முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் ஒரே வாரத்தில் இருந்த இடமே தெரியாமல் செய்ய

நம் முக அழகை கெடுக்கும் வகையில் சில கரும்புள்ளிகள் ஆங்காங்கே முளைத்து விட்டிருக்கும். அதை நீக்க நினைத்து கிள்ளி வைத்து விட்டால் எல்லா இடங்களிலும் பரவத் தொடங்கிவிடும். முகத்தில் இருக்கும் மெல்லிய துவாரங்களின் வழியே

அழுக்குகள் நுழைவதால் இது போல முகப்பருக்களும், கரும் புள்ளிகளும் தோன்றுகின்றன. இதனை ஒரே வாரத்தில் சரி செய்யக் கூடிய அற்புதமான ஆற்றல் இந்த 2 பொருளுக்கு உண்டு. அது என்னென்ன? எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
முகத்தின் துவாரத்திற்குள் வேர்விட்டு முளைத்திருக்கும் இந்த கரும்புள்ளியை கைகள் வைத்து நோண்டி விட்டால் காயம் ஆகி விடும் வாய்ப்புகள் உண்டு. காயாக இருக்கும் இந்த கரும்புள்ளிகளை அகற்றுவதால் அதிலிருந்து வெளிவரும் நீர் மற்ற இடங்களிலும் பரவி முக அழகை கெடுத்து விடும் எனவே இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து ரொம்பவே சுலபமாக இருந்த இடமே தெரியாமல் மாயமாக மறைய வைத்து விடலாம்.
முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பிசுக்கை அகற்றும் தன்மை கொண்டது முல்தானிமட்டி. ஒரு வகையான மண் வகையை சார்ந்த இந்த முல்தானி மட்டி பெரும்பாலான அழகு சாதன பொருட்கள் தயாரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. முகத்திற்கு இயற்கையாகவே எண்ணெய் பசையை நீக்கி எப்போதும் புத்துணர்வுடன் வைத்திருக்கக் கூடிய இந்த முல்தானி மட்டியை பல்வேறு பொருட்களுடன் சேர்த்து கலந்து போடும் பொழுது வெவ்வேறு பலன்கள் நமக்கு கிடைக்கப் பெறுகின்றன. கடலை மாவுடன் முல்தானி மட்டி சேர்த்து முகத்திற்கு பேக் போல போட்டு 15 நிமிடம் கழித்து நீங்கள் சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவினால் முகச்சுருக்கங்கள் இறுகி முகத்தில் இருக்கும் துவாரங்கள் மறையும். அது போல தயிர், பால், பன்னீர், பழச்சாறுகள் போன்றவற்றையும் தனித்தனியாக இதனுடன் கலந்து போடுவதால் அதற்குரிய பலன்கள் அபரிமிதமாக முகத்தில் பொலிவடைய செய்துவிடும்.
அந்த வகையில் முல்தானி மட்டியுடன் இந்த பொருளை நாம் சேர்த்து போடும் பொழுது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் ஒரே வாரத்தில் இருந்த இடம் தெரியாமல் நீங்கிவிடும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ள கிரீன் டீ நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தால் அதிலிருந்து கால் ஸ்பூன் அளவிற்கு அல்லது அரை டீ பேக் எடுத்து ஒரு பௌலில் போட்டுக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு முல்தானிமட்டி சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பத்து நிமிடம் நன்கு இவை இரண்டையும் ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு உங்கள் முகம் முழுவதும் தடவி கைகளால் முன்னும் பின்னுமாக மசாஜ் செய்து கொடுங்கள். க்ரீன் டீயில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் அதன் சொரசொரப்பு தன்மை முகத்தில் இருக்கும் அழுக்குகளையும், கரும்புள்ளிகளின் வேர்களையும் தூண்டிவிட செய்யும். நன்கு மசாஜ் செய்து கொடுத்த பின்பு கெட்டியான பேக்காக முகம் முழுவதும் தடவி காய விட்டு விடுங்கள். 15லிருந்து 20 நிமிடத்தில் நன்கு காய்ந்து உலர்ந்து விடும். அதன் பிறகு முகத்தை அலம்பிக் கொள்ளுங்கள். இது போல் தொடர்ந்து ஒரு வாரம் செய்து பாருங்கள், நல்ல ரிசல்ட் தெரியும். முகத்தில் ஒரு கரும் புள்ளிகள் கூட இருந்த இடம் தெரியாமல் மாயமாய் மறைந்து போயிருக்கும்.

%d bloggers like this: