கழிவறைக்குள் செல்போன் எடுத்து செல்வதால் வரும் பேராபத்து.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

கழிவறைக்குள் செல்போனுடன் செல்வதால் இந்த நோய் வருவதர்க்கு அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தற்போது உள்ள கால கட்டத்தில், மக்களுக்கு இருக்கும் இருக்கும் தேவையில்லாத பழக்கங்களில் ஒன்று தான் கழிவறைக்குள் செல்போனை எடுத்துச்செல்வது. ஆம், இந்த பழக்கம் குறிப்பாக வெஸ்டர்ன் டாய்லெட்

பயன்படுத்துபவர்களிடம் தான் அதிகமாக உள்ளது. இதனால், நீண்ட நேரம் வெஸ்டர்ன் டாய்லெட்டில் அமர்ந்து செல்போனை பார்த்துக்குகொண்டு இருப்பதால் நேரம் போவது தெரியாமல் அங்கையே அமர்ந்துவிடுகின்றனர்.

இந்நிலையில், இது போன்று நீண்ட நேரம் வெஸ்டர்ன் டாய்லெட்டில் அமர்வதால், கீழ் மலக்குடலில் உள்ள ஆசனவாய் நரம்புகளில் அழுத்தம் அதிகரித்து மூல நோய் வர அதிக வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதனையடுத்து, இது போன்று ஒருநாள் மட்டும் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் மூல நோய் வராது, ஆனால் இப்படி தினமும் வாடிக்கையாக நீண்ட நேரம் அமர்வதால் மூல நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

மூலம் நோய் என்பது பொதுவாக மலச்சிக்கல், மலம் கழிப்பதில் சிரமம், கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் உபாதைகள் போன்ற காரணங்களால் வருகிறது. ஒருவேளை உங்களுக்கு எரிச்சல், அரிப்பு, ரத்தக் கசிவு, கட்டிகள், மலம் கழித்த பின்னரும் கழிக்காத உணர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அது மூல நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம் எனவும், உடனே நீங்கள் மருத்துவர்களை அணுகி முறையான பரிசோதனை மேற்கொள்வதும் அவசியம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

%d bloggers like this: