ஆச்சரியப்படும் பலன்களை அளிக்கும் கருப்பு திராட்சை!

ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் ஒரு சிறந்த பொருளாக கருப்பு திராட்சை பயன்படுகிறது. திராட்சையில் உள்ள சர்க்கரை, வைட்டமின் டி மற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்திற்கு அதிக பயனை அளிக்கின்றன. மேலும், நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

திராட்சை பழத்தை தினமும் உட்கொள்வதால் உடல் கொழுப்பு குறையும், மேலும் கருப்பு திராட்சை விதையானது புற்றுநோய்களை எதிர்த்து போராடும் ஆற்றல் உள்ளது. குறிப்பாக பெண்கள் மார்பக புற்றுநோயைத் தடுக்க கருப்பு திராட்சை உண்ண வேண்டியது அவசியம்.

சிறுநீரகப் பிரச்னை, கண் புரை உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்யும் தன்மை கருப்பு திராட்சைக்கு உண்டு

அதேபோன்று கருப்பு திராட்சையின் விதைகளை நீக்கி சாறு எடுத்து அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ முகம் பொலிவு பெறும்.

கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தாலும் திராட்சை சாறை தடவி வர விரைவில் கருவளையம் மறைந்து விடும்.

இதற்கெல்லாம் மேலாக திராட்சையில் உள்ள மல்விடின்-3-ஒ-குளுக்கோசைட் மற்றும் டைஹைட்ரோகாஃபிக் எனும் இரு அமிலங்கள் மனச் சோர்வை/ மன அழுத்தத்தை குறைக்கும் என அமெரிக்க ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

%d bloggers like this: