சாதாரணமான வீட்டை ஆடம்பரமாக மாற்றக்கூடிய எளிய வழிமுறைகள்..!

சரியான திட்டமிடல் மற்றும் சிறிதளவு கலைநயம் தெரிந்திருந்தால் போதும், எப்படிப்பட்ட வீட்டையும் அழகாக மாற்றிவிடலாம். பழையவீட்டைக் கூட புதியது போன்ற தோற்றத்திற்கு மாற்றுவதற்கு எளிய வழிமுறைகளே போதுமானது.

வீட்டை அழகாக மாற்றுவது பெரிய காரியமாக நினைக்கும் பலர், அதற்காக நேரத்தை ஒதுக்குவதற்கு தயாராக இல்லை. ஒரு சிறியளவிலான வீட்டுக்குள் ஃபர்னிச்சர்கள் வைக்கும் இடங்கள் மற்றும் சுவர்களில் அடிக்கப்படும் வர்ணங்கள் ஆகியவற்றை சரியாக தேர்வு செய்துவிட்டால், பார்ப்பதற்கு பெரியவீடாக மாறிவிடும்.

கலைநயம் மிக்க பொருட்கள், பட்ஜெட்டுக்குள் அடங்கும் இன்ட்ரீயர் வேலைபாடுகள், லிவ்விங் ஏரியாவில் கவனம் ஈர்க்கும் பொருட்கள், உள்ளே கிடைக்கும் சூரியன் உஷ்னத்தில் வளரும் செடிகளை வீட்டுக்குள் வைப்பது, போன்றவை உங்கள் இல்லத்திற்கு பேரழகு சேர்க்கும்.

பார்ப்பவர் கண்களுக்கு ஒரு ஆடம்பரமான விசிப்பிடம் போல எடுத்துக்காட்டும்.

வீட்டின் உட்புறத்திற்கு அழகு சேர்ப்பது வண்ணப்பூச்சு மற்றும் மேற்கூரை ஆகும். வீடு கட்டும் போதே பொருத்தமான மேற்கூரை வடிவமைப்பை தேர்வு செய்துவிட்டால் பாதிவேலை முடிந்துவிட்டது. ஒருவேளை அப்படி செய்யவிட்டாலும் பிரச்னை இல்லை. இன்று வீட்டை மறுசீரமைப்பு செய்வதற்கு அதிக பணம் செலவிட தேவையில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இன்றைய காலத்தில் பல்வேறு நிறுவனங்கள் வீட்டுக்கு அழகு சேர்க்கும் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றன. அவற்றில் தரமான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை தேர்வு செய்துவிட்டால், மீதி கடலை தாண்டிவிடலாம். மேலும், அந்த பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் சில, உங்கள் வீட்டையும் கையோடு டிசைன் செய்து தருகிறார்கள். அப்படிப்பட்ட நிறுவனங்களை ஒப்பந்தம் செய்தால், உங்கள் நேரம் விரயமாகாது.

மேலே குறிப்பிட்டுள்ள இந்த மூன்று விஷயங்களை செய்தாலே எப்படிப்பட்ட வீடும் பொலிவு பெற்றுவிடும். ஒருவேளை இருக்கும் வீடே அழகாக இருக்கிறது, இதுபோன்ற செயல்பாடுகள் தேவையில்லை என்று சிலர் நினைக்கக்கூடும். அப்படிப்பட்டவர்கள், வீட்டுக்குள் வீண் பொருட்களை சேர்த்துக் கொண்டே செல்வது, சுத்தமில்லாமல் வீட்டை பராமரிப்பது, கட்டிடத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அசால்ட்டாக இருப்பது போன்ற செயல்களை தவரிக்க வேண்டும். அதுவே நாம் வாழும் வீட்டை அழகாக மாற்றும். வீட்டை நீங்கள் பொறுப்பாக பார்த்துக் கொண்டால், வீடு உங்களை அக்கறையாக கவனித்துக்கொள்ளும்.

%d bloggers like this: