தேங்காய் இல்லாமல் கூட இப்படியொரு சூப்பரான சட்னி செய்யலாம்.. உங்களுக்கு தெரியுமா?

தலைப்பை பார்த்த பலரும் ஷாக் ஆகி இருப்பீர்கள். அது எப்படி தேங்காய் இல்லாமல் தேங்காய் சட்னி போலவே ருசி இருக்கும் சட்னியை செய்ய முடியும்?
இந்த சட்னியை பிரபல குக்கிங் யூடியூப் சேனலான ‘அபூர்வாஸ் நளபாகத்தில்’ செய்து

காட்டியுள்ளனர். அதிக நேரம் எடுக்காத இந்த சட்னியை எப்படி செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்க:ள்
வெங்காயம், பச்சை மிளகாய்,கடுகு, கறிவேப்பிலை,. காய்ந்த மிளகாய், பொட்டு கடலை, சின்ன வெங்காயம்.
சைவ முட்டை பொரியல்.. ஒருமுறை செய்து பாருங்கள் கட்டாயம் பிடிக்கும்!

செய்முறை:
1. முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் தேவையான அளவு பச்சை மிளகாய் சேர்த்து, நறுக்கிய பெரிய சைஸ் வெங்காயம் சேர்த்து கொள்ள வேண்டும்,
2. பின்பு இதை அப்படியே மிக்சியில் வைத்து அரைக்க வேண்டும். கூடவே பொட்டு கடலை, சேர்க்க வேண்டும். இப்போது சிறிதளவு தணணீர் ஊற்றி சட்னி பக்குவத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.
3. பின்பு, கடாயில் எண்ணெய் ஊற்றி அதில், கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்த பொட்டு,கடலை கலவையை கொட்டி, கேஸை ஆஃப செய்தா;ல் சூப்பரான டேஸ்டான தண்ணி சட்னி தயார்.
வெறும் 5 நிமிடத்தில் சூப்பரான டிபன் ரெடி பண்ணலாம்.. முட்டை, உருளைக்கிழங்கு மட்டும் போதும்!
காலையில் அவசர அவசரமாக சமைக்கும் போது த்டீரென்று தேங்காய் இல்லாமல் போனால் கூட இந்த சட்னொயை அரைக்கலாம்.

%d bloggers like this: