டியூப் டயர் vs டியூப்லஸ் டயர்.. இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள்!

நாம் தினமும் நமது வாகனத்தில் ஒரு இடத்தில் இருந்து இல்லொரு இடத்திற்கு செல்கிறோம். அவ்வாறு நாம் செல்வதற்கு உதவுவது, நமது வாகனத்தின் டயர். அப்படிப்பட்ட டயர், இரண்டு வகைகளாக உள்ளது. அது, டியூப் டயர் மற்றும் டியூப்லஸ் டயர்.

ட்யூப் டயர்:

இது, நாம் கால காலமாக பயன்படுத்தும் டயராகும்.

  • இதனை பராமரிப்பதில் நாம் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.
  • இந்த வகையான டயர் பஞ்சராகினால், நாம் நமது வாகனத்தை உருட்டிக்கொண்டு தான் மெக்கானிகிடம் செல்ல வேண்டும்.
  • அதனை மீறி வாகனத்தை இயக்கினால், புதிய டியூப் மாற்றவேண்டிய கட்டாயம் வரும்.
  • அனுபவமுள்ள மெக்கானிக் கொண்டு பஞ்சர் சரி செய்ய வேண்டும்.
  • இறுதியாக, டயர் கழற்றும் பொழுது அதற்கென இருக்கும் கருவிகளை உபயோகித்து வேண்டும்.

டியூப்லஸ் டயர்:

  • இந்த டியூப்லஸ் டயரால் நமக்கு பல நன்மைகள் உண்டு.இதில் பஞ்சராகினால், சிறிது நேரம் காற்று டயரில் நிற்கும். அந்த இடைவெளியில் நாம் பஞ்சர் கடைக்கு சென்றுவிடலாம்.
  • ட்யூப் டயரை விட டியூப்லஸ் டயரில் அதிர்வுகள் குறைவாக இருக்கும். இதனால் நமது பயணம் சிறப்பாக அமையும்.
  • விபத்துகளின் போது டயர் வெடிக்காது.
  • இதில் டியூப் இல்லை என்பதால் எடை குறையும். இதனால் வாகனத்தின் மைலேஜ் உயர வாய்ப்பு.
  • டயரின் ஆயுட்காலம் சிறப்பாக இருக்கும்.
%d bloggers like this: