ஆண்களே…! தாடி, மீசை அடர்த்தியா வளரணுமா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

ஆண்களுக்கு அழகு அவர்களின் மீசை மற்றும் தாடி தான். இந்த பதிவில் மீசை மற்றும் தாடி வளர்ச்சி சிறப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

ஆண்களுக்கு அழகு அவர்களின் மீசை மற்றும் தாடி தான். ஆண்களை பொறுத்தவரையில் அவர்களது மீசை, தாடியை பராமரிப்பதில் முக்கியத்துவம் செலுத்துவதுண்டு. ஆனால், சிலருக்கு எவ்வளவு வயது

சென்றாலும், மீசை மற்றும் தாடி வளருவதில்லை. தற்போது இந்த பதிவில் மீசை மற்றும் தாடி வளர்ச்சி சிறப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை

கருஞ்சீரகம் – 1 ஸ்பூன் (பொடி செய்தது)
விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
விட்டமின் ஈ மாத்திரை – 1
செய்முறை

ஒரு பௌலில் பொடி செய்த கருஞ்சீரக பொடி, விளக்கெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்துக் கொள்ள வேண்டும்.

பின் விட்டமின் ஈ மாத்திரையை எடுத்து அதனை வெட்டி, அதில் உள்ள திரவத்தை மட்டும் எடுத்து, இந்த கலவையில் சேர்த்துக் கலக்க வேண்டும்.

பின் இந்த கலவையை இரவில் தூங்குவதற்கு முன் முகத்தில் போசை வேண்டும். அதற்க்கு முன், வெந்நீரில் ஆவி பிடித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள துவாரங்களுக்குள் உள்ள அழுக்குகள் வெளியேறி விடும்.

பின் இந்த கலவையை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின் காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு ஒருவாரம் செய்து வந்தாலே, மாற்றத்தை காண முடியும். குறைந்தது ஒரு மணி நேரமாவது முகத்தில் இருக்க வேண்டும்.

%d bloggers like this: