டிஜிட்டல் வர்த்தக தளம்; இனி ஏற்ற தாழ்வு இல்லை

நம் நாட்டில், வேகமாக வளர்ந்து வரும் மின்னணு வணிக சந்தையில் அமெரிக்காவை மையமாக கொண்ட, அமேசான், வால்மார்ட், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர, மத்திய அரசு முயற்சிக்கிறது; ஓ.என்.டி.சி., எனப்படும், டிஜிட்டல்

வர்த்தகத்துக்கான திறந்த நெட்வொர்க் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

வர்த்தகத்துக்கான திறந்த நெட்வொர்க் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இதன் மூலம் டிஜிட்டல் வர்த்தக உலகில், நம் நாடு புதிய சாதனை படைத்துள்ளது.

ஓ.என்.டி.சி., என்பது, எந்தவொரு குறிப்பிட்ட தளத்தையும் சாராத ஒரு நெட்வொர்க். எப்படி ‘யு.பி.ஐ.,’ டிஜிட்டல் பேமென்ட் வழிமுறைகளை எளிதாக மாற்றியமைத்ததோ, அதேபோன்று எதிர்காலத்தில், ஓ.என்.டி.சி., டிஜிட்டல் வர்த்தக வழிமுறைகளை மாற்றியமைக்கும்; எளிமையாக்கும்; அதை உபயோகப்படுத்தும் லட்சக்கணக்கான சிறிய வியாபாரிகளுக்கு கட்டணங்களை குறைக்கும் என்பது உறுதி.இந்த முயற்சி டிஜிட்டல் வர்த்தகத்தை ஜனநாயகப்படுத்துவதாக அமையும்; தயாரிப்பு மற்றும் சேவைகள் இரண்டிலும், ஓ.என்.டி.சி., செயல்படும்.ஓ.என்.டி.சி., இயங்குதளம், வாங்குவோர் மற்றும் விற்போர், அவர்கள் எந்தப் பயன்பாட்டைப் பயன்படுத்தினாலும், ஆன்லைனில் ஒருவரையொருவர் இணைக்கவும் பரிவர்த்தனை செய்யவும் அனுமதிக்கும்.
அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் அவர்களது தளம் மூலம் அதிக விற்பனை செய்பவர்களையும், அதிகப்படியாக கமிஷன் கொடுப்பவர்களையும் விற்பனை தளத்தில் முதன்மையாக காட்டும்படி அவர்களது கணினிகளின் ‘அல்கரிதம்’ அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் சிறிய வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். இதை தவிர்ப்பதே ஓ.என்.டி.சி.,யின் நோக்கம்.
இங்கே நுகர்வோர் என்ன விரும்புகிறார், வாங்குபவர்களுக்கு எவ்வளவு அருகில் இருக்கிறார், விலை, டெலிவரி நேரம் ஆகியவற்றை பொறுத்து விற்பனையாளர்களை, வாங்குபவர்களுக்கு அடையாளப்படுத்தும். இதனால் எந்த விற்பனையாளரும் பாதிக்கப்படமாட்டார்கள். டெல்லி, பெங்களூரு, போபால், ஷில்லாங், கோவை ஆகிய நகரங்களில் உள்ள 150 விற்பனையாளர்களை இது முதலில் அறிமுகப்படுத்தப்படும்.’இன்போசிஸ்’ நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நிலகேனி இந்த முயற்சியின் ஆலோசகர்களில் ஒருவ

%d bloggers like this: