மரபணுவும் கர்ம வினையும்!

ஜோதிட சாஸ்திரம் என்பது நம் வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாகும். இந்த சாஸ்திரத்தில் சொல்லப்படாத விஷயங்கள் இல்லை எனலாம். பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள யோக, தோஷ, ருண, ரோக, பலன்களை துல்லியமாக தெரியப்படுத்தும் ஜீவனுள்ள சாஸ்திரம். இந்தக் கலையில் பல்வேறு விதமான பிரிவுகள், நுணுக்கங்கள் உள்ளன. அதை சரியாக பயன்படுத்தி எல்லா

விஷயங்களுக்கும் தீர்வு காணலாம். அந்த வகையில் நம் உடலில் ஏற்படக்கூடிய நோய்கள் பற்றி அறிவதற்கு நமக்கு ஜோதிட சாஸ்திரம் உறுதுணையாக இருக்கிறது. ‘நோய்களைக் காட்டும் வீடுகள் ஜாதக கட்டத்தில் உள்ள 12 ராசி வீடுகளும் மிக முக்கியமானவை. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயத்தை பிரதிபலிப்பவை. எந்த ஜாதக கட்டமாக இருந்தாலும் அதில் லக்னம், ராசி என்று இரண்டு முக்கிய இடங்கள் உண்டு.
இதில் லக்கினம் என்பது மிக முக்கியமான இடம். ஏனென்றால் இந்த இடத்தில் இருந்துதான் எல்லா ஸ்தானங்களும் கணக்கிடப்படுகின்றன, இயக்கப்படுகின்றன. இந்த இயக்கங்களைச் செய்பவர்தான் லக்னாதிபதி. இந்த லக்ன அமைப்பை இரண்டு கட்டங்களிலும் நாம் பார்க்க வேண்டும். ஒன்று ராசிக் கட்டம் இன்னொன்று நவாம்ச கட்டம். இந்த இரண்டு கட்டங்களிலும் உள்ள அமைப்புக்களை நன்றாக ஆராய்ந்து பார்ப்பது மிகவும் அவசியம். நோய்கள் என்று பார்க்கும்போது ரோகஸ்தானம் எனும் வியாதியைக் குறிக்கும். ஆறாம் இடம், இதற்கு அடுத்ததாக அஷ்டமம் எனும் ஆயுள்ஸ்தானம். இதன் தொடர்ச்சியாக 12 ஆம் இடம் எனும் விரயஸ்தானம். மேலும் பாதகமான, கண்டங்கள், விபத்துக்கள் போன்றவற்றை தெரிவிக்கின்ற இரண்டு, ஏழு ஆகிய வீடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் சில வீடுகள் அதில் உள்ள கிரக சேர்க்கை, பார்வைகள் நமக்குத் துன்பங்கள், துயரங்களைத் தருகின்றன.
சுகஸ்தானம் என்று சொல்லக்கூடிய நான்காம் இடம் மிக முக்கியமானது. ஆக சுருக்கமாகச் சொன்னால் 2, 4, 6, 7, 8, 12 ஆகிய வீடுகள் மூலம் நாம் பல்வேறு விதமான நோய்கள், விபத்துக்கள், நோய் உண்டாகும் திசா காலங்கள் விபத்து ஏற்படும் அமைப்புக்கள் அறுவை சிகிச்சை நடைபெறும் காலக்கட்டங்கள் ஆகியவை குறித்து தெரிந்துகொள்ளலாம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். சூரியன் ஆன்மாவை குறிப்பவன், சந்திரன் மனதை ஆள்பவன், புதன் புத்திக்காரகன் ஆரோக்கியத்திற்கு ஆதித்தியனை வணங்கு என்று சொல்வார்கள். சூரிய ஒளியின் மூலம் பயிர், பச்சை மரம், செடி, கொடிகள் மற்றும் பல்வேறு ஜீவராசிகள் உயிர்ப்பு சக்தியைப் பெறுகின்றன. இதன் காரணமாகவே கிழக்கு திசையின் மேன்மை, கிழக்கு நோக்கியே நம் வழிபாடுகள் இருக்கின்றன.
சூரிய நமஸ்காரம் செய்தல், யோகம், ஜபம், தியானம், ஆசனம் போட்டு அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்துதல் போன்றவை வழி வழியாக வந்துகொண்டு இருக்கின்றன. ஜோதிட சாஸ்திரமும் உடலும், உள்ளமும் உறுதி பெற சூரியனை வழிபட வேண்டும் என்று கூறுகிறது. காரணம் சூரியன் ஆத்மகாரகன், ஆன்மாவை பிரதிபலிப்பவன். நலமுடன், வளமுடன் வாழ்க என்று சொல்வார்கள். ஆகையால் தான் ஒருவரையொருவர் சந்தித்தவுடன் நலமா? சௌக்கியமாக என்று விசாரிக்கிறோம். எல்லா நலங்களும், வளங்களும் இருந்தாலும் நோயில் விழுந்தால் எல்லாம் அர்த்தமற்றதாகி விடும். புகழும், பகட்டும், பதவியும், படுக்கையில் விழுந்தவனுக்கு உதவாது. பொன்னையும், பொருளையும், பெண்ணையும், போகத்தையும் நாம் அனுபவிக்க பொருத்தமான நேரம் காலமும், உடல்பலமும், மனசந்துஷ்டியும், தீர்க்காயுழும் இருக்கும் யோகத்தோடு நாம் பிறக்க வேண்டும்.
இதைத்தான் அந்தக்காலத்தில் அவன் அனுபவிக்கின்ற அம்சத்தோடு பிறந்தவன் என்று சொல்வார்கள். மேலும் சிலர் அவன் நல்ல வரம் வாங்கி வந்திருக்கிறான் என்று சொல்வார்கள். அந்த வரம் வேறொன்றுமில்லை. நம் கர்ம வினைதான் என்றால் அது மிகையாகாது. யோகத்தையும், போகத்தையும், சொத்தையும், சுகத்தையும் அனுபவிப்பவர்களைப் பார்த்து, அது தலைமுறையாக வருகிறது. பரம்பரை, வம்சா வழியாக வருகிறது என்று சொல்வார்கள். அதன்படி யோகம் எப்படியோ ரோகமும் அப்படித்தான். சொத்து சுகத்தை விட்டுச்செல்லும் முன்னோர்கள் மரபணு என்ற விதை மூலம் நமக்கு வியாதியையும் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள். இந்த அமைப்புடன் வினைப்பயன் என்ற கர்மா அதற்கேற்ற கிரக அமைவுகளுடன் நம்மை பறக்கச் செய்கிறது.
ராசி மண்டலமும் உறுப்புக்கள் அமைப்பும்: கிரகங்களும்  நோய்களும்
சூரியன்:  இதய நோய்கள், ரத்த அழுத்தம், கண் பார்வை, மலச்சிக்கல், பல், வாய், உஷ்ண உபாதைகள்.
சந்திரன்:  மார்பகங்கள், கழுத்து, நுரையீரல், குறைந்த ரத்த அழுத்தம், காச நோய், ரத்த சோகை, மனநோய், சர்க்கரை, மூக்கு, குடல்.
செவ்வாய்: பித்தப்பை, சிறுநீர்ப்பை, மூலம், ரத்த நோய்கள், டென்ஷன், காயங்கள், விபத்துக்கள்,
அறுவை சிகிச்சை, மாதவிடாய் கோளாறுகள்.
புதன்: நரம்புத்தளர்ச்சி, பாலின கோளாறுகள், நாக்கு, உணர்ச்சி, பேச்சு, நரம்பு மண்டலம், கைகால் வலிப்பு, ஆண்மைக் குறைவு, புத்தி சுவாதீனம்.
குரு: தைராய்டு, முடக்கு வாதம், வயிறு குடல், சர்க்கரை, காது, தொடைகள், மஞ்சள் காமாலை.
சுக்கிரன்: கண், காது, மூக்கு, தொண்டை, சர்க்கரை, சுக்கிலம், சுரோணிதம், பாலியல் வியாதிகள்.
சனி: மூட்டு வீக்கம், வாதம், பித்தம், பிடிப்பு, புட்டங்கள், ஆண்குறி, மனசஞ்சலம், நரம்பு சிலந்தி.
ராகு: தோல், பல், நோய்கள், மூலம், ஜீரண கோளாறு, தலைபாரம், தொழுநோய், புற்றுநோய்.
கேது: மனநோய், பிதற்றல், புற்றுநோய், தோல் அரிப்பு, அலர்ஜி, கர்ப்ப சம்பந்தமான கட்டிகள்.
கிரக சேர்க்கையால் நோய்கள்
ரத்தம் சம்பந்தமான குறைபாடுகள், அணுக்கள் குறைவு, கட்டிகள், அலர்ஜி, புண்கள், ஆறாத ரணங்கள், எல்லாம் செவ்வாயின் வேலைதான். ஒரு பெண் பூப்படைவது அதாவது பருவம் எய்துவது செவ்வாயின் பலத்தால்தான் நிகழ்கிறது. சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சேர்க்கை, பார்வை, மாதவிடாய் பிரச்னைகள், அதிக உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல் சுக்கிரனால் ஏற்படுகிறது. சந்திரன், சனி தொடர்பு. வயிற்று வலியுடன் உதிரப்போக்கு. பெண்கள் ஜாதகத்தில் துலாம் ராசியில் கூட்டுக்கிரக சேர்க்கை பார்வை அல்லது லக்னத்திற்கு 4 ஆம் இடத்தில் நீச கிரக பார்வை இருந்தால் கர்ப்பம் தரிப்பதில் காலதாமதம் ஏற்படும். கர்ப்பப்பை கோளாறு, கருமுட்டை வளர்ச்சி குறைவு உண்டாகும். குறிப்பாக இவையெல்லாம் அந்தந்த திசா புக்தி காலங்களில் உண்டாகும்.
சந்திரன்  கேது:  கிரக சேர்க்கை, பார்வைகள், மூலம் யோகம், அவயோகம் இரண்டுமே உண்டு. சில ராசிகளில், சில வீடுகளில் கிரக சேர்க்கைகள் நல்ல யோகத்தைத் தரும். அதே நேரத்தில் பலவீனமான அமைப்புகளும் ஏற்படும். சந்திரன் மனதை ஆளும் கிரகம். கேது எதிர்மறையான எண்ணங்களை உண்டாக்குபவர். இந்த இருவரின் சம்பந்தம் ஜாதகத்தில் இருந்தால் அவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். மனச்சிதைவு, மனஅமைதியின்மை உண்டாகும். இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்துகொள்வார்கள். சனியின் பார்வை சம்பந்தம் ஏற்பட்டால் பேச்சில் தடுமாற்றம் இருக்கும். மறதி உண்டாகும். பேசியதையே பேசுவார்கள்.
மேலும் புதன் வலுக்குன்றி இருந்தால் நரம்பு மண்டலம் பாதிக்கும். ஏதாவது போதை பழக்கத்திற்கு வெகு விரைவில் அடிமையாகி விடுவார்கள். சித்தம் கலங்கிய நிலை இருக்கும். நீச கிரக, மாரக தசைகள் நடைபெறும் போது தற்கொலை முயற்சி அல்லது தற்கொலை செய்துகொள்வது போன்ற நிகழ்வுகள் உண்டாகலாம். ஆங்கிலத்தில் சந்திரனை (லூனார்) என்று சொல்வார்கள். (லூனசி) என்றால் மனநோயினால் தீவிர பாதிப்பு என்று அர்த்தம்.
அடிபடுதல், ஊனம், அங்கஹீனம்:
மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் நீச கிரக சேர்க்கை, பார்வை இருந்து 2, 7, 8, 12 ஆம் அதிபதிகளின் சம்பந்தம் ஏற்பட்டு அந்த கிரக தசை நடந்தால் சிறிய விபத்துகளால் கீழே விழுந்து அடிபடுதல், நீர்நிலைகளில் வழுக்கி விழுந்து அடிபடுதல், வண்டியில் செல்லும்போது விபத்து ஏற்படுதல் போன்றவற்றால் சில குறிப்பிட்ட கால அளவிற்கு எலும்பு முறிவு, வீக்கம் போன்றவை வந்து நீங்கும்.
அறுவை சிகிச்சை ஏற்படுத்தும் செவ்வாய்:
பொதுவாக பிறக்கும்போது ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்புக்கள்தான் யோகத்திற்கும், தோஷத்திற்கும், ரோகத்திற்கும் காரணம். ஆனால் திடீரென்று உடல் பலவீனம், நோய் நொடி, அறுவை சிகிச்சை, மனஉளைச்சல், மருத்துவச் செலவுகள், வீண் விரயம் உண்டாகக் காரணம். அக்காலக்கட்டத்தில் நடைபெறும் தசாபுக்திகளே. 4, 6, 8, 12ம் இடம், அதிபதிகளுடன் சம்பந்தப்பட்டு தசா புக்தி நடக்கும்போது நோய் பிரச்னைகள் ஏற்படுகின்றன. செவ்வாய், கேது சம்பந்தப்படும் போது சிறிய பெரிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. எந்தப் பாதிப்பு என்றாலும், அந்தக்காலக்கட்டத்தில் நடக்கும் தசைகளும், 7லு சனி, கண்டச்சனி, ஏழில் சனி, அஷ்டமச்சனி மற்றும் தீய, நீச கிரக தசை நடக்கும்போது பல உடல் கோளாறுகள் ஏற்படுகின்றன. இன்னும் பலவிதமான கிரக சேர்க்கை பார்வை பல உடல் உபாதைகளை ஏற்படுத்துகின்றன.

%d bloggers like this: