பிளாட்பாரம் டிக்கெட்டை வைத்து ரயிலில் பயணம் செய்ய!

இந்திய நாட்டின் போக்குவரத்து முறைகளில் ரயில் பயணம் முக்கிய ஒன்றாக இருக்கிறது. ரயில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு டிக்கெட் என்பது எவ்வளவு முக்கியம் என்று அனைவருக்கும் தெரியும். நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட் அல்லது சாதாரண டிக்கெட் என்று எதாவது ஒரு டிக்கெட்டை கையில்

வைத்துக்கொண்டு தான் உங்கள் ரயில் பயணத்தை மேற்கொள்ள முடியும். இதேபோல், உங்கள் கையில் பிளாட்பாரம் டிக்கெட்டை மட்டும் வைத்துக்கொண்டு நீங்கள் ரயில் பயணம் மேற்கொள்ள முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்க, இப்படிச் செய்தால் பிளாட்பாரம் டிக்கெட்டை வைத்துப் பயணிக்கலாம்.

பிளாட்ஃபார்ம் டிக்கெட் மூலம் பயணம் செய்வது எப்படி?

பெரும்பாலானோர் இதற்கு ‘தத்கல்’ டிக்கெட்டுகளை மட்டுமே விருப்பமாகக் கருதுகின்றனர். இருப்பினும், நடைமேடையில் இருந்து டிக்கெட் வாங்கிய பிறகு ரயிலில் பயணம் செய்யலாம் என்பது பலருக்குத் தெரியாது. பிளாட்ஃபார்ம் டிக்கெட் மூலம் பயணம் செய்வது எப்படி? உங்களுடைய ரயில் பயணத்திற்காக எந்தவொரு முன்பதிவு முறையையும் நீங்கள் செய்யவில்லை என்றால் பயப்படத் தேவையில்லை. நீங்கள் தாராளமான வெறும் பிளாட்பார்ம் டிக்கெட்டுடன் ரயிலில் ஏறலாம், பின்னர் ரயிலில் உள்ள டிக்கெட் பரிசோதகரிடம் சென்று உங்கள் பயணத்திற்கான டிக்கெட்டை அவரிடமிருந்து எளிதாகப் பெறலாம்.

பிளாட்ஃபார்ம் டிக்கெட் மூலம் ரிசர்வேஷன் இருக்கைகளைக் கூட வாங்கி பயணிக்க முடியுமா?

முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை பெட்டிகளில் சில நேரங்களில் முழு முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளும் முழுமையாக நிரம்பி இருக்கும் போது, உங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையை TTE-யால் வழங்கமுடியாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் முன்பதிவு இருக்கை கொண்ட பெட்டிகளில் பயணிக்க அனுமதிக்கப்படுவீர்கள். முன்பதிவு செய்யவில்லை என்றால், சேருமிட டிக்கெட்டின் விலையுடன் சேர்த்து உங்களிடம் இருந்து சுமார் ரூ. 250 அபராதமாக வசூலிக்கப்படும் என்பதை நினைவில்கொள்க.

பிளாட்ஃபார்ம் டிக்கெட் மூலம் பயணம் செய்யும் போது கட்டணம் எப்படி வசூலிக்கப்படும்?

நீங்கள் பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கிய நிலையத்திலிருந்து, நீங்கள் சென்று சேருமிடத்திற்கான கட்டணமும் அபராத தொகையுடன் சேர்த்து வசூலிக்கப்படும். நடைமேடை டிக்கெட் பயணிகளுக்கு ரயிலில் ஏறுவதற்கான உரிமையை IRCTC முழுமையாக அனுமதி வழங்குகிறது. பிளாட்பார்ம் டிக்கெட்டுகளின் மற்றொரு நன்மை என்னவென்றால், பயணிகளின் கட்டணம் அவர் அல்லது அவள் பிளாட்பார்ம் டிக்கெட்டை எந்த நிலையத்திலிருந்து வாங்கினார் என்பதைத் தீர்மானிப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது. கட்டணம் வசூலிக்கும் போது நீங்கள் எந்த நிலையத்தில் இருந்து பிளாட்பாரம் டிக்கெட்டை வாங்கியுளீர்கள் என்று நிலையம் சரிபார்க்கப்படும்.

%d bloggers like this: