வெயில் காலத்தில் அதிகரிக்கும் முடி உதிர்வு – என்ன செய்யலாம்?

வெயில் காலம் வந்ததும் கூடவே உடல் நலப் பிரச்சனைகளும் சருமப் பிரச்சனைகளும் வந்து விடும்.

முடியை பாதுகாப்பது ஏன் அவசியம்

நம் உடலில் இருக்கும் மென்மையான தோல்களுள் தலையில் உள்ள தோலும் அடங்கும். இதற்கு ஸ்கால்ப் என்று பெயர். முகத்தில் எண்ணெய் சுரப்பது போல அதிக எண்ணெய் சுரக்கக்கூடிய தோல் இது தான். அதிக வெயில் ஸ்கால்ப் பகுதியில் படும் போது ஸ்கால்ப் நேரடியாகப் பாதிக்கப்படும். ஸ்கால்பில் சுரக்கிற வியர்வை கூட

அங்கிருக்கிற எண்ணெய் காரணமாக வெளியேறாமல் பாக்டீரியா தொற்றாக, அதிகப்படியான எண்ணெய்யாக, அழுக்காக தலையில் தங்கிடும்.
முடி உதிர்வு

ஸ்கால்ப் பாதிக்கப்படுவதனால் அரிப்பு, செதில்கள் ஏற்படும். இதனால் பூஞ்சை தொற்று, பாக்டீரியா தொற்று, வெள்ளை பரு, பொடுகு போன்றவை ஏற்படும். இவை எல்லாம் சேர்ந்து முடி உதிர்வை ஏற்படுத்தும்.

எப்படி பாதுகாப்பது?

வெயில் காரணமா வீக் ஆன ஸ்கால்ப் பகுதியைச் சரியாக்க எளிமையான வழிமுறை இது தான். கொஞ்சம் வெந்தையம் எடுத்து தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். அதனுடன் தேங்காய் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். குளிப்பதற்கு முன்பு தலையை நனைத்து வெந்தையம் மற்றும் தேங்காய் கலவையைத் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் தலையில் தேய்த்துக் குளித்தால் முடி சுத்தமாகவும் ஷைனாகவும் மாறிவிடும்.

ஒரு வேலை வெயிலில் முடி அதிகமாக வறண்டுவிட்டால் தலையில் எண்ணெய்க்குப் பதிலாக சீரம் உபயோகியுங்கள். முடியை அவ்வப்போது சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

வெயிலில் செல்லும் போது தொப்பி அல்லது ஸ்கார்ஃப் அணிந்து கொள்ளுங்கள். ஹேர் கலரிங், ஸ்மூதிங் போன்றவற்றை வெயில் காலத்தில் தவிர்க்கவும்.

%d bloggers like this: