு என்று ஏதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் இணைய வேகத்தைச் சரிபார்க்கப் பிரத்தியேக ஆப்ஸ் மற்றும் கருவிகள் இருந்தாலும், அதற்கான எளிதான வழியை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். உங்கள் இணைய வேகத்தைச் சரிபார்க்க இதைப் பின்பற்றவும்.

இந்த எளிய வழியை பின்பற்றி உங்கள் இணைய வேகத்தை தெரிந்துகொள்ளலாம்

  • உங்கள் ஸ்மார்ட் போன் அல்லது கணினி அல்லது லேப்டாப்பில் Chrome பிரௌசரைத் திறக்கவும்.
  • கூகிள் Chrome சர்ச் பாரில் இணைய வேக சோதனை (internet speed test) என டைப் செய்யவும்.
  • தேடல் முடிவுகளின் மேல் இணைய வேக சோதனை பற்றிய தகவலுடன் ஒரு பெட்டி தோன்றும்.
  • “run speed test” விருப்பத்தைத் தட்டவும்.
  • இணைய வேகச் சோதனை உங்களுக்குப் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகத்தை வழங்கும்.

ஆன்லைனில் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள கிடைக்கும் சேவைகள்

  • இது தாமதம் மற்றும் சேவையகத்தையும் காண்பிக்கும், மேலும் உங்கள் இணைய வேகம் வேகமாக உள்ளதா இல்லையா என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும்.
  • நீங்கள் அதே தேடல் முடிவுகளில் இருக்கும்போது, Fast.com மற்றும் Ookla வழங்கும் Speedtest போன்ற பிற தளங்கள் மூலமும் உங்கள் இணைய வேகத்தைச் சரிபார்க்கத் தேர்வு செய்யலாம்.
  • இந்த கருவிகள் Android மற்றும் iOS பயன்பாடுகளாகவும் கிடைக்கின்றன.
  • உங்கள் வசதிக்கேற்ப இந்த சேவையை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்த முறையில் உங்களுடைய இணைய வேகம் எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிந்துகொள்ளுங்கள்.
%d bloggers like this: