தலையில் பேன் தொல்லையா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!!

தலையில் வளர்க்கப்படும் செல்லப் பிராணியான பேன் பற்றி என்னவெல்லாம் நமக்குத் தெரியும் எனக் கேட்டால், பேன் கடிக்கும் ரத்தத்தைக் குடிக்கும் என்பது மட்டும் தான் பதிலாக வரும். ஆனால், இம்மியளவு பேனுக்குள் இமாலய ரகசியங்கள் பல ஒளிந்திருக்கின்றன.

இறக்கை இல்லாத மிகச் சிறிய பூச்சியினம் பேன்கள் தான். மனிதர்களின் தலைமுடியில் வாழும் இனத்திற்கு ‘பெடிகுலஸ் ஹயூமனஸ்’ என்று பெயர். விலங்குகள் மற்றும் பறாவைகளின் உடலில் வாழும் பேன் இனம் ‘இத்தீரியஸ் பியூபிஸ்’.

இது தலையிலும், முடி இருக்கும் கண் புருவத்திலும், கண் இமையிலும்கூட வரலாம். நெருக்கமான தொடர்பு மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இது பரவும்.

இதனுடைய சிறிய முட்டை பார்ப்பதற்குப் பொடுகு போல இருக்கும். இதனுடைய முட்டை இரண்டு வாரங்களுக்கு உயிர் வாழும். பேன் 30 நாட்கள்வரை உயிர் வாழும். பள்ளிக்குச் செல்லும் சிறார்களிடையே இது அதிகமாகப் பரவும்.

பேன் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தால், நமக்கும் பேன் வரும் வாய்ப்பு அதிகம். அவர்கள் உடுத்தும் உடைகளை உடுத்தினாலோ, அவர்களின் படுக்கையில் படுத்தாலோ பேன் வரும் வாய்ப்பு உண்டு. தலையில் சொறி வரும்.

பேன் தொல்லையிலிருந்து மீள

வேப்ப எண்ணெய்

வேப்ப எண்ணையுடன் தேங்காய் எண்ணைய் கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லை குறையும். பேன் தொல்லைக்கு வேப்பிலையை அரைத்து தலையில் தடவிவிட்டு சிரிது நேரம் கழித்து அலசி விடுங்கள். பேன் ஒழிந்து விடும்.

துளசி இலை

துளசி இலையை நன்றாக அரைத்து, தலையில் தடவி சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையைக் கழுவினால், பேன்கள் இறந்து உதிர்ந்துவிடும். கூந்தலும் நன்றாக வளரும்.

தேங்காய் எண்ணெய்

100 கிராம் தேங்காய் எண்ணெயில், 50 கிராம் வேப்பம்பூவை போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். அந்த எண்ணெயைத் தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்துக் குளித்தால் பேன் தொல்லை குறையும்.

குப்பை மேனி கீரை

பேன் தொல்லைப் போக்குவதில் குப்பை மேனி கீரை முக்கியப் பங்கு வகிக்கிறது. குப்பை மேனி இலையை எடுத்து சாறு எடுத்து தலையில் அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் குளிக்க பேன் தொல்லை நீங்கும்.

வெங்காயச் சாறு

தேங்காய் எண்ணெயுடன் சிறிது வெங்காயச் சாற்றை பிழிந்து தலையில் தேய்த்து ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் பேன் முற்றிலும் அழிந்துவிடும்.

கருவேப்பிலை

தேங்காய் எண்ணையை காய்ச்சி, அதில் நிழலில் உலர்த்தி காய்ந்த கருவேப்பிலையை சேர்த்து காய்ச்சி தலையில் தடவி வந்தால்பேன் வரவே வராது.

வசம்பு

வசம்பை அரைத்து தலையில் தடவி, பிறகு அரைமணிநேரம் கழித்து குளித்து வந்தால் பேன் தொல்லை அகலும்.

%d bloggers like this: