எஸ்பிஐ வங்கியில் லாக்கர் வசதி குறித்தும், அதன் கட்டண விபரங்கள், விதிமுறைகள்

எஸ்பிஐ வங்கியில் வாடிக்கையாளர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் லாக்கர் வசதி குறித்தும், அதன் கட்டண விபரங்கள், விதிமுறைகள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் இருக்கும் லாக்கர் வசதியை பெரும்பாலான

வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர். நகை மற்றும் முக்கியமான ஆவணங்களை பாதுகாக்க லாக்கரே சிறந்த இடம் என அவர்கள் கருதுகின்றனர். எனவே பலரும் தங்கள் வசதிகேற்ப வங்கி லாக்கரை முறைப்படி பெற்றுக் கொள்கின்றனர். இதற்கு வங்கி நிர்வாகம் குறிப்பிட்ட தொகையை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கிறது. அதுக்குறித்து தான் பார்க்க போகிறோம்.

எஸ்பிஐயில் சிறிய லாக்கர் மற்றும், மீடியம், லார்ஜ், எக்ஸ்ட்ரா லார்ஜ் என நான்கு வகையான லாக்கர்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. சிறிய அளவிலான லாக்கருக்கு வசூலிக்கப்படும் கட்டணம் ரூ. 2000 பிளஸ் ஜிஎஸ்டி. ( நகர்புறம் மற்றும் மெட்ரோ ) .அதே போல் ரூ. 1500 பிளஸ் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும் ( கிராமப்புறங்களில் மற்றும் செமி அர்பன் நகரங்களில் ) என நிர்ணியிக்கப்பட்டுள்ளது.

மீடியம் லாக்கர் கட்டணம் ரூ. 4000 பிளஸ் ஜிஎஸ்டி. ( நகர்புறம் மற்றும் மெட்ரோ ) .அதே போல் ரூ. 3000 பிளஸ் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும் ( கிராமப்புறங்களில் மற்றும் செமி அர்பன் நகரங்களில் ) வசூலிக்கப்படுகிறது.

லார்ஜ் லாக்கர் கட்டணம் ரூ. 8000 பிளஸ் ஜிஎஸ்டி. ( நகர்புறம் மற்றும் மெட்ரோ ) .அதே போல் ரூ. 6000 பிளஸ் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும் ( கிராமப்புறங்களில் மற்றும் செமி அர்பன் நகரங்களில் ) நிர்ணியிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ-யின் எக்ஸ்ட்ரா லார்ஜ் லாக்கர் கட்டணம் எரூ. 12000 பிளஸ் ஜிஎஸ்டி. ( நகர்புறம் மற்றும் மெட்ரோ ) .அதே போல் ரூ. 9000 பிளஸ் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும் ( கிராமப்புறங்களில் மற்றும் செமி அர்பன் நகரங்களில் )

எஸ்பிஐ லாக்கருக்கு பதிவு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. சிறிய லாக்கர் மற்றும், மீடியம் லாக்கர் சேவைக்கு ஒரு முறை பதிவு கட்டணம் 500 ரூபாய் . லார்ஜ் மற்றும் எக்ஸ்ட்ரா லார்ஜ் லாக்கருக்கு 1000 ரூபாய் சேவைக்கட்டணமாக வங்கி நிர்வாகம் நிர்ணியித்துள்ளது. இதனுடன் ஜிஎஸ்டி கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. இந்த லாக்கரை வருடத்தில் 12 முறை நீங்கள் இலவசமாக பார்க்கலாம். அதன் பிறகு ஒரு முறை சென்று பார்ப்பதற்கு 100 ரூபாய் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணமும் வசூலிக்கப்படும். இதையும் மறக்காமல் கவனித்தில் கொள்ளுங்கள்.

%d bloggers like this: