இரவு வேலை பார்ப்பதால் இவ்வுளவு பிரச்சனையா?.. தவிர்க்கும் வழிமுறைகள் என்னென்ன?..

இரவு நேரத்தில் உறங்குவது உடலுக்கு அருமருந்து ஆகும். மருத்துவம், காவல்துறை, சாப்ட்வேர் மற்றும் கால் சென்டர் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் நபர்கள் இரவு பணிகளில் ஈடுபடுகின்றனர்

இரவின் கண்விழித்து இருப்பது, பகலில் உறங்குவது போன்றவை இயற்கையில் உடல் இயக்க நிலையினை தடம் புரள

செய்கிறது. மேலும், நோய்களை ஏற்படுத்துகிறது. இதனால் வேலைகளை திட்டமிட்டவாறு நிறைவு செய்ய இயலாத சூழலும் ஏற்படும். இரவு நேர பணிக்காக முரணுள்ள நேரத்தில் சாப்பிடுதல், நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது போன்றவையும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

சாதாரணமாக இருக்கும் நபர்களை விட இரவு நேர பணியில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. வீட்டின் கடிகாரத்தை போல, உடலுக்குள்ளும் உயிர்கடிகாரம் என்பது இயங்குகிறது. இது உடலை சீராக இயக்ககவும், மூளையில் இருக்கும் உறக்கத்திற்கான ஹார்மோனை சுரக்கவும் உதவி செய்கிறது. இதுவே இரவில் தூக்கத்திற்கு வழிவகை செய்கிறது.

இரவு மற்றும் பகல் வேலை என மாறிமாறி செய்து வருவதால் உறக்கமின்மை, உடல் சோர்வு மற்றும் சர்க்கரை நோய், உடல் பருமன் போன்றவையும் ஏற்படுகிறது. பெண்களிடையே மாதவிடாய் சுழற்சி கோளாறு பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இரவு பணிகளில் ஈடுபடுவோருக்கு தூக்கம் வந்தால் நடப்பது, உடற்பயிற்சி செய்வது என சிறிது இடைவெளி கொடுத்து வேலையை பார்ப்பார்கள்.

இவர்களில் சுழற்சி முறை கால அட்டவணை வகையில் வேலை செய்தால் உடல் மிதமான அளவு பிரச்சனை சந்திக்கும். தொடர்ச்சியாக இரவு நேர பணியையே மேற்கொண்டு வந்தால், உடல் கடுமையான அளவு பாதிக்கும். உறக்கம் ஏற்படும் நேரத்தில் காபி குடித்தால் தற்காலிக உற்சாகம் கிடைக்கும். நீண்ட நேர உறக்கத்தை காபி விரட்டாது.

காபியை அதிகமாக குடித்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இரவு நேர பணியில் இருப்பவர்கள் காபி, டீ-யை குறைக்க வேண்டும். அதிகளவு நீர் குடிக்க வேண்டும். எண்ணெய் பலகாரம் சாப்பிட கூடாது. இரவு வேலையில் இருப்பவர்கள் பகலில் 8 மணிநேரம் உறங்க வேண்டும். எளிதாக ஜீரணமாகும் உணவை சாப்பிடுவது நல்லது.

%d bloggers like this: