உயர் இரத்த அழுத்தத்தை சட்டென்று கட்டுக்குள் கொண்டு வர சாப்பிட வேண்டிய உணவுகள்

உலகில் வயது வந்தோரில் மூன்றில் ஒரு பகுதியில் உயர் இரத்த அழுத்தம் அல்லது ஹைப்பர் டென்சனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது இதய நோய் மற்றும் முன்கூட்டிய மரணத்திற்கான ஆபத்துக் காரணிகளுள் முதன்மையான ஒன்றாகும். க்ரீன் அல்லது ப்ளாக் டீ குடிப்பது இரத்த அழுத்தத்தை ஓரளவு குறைக்க உதவுவதாக ஆய்வுகளில்

கண்டறியப்பட்டுள்ளன. ஏனெனில் இந்த டீயில் கேட்டசின்கள் என்னும் பீனோலிக் கலவைகள் உள்ளன. இது உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் பண்புகளுக்கு பங்களிக்கிறது.

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வில், இர்வின், டீயில் உள்ள இரண்டு கேட்டசின் வகை ஃபிளாவனாய்டு கலவைகள் (எபிகாடெசின் காலேட் மற்றும் எபிகல்லோகாடெசின் -3-கேலட்) இரத்த நாள சுவரில் ஒரு குறிப்பிட்ட வகை புரதத்தை செயல்படுத்துவதன் மூலம் இரத்த நாளங்களை தளர்த்த உதவுகிறது என்று கண்டறிந்துள்ளது.

குறிப்பாக பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை ஆரோக்கியமாக பராமரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உண்பது மிகவும் நல்லது. இதனால் இரத்த அழுத்தம் சீரான அளவில் இருக்கும். கீழே உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்ட உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

உலர்ந்த ஆப்ரிகாட்

உலர்ந்த ஆப்ரிகாட் அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பொருள். இது ஒரு உலர் பழங்களுள் ஒன்று. 6 உலர்ந்த ஆப்ரிகாட் பழத்தில் 488 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. இந்த உலர் பழத்தை சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறைவதோடு, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், கண் ஆரோக்கியம், எலும்பு ஆரோக்கியம் போன்றவை மேம்படும்.

பசலைக்கீரை

கீரைகளுள் பசலைக் கீரை மிகவும் ஆரோக்கியமான ஒன்று. இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பசலைக்கீரையில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. அதோடு இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும் நிறைந்துள்ளன. பசலைக்கீரையில் ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, கால்சியம் போன்றவையும் உள்ளன. ஒரு கப் பசலைக்கீரை நீண்ட நேரம் வயிற்றை நிரம்பியிருக்க செய்து, எடை இழப்பிற்கு உதவுகிறது.

இளநீர்

இளநீர் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பானம் மட்டுமின்றி, இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவக்கூடியது. கோடையில் இளநீரைக் குடித்தால், உடலுக்கு பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக இது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க செய்யும் மற்றும் உடலுக்கு தேவையான பொட்டாசியத்தை வழங்கும். முக்கியமாக உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

தர்பூசணி

கோடைக்கால பழமான தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருப்பது அனைவரும் அறிந்ததே. கோடையில் ஒருபோதும் இந்த பழத்தை சாப்பிட தவறக்கூடாது. இந்த பழம் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை விளைவிக்கக்கூடியது. இதில் உள்ள அதிகளவிலான பொட்டாசியம், இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு இந்தியாவில் பலவாறு சமைத்து சாப்பிடப்படும் ஒரு சுவையான காய்கறி. உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு என இரண்டிலுமே பொட்டாசியம் நல்ல அளவில் உள்ளது. இவற்றை அன்றாட உணவில் மிதமான அளவில் பலவாறு சேர்த்து வந்தால், உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

மாதுளை

மாதுளையில் பொட்டாசியம் ஏராளமான அளவில் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஃபோலேட் சத்துக்களும் உள்ளன. மாதுளையில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் நிறைந்துள்ளன. எனவே மாதுளையை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், உயர் இரத்த அழுத்தம் குறைவதோடு, பிற ஆரோக்கிய பிரச்சனைகளையும் இந்த அற்புத பழம் எதிர்த்துப் போராடும்.

ஆரஞ்சு ஜூஸ்

பலர் காலை உணவின் போது ஆரஞ்சு ஜூஸ் குடிப்பார்கள். இதில் அதிகளவில் வைட்டமின் சி மட்டுமின்றி பொட்டாசியம் சத்தும் உள்ளது. எனவே உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், காலை உணவின் போது ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும் வழக்கத்தைக் கொள்ளுங்கள்.

வாழைப்பழம்

பழங்களுள் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் பழம் வாழைப்பழம். இதில் பொட்டாசியம் ஏராளமான அளவில் உள்ளதால், இது இரத்த அழுத்தத்தைப் பராமரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. தினமும் வாழைப்பழத்தை ஒருவர் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்த பிரச்சனையைத் தவிர்க்கலாம்.

பூண்டு

பூண்டுகளில் ஆன்டி-ஹைப்பர்டென்சிவ் பண்புகள் உள்ளன. இதில் உள்ள அல்லிசின் என்னும் சல்பர் பொருள் தான் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. சில ஆய்வுகளில், பூண்டு சப்ளிமெண்ட்டுகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் மாத்திரைகளைப் போலவே செயல்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளன.

%d bloggers like this: