கொரானா காலத்தில் கடுமையாக நுரையீரல் பாதிக்காமல் தடுக்கும் வழி

கொரோனா வைரஸ் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் தாக்குகிறது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

கிரீன் டீ.

பொதுவாக கிரீன் டீயை உடல் எடையை குறைப்பதற்கு அதிக மக்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கிரீன் டீயில் உள்ள கனிமங்கள் நுரையீரல் பிரச்சனையை சிறந்த முறையில் குணப்படுத்துகிறது காலை மற்றும் மாலை இரண்டு வேலைகளில் கிரீன் டீயை எடுத்துக் கொண்டால் போதும்.

பூண்டு.

மனிதகுல இனத்திற்கு பூண்டு ஒரு வரப்பிரசாதமாகும் பூண்டில் அல்லிசின் என்ற சக்தி வகை கலவை உள்ளது. இது ஒரு ஆன்டிபயாட்டிக் பொருளாக நமது உடலில் செயல்படுகிறது நோய்த் தொற்றுக்களை குணப்படுத்த உதவுகிறது இது நெரிசல் மற்றும் மூச்சுத் திணறலை போக்க மேலும் வீக்கம் மற்றும் நுரையீரல் புற்று நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

மஞ்சள்.

அனைத்து உணவுப் பொருட்களிலும் சரியான அளவில் மஞ்சள் சேர்த்துக் கொண்டால் உடலை நச்சுத்தன்மை நெருங்காமல் பார்த்துக் கொள்கிறது. மேலும் மஞ்சளில் உள்ள கலவை இயற்கையாகவே நுரையீரலை சுத்தப்படுத்துகிறது. சுவாச நோய்களால் ஏற்படும் வீக்கம் மற்றும் நெரிசலை இது குறைக்கிறது.

தேன்.

சுத்தமான தேன் உடலிலுள்ள அனைத்து நோய்களையும் எளிதாக குணப்படுத்தி விடும். மேலும் தேனில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சுவாசப் பாதையைச் சுத்தப்படுத்த உதவுகிறது. உங்கள் நுரையீரலின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் உங்கள் நுரையீரலை சுத்தப்படுத்த மிகவும் பயன்படும் மேலும் சளி மற்றும் இருமலை குணப்படுத்துகிறது.

இஞ்சி.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து மக்கள் தங்களைப் பார்த்துக் கொள்ள அதிக அளவில் இஞ்சியை வாங்கி பயன்படுத்துகிறார்கள் என்ற ஒரு செய்தி 2 மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது இதில் இருக்கும் அனைத்து விஷயங்களும் உண்மை இருமல் மற்றும் சளியை குணப்படுத்த பொதுவாக பயன்படுத்தப்படும் வீட்டு வைத்தியங்களில் இஞ்சி முதன்மையாக உள்ளது.

இஞ்சியில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. இதில் வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன இவை அனைத்தும் நுரையீரல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

கார்டீனாய்ட்ஸ்

இது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் ஓர் சத்து. இதுவும் ஆன்டிஆக்ஸிடன்ட்தான். நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கக்கூடியது. இந்த சத்து ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் நிறப் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும். சக்கரவள்ளிக் கிழங்கு, கேரட், பரங்கிக்காய், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்ரிகாட் ஆகியவற்றில் அதிக அளவில் கார்டீனாய்ட் சத்து உள்ளது. பீட்டாகரோட்டினும், வைட்டமின் ஏ-வும் சேர்ந்து இருப்பதால், நுரையீரலின் நண்பன் கேரட்.

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்

நுரையீரலுக்கு மட்டும் அல்ல. உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நன்மைகளைச் செய்யக்கூடிய சத்து இது. நுரையீரல் செயல்பாட்டைச் சீராக்க உதவும். நுரையீரலில் ஏற்படும் வீக்கங்கள் போன்றவற்றைக் குறைப்பதற்கு உதவும். அனைத்துவகை மீன்கள், பாதாம், வால்நட் போன்ற நட்ஸ், பிளாக்ஸ் மற்றும் வெள்ளரி விதைகள் போன்றவற்றில் ஒமேகா 3 சத்து நிறைந்துள்ளது.

%d bloggers like this: