‘இரவில் தூக்கம் வராமல் மிகவும் சிரமப்படுறீங்களா?’.. ‘அப்போ தூங்கும் முன்பு இதை செய்ங்க போதும்’.. ‘ஆய்வில் வெளியான உண்மை’..

மனிதனுக்கு வாழ்க்கையில் மிகவும் தேவையான முக்கியமான விஷயங்கள் என்னவென்றால் உணவு மற்றும் தூக்கம் தான். ஏனென்றால் இவை இரண்டுமே முறையாக இல்லை என்றாலே ஒரு மனிதனின் உடலில் பல வகையான நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஒரு சிலர் இரவில் படுத்தவுடன் தூங்கிவிடுவார்கள். ஆனால் சிலருக்கு இரவில் வெகு நேரமாகியும் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். ஏனென்றால் தூக்கம் என்பது நம் உடலின் தப்பவெட்ப நிலையை பொறுத்து தான் அமையும்.

மேலும் நம் காலின் நுனிப்பகுதியில் முடிகள் உள்ளாமல் மிகவும் மென்மையாக இருப்பதால் குளிர்ச்சி ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து உடல் குளிர்ச்சியாக உள்ளவர்கள் படுத்தவுடன் உடனே தூங்கிவிடுவார்கள்.

இதனால் நாம் தூங்கும் முன்பு நமது காலின் நுனிப்பகுதியை போர்வைக்குள் வைத்து மூடாமல் வெளியே வைத்து படுக்க வேண்டும். இவ்வாறு படுத்தால் இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்கும் என்று பல்வேறு பத்திரிக்கை ஆய்வறிக்கைகள் தெரிவித்து உள்ளது.

அதேப்போல் இரவில் தூங்கும் முன்பு குளித்துவிட்டு படுத்தாலும் நல்ல உறக்கம் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

%d bloggers like this: