Monthly Archives: மே, 2022

உங்களின் தேவையைத் தீர்மானிப்பது யார்? – வாடிக்கையாளரின் ஆசையை தூண்டும் வியாபார உளவியல்

அத்தியாவசிய பொருளிலிருந்து ஆடம்பரப் பொருள் வரை நுகர்வோருக்கு இன்று ஆயிரம் தேர்வுகள் இருக்கின்றன.தனக்குத் தேவையானதை தேர்வு செய்யும் உரிமை நுகர்வோரிடம் இருக்கிறதா, இல்லை அவர்களின் தேவையை விற்பனையாளர்கள் தீர்மானிக்கிறார்களா- விளக்கம் தர முயற்சிக்கிறது இந்த கட்டுரை

Continue reading →

உடம்பில் உள்ள நீர்ச்சத்து அதிகரிக்க நாம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

கோடையில், நமது சுற்றுப்புறத்தின் வெப்பநிலை அதிகரிப்புடன், நமது உட்புற உடல் வெப்பநிலையும் உயர்கிறது.

கோடையில் உண்ண வேண்டிய சில உணவுகள்:
●ஃபிரஷான பழங்கள்
கோடை காலத்தில் உண்ண வேண்டிய சிறந்த உணவுகளில் பழங்களுக்கு முதல் இடம் உண்டு. எலுமிச்சை, திராட்சைப்பழம்,

Continue reading →

குறைந்த முதலீட்டில் சிறு தொழில் தொடங்க சூப்பரான 7 ஐடியா!

கொரோனா தொற்று பரவல் காரணமாகப் பலர் இப்போது வீட்டிலிருந்தே வேலை செய்யப் பழகிவிட்டனர். இப்போது தொற்று குறைந்து வருவதால் பல நிறுவனங்கள் அலுவலகம் வருமாறு ஊழியர்களை அழைத்து வருகின்றனர்.

Continue reading →

சொடக்கு எடுத்தால் சத்தம் எப்படி வருகிறது.?! பலரும் அறியா வியக்கவைக்கும் தகவல்.!

சொடக்கு எடுத்தால் சத்தம் எப்படி வருகிறது?

விரல்களில் சொடக்கு எடுக்கும்போது, எலும்பு இணைப்புகள் விரிவடைவதால், அதனுள் சேர்ந்திருக்கும் திரவம் வேகமாக நகருகிறது

தூக்கத்தின்போது உடல் அசைவு மிகக் குறைவாக இருப்பதால், தூங்கி எழுந்ததும் சொடக்கு எடுத்தால் சத்தம் அதிகமாக இருக்கும். அதனால்தான் ஒவ்வொரு முறையும் சொடக்கு எடுத்து முடித்தபின் சிறிது புத்துணர்ச்சி பெற்றது போல் நாம் உணர்வோம்.

Continue reading →

வியர்வையால் உடல் துர்நாற்ற பிரச்சனையா: எளிய வீட்டு வைத்தியங்கள் இதோ

கோடைக்கால தோல் பராமரிப்பு குறிப்புகள்: கோடை காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க, உடலில் இருந்து வியர்வை வெளியேறுகிறது என்று சொல்லப்படுகிறது. இதனால்

Continue reading →

பாஸ்வேர்டு இல்லாத முறைகளை அறிமுகப்படுத்தும் கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள். காரணம் என்ன???

பாஸ்வேர்ட் இல்லாத டிஜிட்டல் எதிர்காலம் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது என்றே கூறலாம்! ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் ஆகியவை FIDO அலையன்ஸ் மற்றும் உலகளாவிய வலை கூட்டமைப்பு உருவாக்கிய தரநிலையின் அடிப்படையில் பாஸ்வேர்ட் இல்லாத திட்டங்களை அறிவித்துள்ளன.

Continue reading →

ஒருவரின் ஆதார் அட்டையில் விவரங்களை.. எத்தனை முறை மாற்றம் செய்யலாம்?.. இதோ முழு விவரம்..!!!!

இன்றைய காலகட்டத்தில் ஆதார் என்பதே மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. அவ்வாறு முக்கியமான ஆதார் அட்டையில் நாம் அவ்வப்போது சில மாற்றங்களைச் செய்துகொண்டிருக்கிறோம்.

நம்முடைய ஆதாரில் உள்ள விவரங்கள் அனைத்தும் டெமோகிராபிக் தகவல் மற்றும் பயோமெட்ரிக் தகவல் என்று இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. முதலில் உள்ள

Continue reading →

ரூ. 100 முதல் சேமிப்பை தொடங்கலாம்.. மிடில் கிளாஸ் மக்கள் இந்த சேமிப்பு திட்டத்தை மிஸ் செய்யாதீர்கள்!

பொது வருங்கால வைப்புநிதி அதாவது Public Provident Fund (PPF) என்பது எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை சேமிப்பதற்கான பாதுகாப்பான மற்றும் மிகவும் வசதியான வழிகளில் ஒன்றாக இருக்கிறது.

<!–more–>
PPF ஒரு நிலையான வருமான முதலீட்டு கருவி (fixed-income investment instrument) என்று நிபுணர்களால் குறிப்பிடப்படுகிறது. அதாவது வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது, மேலும் இது 15 வருட லாக்-இன் (Lock-in) பீரியட்டுடன் வருகிறது. மெச்சூரிட்டி பீரியடிற்கு பிறகு, திரட்டப்பட்ட வட்டியுடன் வருமானம் PPF அக்கவுண்ட் ஹோல்டருக்கு செலுத்தப்படுகிறது. எந்தவொரு முதலீட்டு போர்ட்ஃபோலியோவும் லாபம் தார் கூடிய அதே சமயம் மற்றும் தற்காப்பு கருவிகளின் கலவையாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் பார்த்தால் PPF போர்ட்ஃபோலியோ ஒப்பிடமுடியாத நிலைத்தன்மையை வழங்கும் அதே நேரத்தில் பாதுகாப்பிற்கும் சரியாக பொருந்துகிறது. 1968-ல் நிதியமைச்சகத்தின் தேசிய சேமிப்பு நிறுவனத்தால் ஓய்வூதியத்திற்கான பணத்தை சேமிக்க மக்களை ஊக்குவிக்கும் வகையில் PPF திட்டம் தொடங்கப்பட்டது. PPF அக்கவுண்ட் பல நன்மைகளுடன் வருகிறது.

சிறிய தொகையுடன் முதலீட்டை தொடங்கலாம்..

ஒரு நிதியாண்டில் PPF அக்கவுண்ட்டில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அதிகபட்ச முதலீட்டுத் தொகை ரூ. 1.5 லட்சம் ஆகும். ஆனால் ரூ.100 என்ற சிறிய தொகையுடன் கூட நீங்கள் PPF அக்கவுண்ட்டை ஓபன் செய்யலாம். அதன் பிறகு குறைந்தபட்சம் நீங்கள் ஒவ்வொரு நிதியாண்டும் ரூ.500 செலுத்தினால் கூட போதும். இப்போது உங்களால் பெரிய தொகையை முதலீடு செய்ய முடியாவிட்டால் குறைவான நிதியை வைத்து முதலீடு செய்யலாம்.

உத்தரவாதம் மற்றும் உறுதியான வருவாய்..

அரசின் ஆதரவின் கீழ் இந்த முதலீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் இதில் செய்யப்படும் முதலீடு மற்றும் சேமிப்புகள் முற்றிலும் ஆபத்து இல்லாதவை. PPF மீதான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிற்கு இரு முறை இந்திய அரசால் மதிப்பாய்வு செய்யப்பட்டு திருத்தப்படுகிறது. எனவே ஒவ்வொரு காலாண்டிற்கும் அறிவிக்கப்படும் வட்டி விகிதத்திற்கு ஏற்ப வருமானம் உத்தரவாதம் ஆகும். FD-க்களை விட சிறந்த வருவாயை PPF வழங்குகிறது.

நீண்ட காலத்திற்கு கவர்ச்சிகர வருமானம்..

PPF ஒரு ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதாவது PPF-ல் வட்டி விகிதப் போக்கு மேல்நோக்கி இருக்கும் போது உங்கள் முதலீடு பலனளிக்கும். PPF-ல் வழங்கப்படும் வட்டி விகிதத்தை அரசின் மற்ற ஊக்குவிக்கப்பட்ட வைப்பு திட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் PPF தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதை காண முடியும். PPF-ஐ விட EPF அதிக வட்டி வழங்கினாலும் சம்பளம் பெறும் ஊழியர்கள் மட்டுமே இதில் முதலீடு செய்ய முடியும். அதே போல SCSS மற்றும் SSA ஆகிய திட்டங்கள் மூத்த குடிமக்கள் மற்றும் பெண் குழந்தையின் பெற்றோர்/பாதுகாவலர்களுக்கு மட்டுமே முதலீட்டை அனுமதிக்கின்றன.

வரிச் சலுகைகள்..

மிக சில முதலீட்டு திட்டங்கள் மட்டுமே 3 மடங்கு வரிச் சலுகைகள் மற்றும் EEE (Exempt-Exempt-Exempt) ஸ்டேட்டஸை வழங்கும் வகையில் உள்ளன. இதில் PPF திட்டமும் ஒன்றாகும். EEE என்பது முதலீடு செய்யப்பட்ட தொகை, சம்பாதித்த வட்டி மற்றும் முதிர்வுத் தொகை மூன்றுக்கும் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவது ஆகும். ஆக மொத்தம் PPF-ல் முதலீடு செய்து அதிலிருந்து நீங்கள் பெறும் வருமானத்திற்கு வரியே செலுத்த வேண்டாம். எனவே அதிக வட்டி விகிதம் மற்றும் மூன்று மடங்கு வரிச் சலுகைகள் PPF முதலீட்டாளர்களுக்கு மிகவும் சிறப்பான பலன்களை தருவதாக அமைகிறது.

நிதி இலக்குகளை அடைய உதவும் Lock-in அம்சம்..

லாக்-இன் பீரியட் என்றால் முதலீட்டாளர் முதலீட்டுத் தேதியிலிருந்து முன்னரே தீர்மானிக்கப்பட்ட காலத்தை முடிப்பதற்கு முன் முதலீடுகளில் கை வைக்க முடியாததை குறிக்கிறது. PPF-ல் 15 ஆண்டுகள் லாக்-இன் பீரியட் இருக்கிறது. எனவே PPF திட்டமிடப்பட்ட நிதி இலக்குகளை அடைய மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும் ஒரு சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடன், பகுதியளவு திரும்பப் பெறுதல் மூலம் பணம் எடுக்கும் ஆப்ஷன்களை பெறலாம்.

நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை..

PPF முதலீட்டை உங்கள் நிதி இலக்குகளுடன் சீரமைத்தால், வரி சலுகைகளைப் பெறும்போது, அதை சிறப்பாகப் பயன்படுத்தலாம். ஒரு சிலர் வரி சலுகைகளுக்காக மட்டுமே PPF-ல் முதலீடு செய்து தவறு செய்கிறார்கள். ஆனால் PPF என்பது உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் ஒரு முக்கிய பகுதியாக இருக்க வேண்டும். உங்கள் நிதி இலக்குகளை அடைய தேவையான பிற முக்கிய அம்சங்களுடன் நீங்கள் PPF அலொகேஷன் அடிப்படையில் ரிட்டர்ன் எதிர்பார்ப்புகளை முடிவு செய்யலாம்.

மூலநோய் பிரச்சனைக்கு தீர்வு தரும் வாழைப்பழம் !!

குடற்புழுக்கள், நீரிழிவு, அமிலச் சுரப்பு, தொழுநோய், ரத்த சோகை- வாழை வேரை தீயில் கொளுத்தி சாம்பலை எடுத்து கால் தேக்கரண்டி சாம்பலை தேனில் குழைத்து சாப்பிட்டுவர மேற்சொன்னவை சரியாகும்

<!–more–>
அஜீரணம், மூலநோய்- பாலுடன் ஒரு வாழைப்பழம்சாப்பிட்டுவர அஜீ ரணம் சரியாகும். தொடர்ந்து 2-3 வேளை சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.

இருமல்- கருமிளகு கால் தேக் கரண்டி எடுத்து பொடி செய்து அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் குணமாகும். சிறுநீரக நோய்கள் மற்றும் இரத்தக் குறைபாடுகள்-நெல்லிச்சாறு அரைக் கரண்டியும் பழுத்த வாழையை கலந்து 2-3 வேளை சாப்பிட்டு வர மேற் சொன்ன குறைபாடு நீங்கும்.

காசநோய்- அரை கப் தயிரில் வாழைப்பழத்தை பிழிந்து ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தம்ளர் இளநீர் சேர்த்து தினமும் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வர சரியாகும்.

மூலத்தால் கசியும் ரத்தப்போக்கு, வயிற்றுக் கோளாறு, இருமல், சிறுநீர் ஒழுக்கு, கோழைச் சுரப்பு அதிகரித்தல், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவற்றை வாழைக்காய் குணமாக்குகிறது. ரத்த சிவப்புச் செல்களை உருவாக்குவதில் வாழைக் காய்க்கு நிகரில்லை. அதிகமாக இதை சாப்பிட்டால் வயிற்றில் வாயுத் தொல்லை உண்டாகும்.

சின்ன அம்மை, டைபாய்டு, மஞ்சட் காமாலை- தேனில் வாழைப் பழத்தைப் பிசைந்து தினம் இரு வேளை வீதம் சாப்பிடவேண்டும்.

ஆபத்து!! உடனே கூகுள் குரோம் அப்டேட் பண்ணுங்க… மத்திய அரசு எச்சரிக்கை!

இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் ‘இந்திய கணினி அவசர உதவிக் குழு (CERT-In)’ கூகுள் குரோம் பிரவுசர் (Google Chrome Browser) யூஸர்களுக்கு மீண்டும் ஒரு பகீர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Continue reading →