“உங்க குக்கர் நீண்ட நாட்கள் உழைக்கணுமா”.? இதோ உங்களுக்கான எளிய டிப்ஸ்.!!

சமிபகாலமாக நாம் வாங்கும் பிரஷர் குக்கர்கள் வாங்கிய சில நாட்களிலேயே பழுதடைந்து விடுகிறது. அதில் பிரஷரைத் தக்கவைத்துக் கொள்ள அல்லது வெளியிடுவதில் அதிகளவில் பிரச்னைகள் ஏற்படுகிறது. இந்த குக்கர்களை நீண்ட நாட்கள் பழுது ஏர்படாமல் பராமரிப்பது தொடர்பாக பார்ப்போம்.

குக்கரைப் பயன்படுத்தியதும் அதன் மூடியை நன்கு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யவேண்டும். சில சமயம் உணவுப் பொருட்கள் அடைத்துக்கொள்ளும். இவையும் பிரஷரைத் தக்கவைப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

சமைத்து முடித்த உடன் குக்கரின் கேஸ்கட் பகுதிகளில் சமைத்த உணவானது கேஸ்கட் உட்பகுதியில் தங்கியிருக்கும். அவற்றை நீரினால் சுத்தமாக கழுவவேண்டும்.

அடுத்ததாக குக்கர் விசிலில் சமைத்த உணவானது தங்க வாய்ப்புள்ளது.இதனை விசிலின் மூடியில் 2,3 ஓட்டைகள் இருக்கும். அதன் வழியாக தண்ணீரை ஊற்றி செக் செய்யலாம். குக்கரில் சமைக்கும் போது மூடியுடன் சேர்த்து குக்கர் விசிலை சேர்த்து மூட கூடாது. மூடியினில் இருந்து காற்றானது வெளியில் வந்த பிறகு தான் விசிலை வைக்க வேண்டும்.

%d bloggers like this: